திமுக எந்த காலத்தில் தவறுகளை குற்றங்களை ஒத்துக் கொண்டுள்ளது? எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். எங்களுக்கும் ஜாபர் சாதிக்கும், எந்தவித தொடர்பும் இல்லை. இதை அமைச்சர் ரகுபதி தனது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கிறார். குற்றவாளிகள் எப்போது குற்றத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்? சாதாரண குற்றவாளியே ஒத்துக் கொள்ள மாட்டான் . விசாரணையில் ஆதாரங்கள், சாட்சிகள் இருந்தால் மட்டுமே அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்க முடியும் அப்படி இருக்கும்போது சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி ஜாபர் சாதிக் அவ்வளவு எளிதில் ஒத்துக் கொள்வானா? மேலும்,
அரசியல் கட்சி குற்றவாளி தன்னை எப்போதுமே ,நிரபராதி என்று பேசிக்கொண்டு இருப்பான். இதற்கு காரணம் ,மக்களின் சுயநலமும் ,கிராமங்களில் 50 ,100 குடிகாரர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு பஞ்சாயத்து குரூப்புகள் பாட்டிலை வாங்கி கொடுத்து விட்டால், என்ன சொன்னாலும், அந்த குடி பைத்தியங்கள் அவர்களுக்காக வக்காலத்து வாங்கி பேசிக் கொண்டிருக்கும் .அதே போல் தான் ,இந்த கட்சி குடி பைத்தியங்கள், இப்படி தான் பேசிக் கொண்டிருக்கும்.
மேலும், இவர்கள் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களில் தன்னை நிரபராதி என்று பேசிவிட்டால், மக்கள் நம்பி விடுவார்கள். என்று இப்போதும் இவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் அதிமுக ,திமுகவின் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதனால் எத்தனை ஊடகங்கள் உங்களுக்காக வக்காலத்து வாங்கினாலும், மக்கள் மன்றத்தில் அது எடுபடாது .
மேலும் மக்கள்தான் தமிழ்நாட்டில் அதுவும் உழைத்து சாப்பிடுபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் .ஊரை ஏமாற்றி சாப்பிடுவார்கள் அதிகரித்து விட்டார்கள். கட்சி என்பது சமூகத்தை ஏமாற்றவும், பொது சொத்துக்களை கொள்ளை அடிப்பதற்கும், மக்களின் வரிப்பணத்தை சுரண்டுவதற்கும் பொய் கணக்குகளை எழுதி சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும், உள்ளாட்சி உள்ளது. மக்கள் எவ்வளவு நாளைக்கு ஏமாந்து கொண்டிருப்பார்கள்?
அமைச்சர் ரகுபதி அது அதிமுக காலத்தை போட்ட வழக்கு. திமுக காலத்தில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை, அவர் பரிசுத்தமானவராக இருந்தார். அதனால் அவருக்கு திமுகவில் அயலக அணி பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள். இப்போது திருடன் மாட்டிக் கொண்டான் . இங்கே பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் இதைப் பற்றி கேள்வி கேட்கும் போது, பதில் சொல்ல முடியாமல் திணறும் திமுக , விசாரணை வளையத்திற்குள் எத்தனை பேர் சிக்குவார்களோ என்பது தெரியவில்லை .அதனால், அமைச்சர் உத்தரபிரதேசத்தில் இருந்தது, குஜராத்தில் இருந்தது, அங்கே எல்லாம் பிடிக்கவில்லை .இங்கே தான் பிடிக்கிறார்கள். அப்படி என்றால், இவர்களே அந்தத் தப்பை ஒத்துக் கொள்கிறார்கள்.
மேலும் ,இவர் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா மீது குட்கா ஊழல் உள்ளது. அவர்கள் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் நீதிமன்றத்தில் சென்று எடுத்தோம் என்கிறார். தப்பில்லை எடுங்கள். குற்றவாளி எந்த கட்சியில் இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். மேலும், ஜாபர் சாதிக் குற்றவாளி என்று அவனே ஒப்புக் கொண்டிருக்கிறான். அவனே மங்கை என்ற படத்தை இந்த பணத்தில் தான் நான் எடுத்தேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறான். அப்படி இருக்கும்போது குற்றவாளியே சொன்னால் கூட நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? தவிர,
கடவுளே வந்து சொன்னால் கூட ஒப்புக்கொள்வீர்களா? எந்த காலத்தில் திமுக உண்மையை ஏற்றுக் கொண்டது? எந்த காலத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டது? வாய் இருக்கிறது ஜால வித்தை காட்ட, திறமை இருக்கிறது எப்படியும் பேச ,இதுதான் திமுகவின் அரசியலா? பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று ,எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவது ,ஆளுங்கட்சியாக வந்தவுடன் மறந்து விடுவது ,ஆளுங்கட்சியாக இருக்கும் போது, அதை மறந்து விடுவார்கள்.
திரும்பவும் ,எதிர்க்கட்சியாக வந்தபோது ஆளுங்கட்சியாக இருந்து பேசியதை மறந்து விடுவார்கள். ஆகக்கூடிய மறதி இவர்களுக்கு அதிகம் . மக்களுக்கும் மறதி அதிகம் .அதனால், ஐந்தாண்டுகளில் அதிமுக செய்தஊழல் மற்றும் குற்றங்கள் திமுக ஆட்சிக்கு வரும்போது மறந்து விடுவார்கள். அதேபோல் திமுக செய்த ஊழல் மற்றும் குற்றங்கள் ,மீண்டும் அதிமுக வரும்போது அதை மறந்து விடுவார்கள் .இப்படி தான் 50 ஆண்டுகால அதிமுக, திமுக அரசியல்.
மேலும், திமுக என்றாலேஇவர்கள் சொல் வீர்கள். அதாவது ,சொல்லில் வீரர்கள், பேசுவதில் அதிவீரர்கள். ஆனால், பேசுவதற்கும், செய்வதற்கும் துளி கூட சம்பந்தம் இருக்காது. அதுதான் திமுக, மனசாட்சியே இல்லாமல் பேசக்கூடியற்கும், செய்வதற்கும் அதில் ஒரே கட்சி திமுக. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் பேசுவது தியாகத்தின் உருவமாக தேனாக இனிக்கும். ஆனால், செயல் அத்தனையும் மக்கள் சகித்துக் கொள்ள முடியாமல், புலம்பி கொண்டிருப்பார்கள் இதுதான் திமுக, அதிமுக கட்சிகளின் அரசியல் .
மேலும், அமைச்சர் ரகுபதி பிரச்சனையை இது பாஜகவின் அரசியல் சூழ்ச்சி போல் தெரிவிக்கிறார் . தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி செய்கிறதா? அல்லது திமுக ஆட்சி செய்கிறதா? அப்படியே வைத்துக் கொண்டாலும், ஜாபர் சாதி கை வைத்து எப்படி சூழ்ச்சி செய்ய முடியும் ?ஒரு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனை அப்படி சூழ்ச்சி செய்ய முடியுமா? அவன் அரசியல் ,சினிமா, அரசியல் அதிகாரம், தொழில் எல்லாவற்றிலும் உள்ளே புகுந்து வெளிவரக்கூடிய ஜகஜால கில்லாடி ஜாபர் சாதிக்கை அவ்வாறு செய்ய முடியுமா ?மேலும்,
என் சி பி போன்ற நேர்மையான அதிகாரிகளையே குறை சொல்கிறீர்கள் என்றால், எங்களை போன்ற சாமானிய ஊடகங்கள் எந்த மூலைக்கு? குற்றவாளி பிடிபட்டு விட்டான். அவன் ஏதாவது சொல்லிவிட்டால், நமக்கு இது என்ன ஆகுமோ என்று திமுக இப்படி ஒரு தடாலடி பேச்சை மக்களிடம் போட்டிருக்கிறார்கள். மக்களுக்கு இதை எல்லாம் ஆய்வு செய்து பார்க்கும் அளவிற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதா?
அல்லது புரிந்து கொள்ளும் சக்தி இருக்கிறதா? சக்தி இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இல்லாதவர்கள் எதுவும் தெரியாமல் புலம்பி கொண்டிருப்பார்கள். அல்லது இதையே உண்மை என்று கூட நம்பி விடுவார்கள். மக்களுக்கு உண்மை என்ற வெளிச்சத்தை காட்டக்கூடிய ஊடகங்கள் ஏதோ ஓரிரு ஊடகங்கள் தான். அதுவும் எதிர்க்கட்சி அரசியல் செய்வது போல செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மக்கள் அரசியலை படிக்காத வரை இந்த தகுதியற்ற போலி அரசியல் பிம்பம்
தொடரும்.