சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கும்,வேதனைக்கும், உள்ளானார்கள் என்பதை மறுக்க முடியாது .ஒரு பக்கம் வாழ்வாதாரம் இழப்பு, மற்றொரு பக்கம் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து உபயோகப்படுத்தக்கூடிய எல்லா பொருட்களையும் நாசப்படுத்தி விட்டது .இது தவிர, அவர்கள் உடுத்த உடை, உணவுக்கு பிறரை எதிர்பார்த்து வாழும் நிலைமைக்கு தள்ளிவிட்டது.இதில் ஒரு பக்கம் ஆட்சியாளர்களை வசைப்பாடி வருகிறார்கள். மற்றொரு பக்கம் ஆட்சியாளர்கள் சரியான நிர்வாகத்தை ஏற்படுத்தாமல் இருந்ததால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இதற்கு ஒரு தீர்வு காணவில்லையே என்ற மக்களுடைய ஆதங்கம் நன்றாகவே தெரிந்தது . பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே நிவாரண உதவிகள் அரசாங்கம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் பத்தாயிரம் இந்த வெள்ள நிவாரண தொகையாக கொடுக்க வேண்டும் .அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மனித வாழ்க்கை நன்றாக சுதந்திரமாக வாழ்ந்து விட்டு, திடீரென்று அவர்களை ஒரு கூட்டுக்குள் அடைப்பது போல் கொண்டு வந்து பல இடங்களில் அடைத்து விட்டால், அந்த மக்கள் படும் வேதனை யாராக இருந்தாலும், உண்மையிலே அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த அளவில் இந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த அரசியல் வெறுப்பு மக்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்க தீர்மானத்திற்கார்களா? இந்த ஐந்து நாள் போராட்ட வாழ்க்கை ஆட்சியாளர்கள் மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாது. இதை சரி செய்ய ஆளும் கட்சியான திமுக இந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறது? சிலர் இதையே கொஞ்ச நாள் போனால் இந்த மக்கள் மறந்து விடுவார்கள். மேலும், எந்த அரசியல் கட்சிபணம் கொடுக்கிறதோ ,அவர்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று குறிப்பிட்டு சதவீத மக்கள் பேசி வருகின்றனர்.
ஆனால், தற்போது மனதளவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, ஆளும் திமுகஇந்த மக்களுக்கு உதவி செய்யாவிட்டால் நிச்சயம், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.