சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்று நாட்டில் நீதிபதிகள் இருந்தால், ஊழல்வாதிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற முடியும்.. !

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் இந்த சமூகத்தின் மிகப்பெரிய கொடிய நோய் என்று சொல்லக்கூடிய கேன்சரை போன்று இன்று ஊழல்வாதிகள் அரசியலில் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பக்கபலமாக இருப்பது சட்டத்தின் ஓட்டைகள், மற்றொரு பக்கம் நடிப்பு அரசியலும், ரவுடியிசமும் கலந்து ஒரு ஆதிக்க சக்தியாக இன்றைய அரசியல், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, இந்த ஓட்டைகளை வைத்து, லஞ்ச ஒழிப்புத்துறை, நீதிமன்றம் இவையெல்லாம் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, இவர்கள் என்ன தவறுகள் செய்தாலும், என்ன ஊழல்கள் செய்தாலும், அதிலிருந்து தப்பி விடுகிறார்கள் .

அப்படி தப்பிய அமைச்சர்களில் தற்போதைய திமுக அமைச்சர்களான கே.கே. எஸ். எஸ். ஆர் .ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இவருடைய சொத்துப் குவிப்பு வழக்கிலிருந்து, கீழ் நீதிமன்றங்களில் இருவரையும் விடுவிக்கப்பட்டதாக தீர்ப்பு வெளியானது .இந்த தீர்ப்பு வெளியான நாளிலிருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மூன்று நாட்கள் தூங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 அப்படி என்றால் இவர் ஒரு மனசாட்சி உள்ள நீதிபதி மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது. தவறு பண்ணி அவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் சட்டத்தின் பிடியிலிருந்து, ஆட்சி, அதிகாரம் கையில் வைத்துக் கொண்டு ஊழல்வாதிகள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட உதாரணம் வேறு எதுவும் இல்லை. மேலும், சட்டத்தை வளைத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள். இது ஒரு புறம் என்றாலும், பத்திரிகைகள் இவர்களை சமுதாயத்தில் நல்லவர்களாகவே ,மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதுதான் மிகப்பெரிய வேதனை .

இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு தான் தற்போது சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது .இது மக்களின் வரிபணம் கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசியல்வாதிகளும் ,அரசியலும் எப்படி நீதிமன்றத்தை வளைத்துக் கொண்டிருக்கிறதோ, அதேபோல்தான் ,இந்த பத்திரிகை துறையையும் வளைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் கொள்கை முடிவாக எந்தெந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்பது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எடுக்கின்ற ஒரு கொள்கை முடிவாக தான் இதுவரை இருந்து வருகிறது.

 இதிலிருந்து பத்திரிக்கைத்துறை ஒரு சுதந்திரமான துறையாக மாற்றினால் தான் ,குறிப்பிட்ட சில பத்திரிகைகள் அரசியல்வாதிகளின் பின்னால் நின்று கொண்டு ,அவர்களுக்கு ஜால்ராவாக மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இதனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதைப்பற்றி தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகையில் பல கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் வெளியிட்டு வருகிறேன் .ஆனால் இதுவரையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இல்லை .மேலும், இந்த விஷயம் குறித்து விரைவில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் .அப்போதாவது ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள், இந்த பத்திரிக்கை துறையை காப்பாற்ற சமூக நீதி வழங்க வேண்டும் .

இவர்கள் பத்திரிக்கையை தரம் பிரிக்காமல், அதனுடைய தகுதி தெரியாமல், இது அரசியல் கட்சி சார்ந்ததா ? அல்லது வியாபார நோக்கம் சார்ந்ததா ? அல்லது எதற்கும் தகுதியற்றதா ? இப்படி பல குப்பைகளை எல்லாம்  ஒன்றாக சேர்த்துக் கொண்டு, தகுதியான பத்திரிகைகளை புறக்கணிக்கிறார்கள். இந்த தகுதியான பத்திரிகைகள் ,மேலும் மக்களுக்கு சேவை செய்ய ,அது சமூகத்தில் போராடி பத்திரிக்கை நடத்த வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் இருந்து இவரைப் போன்ற மனசாட்சி உள்ள நீதிபதிகள், இதற்கு நல்ல தீர்ப்பை வழங்கி சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு வழங்க வேண்டும் .

மேலும், பழைய சட்டங்களால் அதாவது பழைய பத்திரிகையின் விதிமுறைகளால் இந்த சர்குலேஷன் என்ற விதியை பயன்படுத்தி பத்திரிக்கை துறையில் ஊழல்வாதிகளையும், சுயநல அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட் நிறுவன கம்பெனி பத்திரிகைகள் பின்புலமாக இருந்து கொண்டு, இது நாள் வரை அவர்களை காப்பாற்றி வருகிறது. இதிலிருந்து இதையெல்லாம் வெளியேற்ற வேண்டும். மக்களின் வரிபணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஒரு பக்கம் அதிகாரிகளுக்கு இதனால் கமிஷன் ,அரசியல் வாதிகளுக்கு கமிஷன், இதிலிருந்து பத்திரிக்கை துறையை காப்பாற்ற ஒரு நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் .

மேலும், உயர் நீதிமன்றம் இப்படி தாமாக முன்வந்து, தற்போது அமைச்சர்களாக இருக்கின்ற தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ,ஆகியோர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு கீழ் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இப்படி பல விஷயங்கள் நாட்டில் நீதிமன்றம் எடுக்க முன்வந்தால், இன்று அரசாங்கம், அரசியல்வாதிகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், காப்பாற்றப்படுவார்கள். மேலும், மக்களுக்கான கடைசி ஆயுதமாக சட்டம் உறுதுணை என்பதை நிரூபிக்க முடியும்.

 தவிர ,இவர் சமூகத்தில் சட்டத்தின் மாண்பு எவ்வாறு காப்பாற்றப்பட வேண்டும்? பணத்திற்காக மனிதன் வாழ்வது ஒரு வாழ்க்கை அல்ல. அவன் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தமான வரலாறுதான் மனித வாழ்க்கை என்பதையும், இந்த நீதித்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும், சமூகத்திற்கும் தமது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். அவருடைய நேர்மைக்கு என்றும் இறைவன் துணை நின்று, அவருடைய சமூகப் பணி தேசத்திற்கு ஒரு அர்ப்பணிப்பு என்பதை மகிழ்ச்சியுடன் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *