மே 27, 2024 • Makkal Adhikaram
கடவுள் மறுப்பாளர் கொளத்தூர் மணி திராவிட கழகத்தை சேர்ந்தவர் இவருக்கு மத நம்பிக்கைப் பற்றி பேச என்ன தகுதி ?
கடவுள் இல்லை என்பவனுக்கும், இருக்கிறது என்பவனுக்கும், நம்பிக்கை வேறுபட்டது. அதுதான் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது .கடவுளை மட்டும் கண்டால் அங்கே கல் என்ற சிலை தெரியாது. இங்கே மணி உங்கள் மேதாவித்தனம் எல்லாம் இறைவனிடம் வேலைக்காகாது. உங்களுடைய கருத்துக்கள் முதலில் உங்கள் வீட்டுக்குள் ,உங்கள் சொந்த பந்தத்திற்குள் ஆரம்பிங்கள். பிறகு வெளியில் பேசலாம்.
மக்களை முட்டாளாக்க அறிவாளிகள் போலவும், மேதாவிகள் போலவும் பேசிக் கொண்டிருக்கும் இந்த கூட்டம், இப்போது உச்ச நீதிமன்றத்திற்கு போய் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஜீவசமாதியில், அவர் ஜீவ சமாதியான நாளை பக்தர்கள் கொண்டாடும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வணங்கி வழிபாடு நடத்துகிறார்கள். அங்கே அன்னதானம் நடக்கிறது. அந்த அன்னதானம் சாப்பிட்ட இலைகளின் மேல் பக்தர்கள் உருண்டு வழிபடுகின்றனர்.
இது உச்சநீதிமன்றம் அளித்த தடையின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது ஆனால் நீதிபதி சுவாமிநாதன் அந்த தடையை அவருடைய தீர்ப்பில் ரத்து செய்துள்ளார். இந்துக்களின் மூடநம்பிக்கையாகவோ அல்லது மத நம்பிக்கையாகவோ அல்லது தெய்வ நம்பிக்கையாகவோ, மக்களுக்கு இருக்கலாம். ஆனால் இதே மூடநம்பிக்கை, தெய்வ நம்பிக்கை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களில் உள்ளது .அதை ஏன் இந்த அறிவாளிகள் அங்கே போய் சொல்வதில்லை .
இந்துக்கள் என்றால் இவர்களுக்கு என்ன ஏமாந்தவர்களா? அல்லது இந்து கடவுள் என்றால் இவர்களுக்கு இழிவுபடுத்தும் வேலையா? இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கே கேள்வி கேட்பார்கள் என்று இவர்களுக்கெல்லாம் தெரியும் .இப்போது கேள்வியும் கேட்பார்கள் என்பதை இந்த அறிவுக் கொழுந்துகள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் மத நம்பிக்கையில் தலையிட உரிமை இல்லை. என்னுடைய நம்பிக்கை எச்சிலை மீது நான் உருளுகிறேன். உனக்கு என்ன அதற்கு ? உங்களை கூப்பிட்டார்களா?
கடவுளுக்கு தேவை நல்ல மனம் .கடவுளுக்கு தேவை பக்தனின் இறை நம்பிக்கை. கடவுளுக்கு தேவை ஆடம்பரம் அல்ல, கடவுளுக்கு தேவை இறுமாப்பு அல்ல, கர்வம் அல்ல, மேதாவி அரசியல் பேச்சு அல்ல, கடவுளுக்கு தேவை எளிமை. கடவுளுக்கு தேவை உண்மையான பக்தி. அந்த உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இந்த எச்சிலை மீது உருள முடியும். இப்போதாவது இந்த உண்மை எல்லாம் மணிக்கு தெரியுமா ?