
தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது.
இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி உரையாற்றினார். மேலும், கிறிஸ்துவ மதத்தில்,இயேசு கிறிஸ்து அன்பிற்காக கட்டளையிட்டார் என்றும்,இஸ்லாம் மதத்தில் அளவற்ற கருணையை பற்றி போதித்தார்கள் என்றும்,திருக்குறளில் அன்புடைமை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.

இவ்வளவும் அன்பைப் பற்றிய ஒரு கருத்துக்கு இதிலிருந்து எவ்வளவு மேற்கோள் காட்டி நீதி அரசர் மகாதேவன் சிறப்பாக பேசினார். மேலும் அவர் கம்பராமாயணம் எழுதிய கம்பரை பற்றி,போதத் தாழ்வார் பற்றி,திருநாவுக்கரசரை பற்றி, ஸ்ரீ ராமகிருஷ்ணரை பற்றி, வள்ளலாரை பற்றி, அவர்கள் அன்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்?என்பதை மிக அழகாக இலக்கிய நயத்தோடு சிறப்பாக கருத்தரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கி திளைத்தது.

மேலும்,அவரைத் தொடர்ந்து முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் உரையாற்றினார். தவிர, கழகத்தின் பொருளாளர் அரவிந்த் இவ் விழாவினை தொகுத்து வழங்கினார். இறுதியாக இவ் விழாவினை வழக்கறிஞர் சுமதி நன்றி உரை கூறி முடித்தார்.