ஏப்ரல் 30, 2025 • Makkal Adhikaram

சேஷாத்ரி சுவாமிகள் காலை 5 மணிக்கு பூஜை அறையில் நுழைந்து, கதவை தாலிட்டுக் கொண்டால், பகல் ஒரு மணிக்கு, இரண்டு மணிக்கு தான் வெளியே வருவார். சேஷாத்திரி எந்நேரமும் அருணாச்சலேசா, சோணாத்ரிநாதா என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார். விடிய, விடிய துர்கா சூக்தத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்.
அண்ண ஆதாரத்தை மறந்து விட்டார். உறக்கத்தை துறந்து விட்டார் .சிறிய தந்தையும், சிற்றென்னையும் கவலை கொண்டனர். சேஷாத்திரி பட்டினி கிடந்து, கண்விழித்து இப்படி ஓயாமல் பூஜை செய்தால், அப்புறம் உடம்புக்கு ஏதாவது வந்துவிடும், வேண்டாம் அப்பா, உன் வயதுக்கு இத்தனை கடுமையான உபாசனை கூடாது. குறைத்துக் கொள் என்று அடிக்கடி கூறினார்கள் .
வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகமாகவே, ஆலயங்களில் பொழுதை கழிக்க தொடங்கினார். சேஷாத்திரி காலையில் ஸ்ரீ வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அமர்ந்து ஜெபம் செய்வார். மாலையில் காமாட்சி கோயிலை சுற்றி, சுற்றி வருவார். சன்னதியில் அமர்ந்து மூக பஞ்ச சதியை கண்ணீர் மல்க பாராயினும் செய்வார். அம்பாளுக்கு நமஸ்காரம் செய்தபடியே இருப்பார் .சில சமயம் இரண்டு நாட்கள் சேர்ந்தார் போல் வீட்டுக்கு வரவே மாட்டார்.
ராமசாமி ஜோசியர் ஊரெல்லாம் தேடி ,ஏதாவது ஒரு தின்னையிலோ, கோயில் மண்டபத்திலோ, அவரை கண்டுபிடித்து நல்ல வார்த்தைகள் கூறி வீட்டுக்கு அழைத்து வருவார். சிறிய தந்தையின் அன்பு கட்டளைக்கு கீழ்ப்படிந்து இரண்டு, மூன்று நாட்கள் வீட்டில் தங்கி இருப்பார். மறுபடியும் ஊர் சுற்ற கிளம்பி விடுவார். அழுக்குத் துணி, எண்ணைய் காணாத தலைமுடி, தாடி வளர்ந்த முகம், நெற்றியில் பெரிய குங்குமப்பூச்சு இந்த கோலத்துடன் வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டு, சித்த பெருமை பிடித்தவன் போல் இளைஞர் சேஷாத்ரி வீதிகளில் திரிந்து கொண்டிருப்பார்.

பார்த்தவர்கள் மனம் பதறி துடித்தார்கள். அவர்கள் வயிறு பற்றி எரிந்தது. உறவினர்களும், ஊரில் உள்ளவர்களும், ராமசாமி ஜோசியரிடம் வந்து சேஷாத்ரியை பற்றி ஓயாமல் ஏதாவது கோள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். வர, வர மோசமாய்ண்டே இருக்கான். யார் போனாலும், அவ காலிலே விழுந்து நமஸ்காரம் பண்றான். சூரியனைப் பார்த்து கும்பிடுறான். நீர், காக்கை, போல அடிக்கடி குலத்தில் மூழ்கி எழுந்திருக்கிறான்.
வாயிலே ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறான். நேத்து காமாட்சி கோயிலிலே எனக்கு மானமே போய்டுத்து என்று உறவினர் ஒருவர் கூறி, வருத்தப்பட்டு கொண்டார். ஆமாம் நான் கூட பார்த்தேன். முந்தாநாள் ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு, என்னமோ ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான். என்னடா சேசு பண்ணிட்டு இருக்கே என்று கேட்டேன்.
கர்மம் தொலைவதற்கு ஜெபம் பண்றேன் மாமா நான், என்ன ஜெபம்? பண்றேன்னு கேட்டேன் .உடனே காமோ கார்ஷித் என்ற மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சொல்லி உட்கார வைத்து, அந்த மந்திரத்தின் அர்த்தத்தை ரொம்ப தெளிவாக விளக்கினான். அடேங்கப்பா என்ன படிப்பு? என்ன ஞானம்? என்று நான் அப்படியே திகைத்துப் போயிட்டேன் .மாமா இதுவரைக்கும் நான் இந்த மந்திரத்தை லட்சம் தடவை ஜெபித்துவிட்டேன். இன்னும் அரை லட்சம் பாக்கியிருக்கு, நீங்களும் சொல்லுங்க. அப்போதான் கர்மம் தொலையும், கர்மம் தொலைஞ்சாதான் மோட்சத்துக்கு போக முடியும்.

மோட்சத்துக்கு போகணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா? என்று கேட்டான். ரொம்ப நல்லா பேசுறான், அவன் பைத்தியம் இல்லை. வயதுக்கு மீறின ஞானம் வந்துடுத்து, வேற ஒன்னும் இல்லை என்று குடும்ப நண்பர் ஒருவர் ஜோசியருக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். சிறுவன் ஒருவன் ஓடிவந்து மாமா, மாமா வந்து பாருங்க, வரதராஜ பெருமாள் புறப்பாடாகி வரார்னு நம்ம சேஷா வீதியிலே இருக்கிறான் எச்சில் இலைகளை எல்லாம் எடுத்து ஓரமா போட்டுண்டு இருக்கான் .
தனக்கு ,தானே என்னமோ பேசிண்டு இருக்கான். எல்லாரும் பார்த்து சிரிக்கிறாய் என்று சொல்லி ராமசாமி ஜோசியரை அழைத்தான் .அவர் தலையில் அடித்துக் கொண்டார் .உலகத்துக்கு ஓர் அதிசய பிள்ளையாய் இருக்க வேண்டியவனின் கதி ஊர் சிரிக்கும்படி ஆகிவிட்டதே என்று நினைத்து வேதனை பட்டு போனார்.
சேஷாத்திரி ஏதோ பிதற்றுகிறான் என்று நினைத்த ராமசாமி ஐயர் தேவதைகள் மட்டும் போகிறார்களா? கந்தர்வர்கள் போகவில்லையா? என்று ஏளன நகைச்சுவையுடன் கேட்டார். ஓ, கந்தர்வர்களும் போராளளே, சிலருக்கு இறக்கையும் இருக்கு, ரொம்ப அழகா இருக்கா, கந்தர்வ காணம் கேட்க, தேனாய் இருந்தது. என்ன ராகம் பாடினா? பிலஹரி அற்புதமாய் இருந்தது. உனக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அவா பாடிண்டு போனா, உன் காதல மட்டும் தான் விழுமா? ஏன் என் காதில் விழவில்லையே ?
அதெல்லாம் விழாது .எல்லாத்தையும் துறந்துட்டு சுதந்திரமா, தன் உண்மையான நிலையிலே இருக்கிறாவா காதுல தான் விழும் என்று கூறிவிட்டு போய்விட்டார்.
சேஷாத்திரிக்கு பைத்தியம் முற்றிவிட்டது என்று தீர்மானித்து விட்டார் ராமசாமி .மேலும் ,சேஷாத்திரி ஆகாயத்தில் கந்தர்வ ராகம் கேட்ட செய்தியை அவர் நான்கு பேரிடம் சொல்ல, அது ஊரெல்லாம் பரவ, சேஷாத்ரிக்கு மூளை குழம்பி விட்டது என்று காஞ்சிபுரம் முழுவதும் பேச்சு பரவி விட்டது.