ஒவ்வொரு நாளும் உணவு என்பது எப்படி தயாரிக்க வேண்டும் ?மக்கள் அந்த உணவகத்தை மீண்டும் வந்து ருசித்து சாப்பிட்டு, பாராட்ட வேண்டும் ,அவர்கள் நம்முடைய வாடிக்கையாளராக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இன்றைய தமிழ்நாட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் விலைவாசி உயர்வு அதனால் ,தர மற்ற பொருட்களை உணவகத்தில் பயன்படுத்தி பணம் பார்க்கும் நோக்கத்தில் மட்டுமே உணவக முதலாளிகள் இருந்து வருகிறார்கள் .இது ருசி மட்டுமல்ல, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை .இதனால் ,பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இவர்களுக்கு பணத்தை கொடுத்து நோயை வாங்கிக் கொள்கிற உணவு தயாரித்தால், எப்படி இதை ஏற்றுக் கொள்வது?
ஒரு பக்கம் எண்ணெய் வகைகளில் கலப்படம் .அந்த எண்ணெயில் எவ்வளவு தான் வடை, போண்டா சுட வேண்டும் ?அதற்கு மேல் அது உபயோகப்படுத்த கூடாது என்ற ஒரு மனசாட்சி இருந்தும் பணத்திற்காக அந்த எண்ணெயிலே செய்தால், மக்களுக்கு நோய் வராமல் என்ன வரும்? இப்படி இது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் , இது போன்ற விஷப் பூச்சிகள் விழுந்தாலும் ,அஜாகிரதையாக இருப்பது ,அதையே பரிமாறுவது, இவையெல்லாம் பண ஆசை பிடித்து ஹோட்டல் உணவகங்கள் நடத்துபவர்கள் அலைகிறார்கள் . மேலும்,
40, 50 ஆண்டுகளுக்கு முன் ஓட்டல் உணவகங்களில் சாப்பிடுவதற்கு எவ்வளவு பிரியமாக இருக்கும்? வீட்டில் கூட அதுபோல் இருக்காது. அந்த அளவுக்கு மக்களை ஈர்க்கும் அளவிற்கு ஓட்டல் உணவகம் இருந்தது. இப்போது மக்களில் தெரிந்தவர்கள், ஹோட்டல் உணவகங்களில் சாப்பிடுவதற்கே பயப்படுகிறார்கள். வேறு வழியில்லை. விதியில்லை என்று தான் சாப்பிட வேண்டி இருக்கிறது .அப்படி பார்த்து ,பார்த்து சாப்பிட்டாலும் கூட ,இது போன்ற மக்கள் சாப்பிட்டதில் இது போன்ற பூரான் போன்ற விஷப்பூச்சிகள் உணவில் இருந்தால் ,யார் தான் சும்மா இருப்பார்கள்? இதற்கெல்லாம் கடும் சட்டம் கொண்டு வராமல் இதை கட்டுப்படுத்த முடியாது .
ஹோட்டல் உணவகங்கள் நடத்துபவர்கள் பணம் மட்டுமே அவர்களுடைய குறிக்கோளாக இருக்கிறது .பொது மக்களின் உடம்பைப் பற்றி கவலைப்படுவதில்லை. எப்படி கொடுத்தாலும் அவர்கள் தலையெழுத்து சாப்பிட தான் போகிறார்கள் என்று தான் அவர்கள் நினைப்பில் இருக்கிறார்கள் .அந்த நிலை மாற வேண்டும். ஹோட்டல் உணவு வகைகள் வீட்டில் தயாரிக்கும் உணவுகளை விட தரமானதாக ,சுகாதாரமானதாக, தூய்மையானதாக இருக்க வேண்டும் .
அப்படி எப்போது கொடுக்கிறார்களோ அப்போதுதான் ஹோட்டல் உணவகங்களின் பேரில் நம்பிக்கை வரும் . இந்த பூரான் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாப்பிட்ட நபர் உடனே அந்த பகுதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு போன் செய்திருக்கிறார். அவரிடம் சரியான பதில் இல்லை. உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து உள்ளார். அதற்குள் கடையை மூடி இருக்கிறார்கள்.