செய்தியாளர்கள் அடையாள அட்டை (அரசு அடையாள அட்டை)வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களா? அல்லது செய்தியாளர்களா?சமூக நலன், தேச நலன் இன்றி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் என்று சொன்னால் மக்களுக்கு என்ன பயன் ? அதில் என்ன செய்தாய் ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 07, 2024 • Makkal Adhikaram

நாட்டில் ஐடி கார்டு பாக்கெட்டில் இருந்தால் போதும், நானும் பிரஸ் ,நானும் செய்தியாளர், நானும் பத்திரிகையாளர். இவை எல்லாம் எதற்காக, இந்த வேஷங்கள்? தற்போதைய பத்திரிக்கை துறை கடினமான பணியாக  உள்ளது. ஆனால் ,இதில் வேலையே செய்யக்கூடாது. வருமானமும் வரவேண்டும். எவனோ ஒருவன் பத்திரிக்கை நடத்துவான், அதை வைத்து நாமெல்லாம் நோகாமல் அடையாள அட்டை வாங்கிக் கொண்டு, வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றலாம். அல்லது மீடியேட்டர் வேலை பார்க்கலாம். கமிஷன் வேலை பார்க்கலாம்.

இது தவிர, சிபாரிசு வேலை பார்த்து பணம் சம்பாதிக்கலாம். இதற்கெல்லாம் பத்திரிக்கையை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள். இந்த பத்திரிக்கை துறையில் இவர்கள் செய்த வேலை என்ன? இவர்கள் கொடுத்த செய்திகள் என்ன ?இவர்களுடைய உழைப்பு என்ன? இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், பத்திரிகை செய்தியாளர் என்ற பந்தாவில் சுற்றி திரியும் போலிகள் தான் அதிகமாக உள்ளது. 

இவர்களால் தகுதியான பத்திரிகைகள் கூட செய்தித் துறையில் இன்றைய  கார்ப்பரேட் பத்திரிக்கைகள் அரசாங்கத்திடம் தவறான தகவல்களை கொடுத்து, தகுதியான பத்திரிகைகளின் செய்திகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தும், அதற்கான அங்கீகாரமும் சலுகை, விளம்பரங்களும் கிடைக்காமல் வளர்ச்சியை பாதித்து வருகிறது .இந்த பாதிப்பு மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் வாழ்க்கையின் தேவைகளுக்காக மக்கள் போராட வேண்டி இருக்கிறது. அந்தப் போராட்டங்கள் பற்றிய உண்மைகள் மக்களுக்கு தெரியாமல்,ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் மறைத்து வருகிறது.மேலும், 

எந்த நோக்கத்திற்காக ?அரசியல் இருக்க வேண்டுமோ, அது வெளிப்படை தன்மையில்லாமல் இருப்பது தான் ,இந்த சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு. இதை சரி செய்ய சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பு பத்திரிக்கை துறைக்கு உள்ளது. அப்படி வெளிப்படையாக சுட்டிக்காட்டக்கூடிய பத்திரிக்கைகளுக்கு இன்று வரை தமிழக அரசு, தவறான விதிமுறைகளை வைத்து தட்டி கழித்து வருகிறது. பத்திரிக்கை துறையில் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .

அப்படி இருந்தும் தகுதியான பத்திரிகைகளுக்கு, இணையதளத்தில் அதன் வளர்ச்சி மற்றும் செய்திகளை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்த்தால் கூட, இதில் அரசியல் தலையீடு தொடர்வதால், இப் பிரச்சனை குறித்து மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக தெரிவித்தும், அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை என்பது பத்திரிக்கை துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் என்பதை செய்தித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் .மேலும்,செய்து துறை அதிகாரிகள் இதுவரை, 

எத்தனை பத்திரிகைகள் ?மக்களிடம் பயனுள்ள செய்திகளை கொண்டு சென்றுள்ளது? இதில் சலுகை ,விளம்பரங்கள் வாங்கக்கூடிய பத்திரிகைகள் எத்தனை ?சலுகை, விளம்பரங்கள் வாங்காத பத்திரிகைகள் எத்தனை ? இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையாக செய்தித்துறை அதிகாரிகள் பதில் சொல்ல முடியுமா?

விவாதம் என்ற பெயரில் மக்கள் நலனுக்காக, உண்மைகளை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகாரர்களைப் போல், இந்த கூட்டங்கள் பேசிக் கொண்டிருக்கும். அதாவது, சுயநல அரசியல் என்பது இங்கே திருடனுடைய நோக்கமும், கட்சிக்காரனுடைய நோக்கமும் ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் ,( மக்கள்) திருடனுடைய நோக்கம் வீட்டுக்காரன் எப்போது தூங்குவான்? அதுதான் அவனுக்கு தேவை. ஆனால், மக்களுக்கு தேவை அதுவல்ல, திருடனிடம் எப்படி பாதுகாப்பாக இருப்பது? திருடனிடம் இருந்து நம்முடைய குடும்பத்தையும், தொழிலையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது ? இந்த மனநிலையில்உழைக்கும் மக்கள் எண்ணம்.ஆனால், 

உழைக்காமல் ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பது, அடியாட்கள் கூட்டத்தை காண்பித்து கொண்டு ,சமூக விராத செயல்களை செய்து கொண்டு, ஏதோ ஒரு கட்சியில் கொடியைப் பிடித்துக் கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டு, நானும் பத்திரிக்கையில் செய்தியாளன் என்று (ஏதோ ஒரு பத்திரிகையின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் சொல்வது போல) தன்னை அந்தப் பகுதியில் மிகப்பெரிய ஆளாக பேசிக் கொண்டு, காட்டிக்கொண்டு இருப்பவர்களையும், இந்த போலி பத்திரிகைகள், சுய லாபங்களுக்காக அரசியலில் பதவிக்கு அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு, பொய்யான செய்திகளை மக்களிடம் பரப்பிக் கொண்டு, அரசியலை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளும், இந்த வேலையை செய்கிறது. இதனால், அரசியல் தெரியாத அப்பாவி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ,அரசியல் தெரிந்தவர்கள் கேள்வியோ, நீ இந்த சமூகத்திற்கு என்ன செய்தாய்? நாட்டுக்கு என்ன செய்தாய்? ஊருக்கு என்ன செய்தாய்? இதுதான் அவர்களின் கேள்வி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *