ஐபிஎஸ் அதிகாரி அதுவும் டிஐஜியாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் மிக முக்கியமானது. அதிலும்,இவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார்? இதன் பின்னணியில் மன அழுத்தமா ?அல்லது குடும்ப பிரச்சனையா ?அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? இப்படி பல கோணத்தில் இவருடைய தற்கொலை மரணம் ,காவல்துறை விசாரணையில் தெரிய வருமா? என்று தான் காவல்துறைக்கே இது ஒரு சவாலான பிரச்சனை .
மேலும், இவர் ஒரு நேர்மையான அதிகாரியாக அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவராக இருந்துள்ளார் என்கிறது காவல்துறை வட்டாரம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ,இவர் எப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்ற கேள்வி எழுகிறது? ஒரு வேலை அரசியலில் இவருக்கு நெருக்கடிகள் இருந்ததா? இருந்தாலும் அது வெளியே வராது. அதிலும், ஒரு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார் என்று பார்க்கும்போது, நம்ப முடியாத ஒரு அதிர்ச்சி தான். மேலும் ,இவர் போராடி வாழ்க்கையில் ஐபிஎஸ் இல் வெற்றி பெற்றுள்ளார். கோழைக்கு போராட்ட குணம் வராது. இப்படிப்பட்ட ஒருவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்பதுதான் காவல்துறைக்கு மட்டும் அல்ல, எங்களைப் போன்ற சமூக பத்திரிகையாளர்களுக்கும் இது ஒரு நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது.
இருப்பினும், இதையும் தாண்டி ஏதோ ஒரு சிக்கல், அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்க மாட்டார். அந்த விஷயம் காவல்துறை விசாரணையில் தெரிய வருமா?