மேடோ ரூரல் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்( meadow rural enterprises private limited ) என்ற கம்பெனி டைட்டன் வாட்ச் கம்பெனிக்கும் நகை சம்பந்தமான ஜாப் ஒர்க்( job work ) செய்து வந்துள்ளது. இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிடுகரப் பள்ளி, பின்னூர், களகோபசந்திரம் ஆகிய மூன்று இடங்களில் இந்த உதிரி பாகங்கள் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது.
மேலும் இதனுடைய (ஷேர் ஹோல்டர்கள்) அதாவது இந்த கம்பெனியின் பங்குதாரர்கள் எல்லாம் தற்போது வெளியேற்றப்பட்டு, புதியதாக நியமிக்கப்பட்ட சுரேஷ் என்ற கம்பெனியின் சிஇஓ (CEO) பல முறைகேடுகளை செய்து, இந்த கம்பெனி நிர்வாகத்தை அவருடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
அதாவது ஒரு கம்பெனி நிர்வாகம் என்பது அந்த கம்பெனியின் பங்குதாரர்களால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் தான் ,அதில் இடம்பெற வேண்டும். இது கம்பெனியின் விதிமுறை. இந்த விதிமுறையே தவறாக மாற்றி இருக்கிறார் சிஇஓ சுரேஷ். அதாவது, இந்த கம்பெனி ஆரம்ப காலத்தில் இருந்த பங்குதாரர்கள் எல்லாம் அவர்களுக்கு தெரியாமலே ,ஓரம் கட்டப்பட்டு புதியதான பங்குதாரர்களை அதில் சேர்த்து, அவர்களை வைத்து கம்பெனி நிர்வாகத்தையும், அவர்களை வைத்து மீட்டிங் போன்ற பல செயல்பாடுகளை தவறான முறையில் செய்து வருகிறார். இது ஒரு மோசடி குற்றம்.
எந்த ஒரு கம்பெனியோ அல்லது தொழில் நிறுவனமோ முதன் முதலில் ஆரம்ப காலத்தில் இருந்த பங்குதாரர்கள் தான் ,அதற்கு முக்கிய பொறுப்பாளர்கள் அதுதான் விதிமுறை. அவர்களுக்கு தெரியாமல் அல்லது அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு இந்த கம்பெனியின் நிர்வாகத்தில் இருந்து லாபமும் கொடுக்காமல், இவர் இஷ்டத்திற்கு இந்த கம்பெனியின் நிர்வாகத்தை மடை மாற்றம் செய்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.
அதனால், இந்த கம்பெனியின் முன்னாள் சி இ ஓ CEO வான ஆனந்த் மற்றும் பழைய கம்பெனியின் ஷேர் ஹோல்டர் 64 பேரும் சேர்ந்து, இவர் மீது நடவடிக்கை எடுத்து, இந்த கம்பெனி நிர்வாகம் தங்கள் கைக்கு வர வேண்டும் என்று புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்போதைய சிஇஓ சுரேஷ் இந்த கம்பெனியில் உள்ள 64 பேர் ஷேர் ஹோல்டர்களில், சுமார் பத்து பேரை தன் கைவசம் வைத்துக்கொண்டு அவர்களுக்கு மட்டும் வேண்டியதை செய்து கொண்டு, இந்த கம்பெனியில் சுமார் 50 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக, இக் கம்பெனியின் பங்குதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
தவிர, இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களது முக்கிய கோரிக்கை. இந்த கோரிக்கையின் முக்கிய அம்சமாக கீழ்கண்ட தகவல்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதாவது,
1. பங்கு பத்திரங்களை முன்பிருந்த மாதிரியே திரும்ப ஒப்படைப்பது.
2.நிர்வாக குழுவை, முன்பிருந்த மாரியே, மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
3.MEADOW வங்கிக் கணக்கில், CEO கையொப்பம் இடுவதை, மாற்றம் செய்யப்பட வேண்டும்.
4.CEO பெயரில் உள்ள, அனைத்து ஒப்பந்த பத்திரங்களையும், மாற்றம் செய்ய வேண்டும்.
5.CEO பெயரில் உள்ள பங்கு பத்திரங்களை, திரும்ப, companyக்கே ஒப்படைக்க வேண்டும்.
6.CEO பணிக்கால ஒப்பந்தத்தை, ரத்து செய்ய வேண்டும்
7.வங்கியில், CEO பெயரில் உள்ள, வைப்பு தொகையை, கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும்.
8.கார் போன்ற வாகனங்களை, company வசம், திரும்ப ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும்.
9.கடன் நிலுவை, கடன் தொகை, வங்கி மற்றும் பிணையமாக கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும், திரும்ப ஒப்படைப்பது.
10.MEADOW Industrial service private limited மற்றும் MEADOW applipment foundation இந்த இரு நிறுவனங்களையும், தாய் நிறுவனமான எந்த தொடர்பும் இல்லாமல் செய்ய வேண்டும்.
11.CEO அவர்கள், எந்த நிபந்தனையும் இன்றி, பதவியை ராஜினா செய்ய வேண்டும்.