சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 6வது ஆண்டு விழா.

சமூகம் ட்ரெண்டிங் மாவட்டம் ரிசன்ட் போஸ்ட்

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் 6வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத் தலைவர்கள்.சொக்கு வள்ளியப்பா,. தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் தலைவர்.வள்ளியப்பா தலைமையேற்று சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். அனைவரையும் வரவேற்ற கல்லூரியின் முதல்வர் காதர்நாவஷ் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். கல்லுரியின் துறைசார்ந்த நடவடிக்கைகள், மற்றும் பேராசிரியர்களின் பங்களிப்பு, மாணவ மாணவிகளின் ஆராய்ச்சிகள், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் சாதனைகள், என கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டார்.

டிசிஎஸ் நிறுவனம் கல்வி இடைமுகத் திட்டத்தின் மண்டலத் தலைவர் கணேஷ்திருநாவுக்கரசு மற்றும் ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினகளாக கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்புரையாற்றினார்கள், மேலும் பல பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும், சிறந்து விளங்கிய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு துறை வாரியாக பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தனர்.  

இந்த விழாவில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், இ.ஜெ.கவிதா, பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *