தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆளுநர் ஆர் .என். ரவி நடவடிக்கை எடுக்க உத்தரவு .இதுவும்,நாட்டில் கல்வி தனியார் மயத்தால், அது எவ்வளவு பாடுபடுகிறது? என்பதற்கு ஒரு உதாரணமா?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram

தனியார் பொறியியல் கல்லூரிகளில் ,போலி கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக புகார்கள், மத்திய கல்வித்துறைக்கும் ,ஆளுநர் ரவிக்கும், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் புகார் அளித்ததை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் க்கு தமிழக ஆளுநர் ரவி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும்,

 தமிழ்நாட்டில் எப்போது தனியாரிடம் கல்வி சென்றதோ, அப்போதே கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டது .இன்று வரை இந்த வியாபார கல்வி நிறுவனங்களின் உண்மை என்னவென்று தெரியாமல், தமிழ்நாட்டு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 இந்த தனியார் கல்லூரிகளில், தனியார் பள்ளிகளில் படித்தால் நம் பையன் பெரிய ஆளாக வந்து விடுவான். இப்படித்தான் பாமர ஏழை முதல் பணக்காரன் வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் அதே கல்வியை அரசு கொடுக்க முடியாதா? அந்த தரத்திற்கு இணையாக கல்வியை இவர்களால் கொடுக்க முடியாதா? ஏன் கொடுக்கவில்லை? எல்லா அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுக்கு பத்து கல்லூரி ,10 பள்ளிகள் , 10மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ,ஆரம்பித்து கொண்டார்கள்.அதனால் அரசு பள்ளியை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. 

அரசு பள்ளியில் அந்த தரத்திற்கு இணையாக கல்வியை கொடுக்கக் கூடாது. அதுதான் இவர்களுடைய முக்கிய நோக்கம். அங்கே மாணவர்களுக்கு இப்படிப்பட்ட தரமான கல்வியை அவர்களால் கொடுக்க முடியாது, என்ற நிலைமையை இந்த வியாபாரம் கல்வி நிறுவனங்கள் உருவாக்கி ,ஒரு மாயை ஏற்படுத்தி விட்டார்கள். மேலும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதாவது அதிமுக ,திமுக இவை இரண்டும் மாறி, மாறி 50 ஆண்டுகாலம் இருப்பதால் இந்த கல்லூரி நிறுவனங்கள் எத்தனை லட்சம் ?டொனேஷன் வாங்கிக் கொண்டாலும், கேட்க மாட்டார்கள்.மேலும்,

 அப்படியே வாங்கிக் கொண்ட பணத்தை அந்த கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை என்றாலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், பணத்தை கொடுக்க மாட்டார்கள். கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் எத்தனை பேர் இன்று பல லட்சங்களை இழுந்து தவிக்கின்ற பெற்றோர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். மக்கள் எப்போது ஆயிரம், 500 க்கு வாக்களித்து, இந்த அவலங்களை எல்லாம் சிந்திக்காமல், அரசியல் கட்சியினர் பொய்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்களோ, அதுவரையில் இவர்கள் இப்படித்தான் இந்த தனியார் கல்வி நிறுவனங்களிடம் ஏமாந்து கொண்டு இருப்பார்கள்.

ஒரு பக்கம் லட்சக்கணக்கில், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கல்விக்காக ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் மருத்துவத்திற்காக இலட்சக் கணக்கில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், இந்த தனியார் மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், நடுத்தர, ஏழை வர்க்கத்தை வாழ வைக்காமல் தொடர்ந்து அரசியல் செய்து இந்த அரசியல் கட்சிகளிடம் ,இந்த மருத்துவ கல்வி வியாபாரம் மற்றும் மருந்து மாத்திரைகள் வியாபாரம் இவை எல்லாம் தமிழ்நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் ஆளுநர் ஆர் . என் .ரவி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அதிமுகவை வின் முக்கிய புள்ளிகள் எத்தனை கல்லூரி, பள்ளிகள் உள்ளது என்பதை பட்டியலிடுங்கள்? திமுகவின் முக்கிய புள்ளிகள் எத்தனை கல்லூரி பள்ளிகள் இருக்கிறது? என்பதை பட்டியலிடுங்கள் .பிஜேபியில் எத்தனை தனியார், பொறியியல் கல்லூரிகள் பள்ளிகள் இருக்கிறது? என்பதை பட்டியலிடுங்கள். இதையெல்லாம் வியாபார நிறுவனங்களாக இன்றைய கல்வி நிறுவனங்கள் மக்களிடம் இருக்கிறது என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?

 மேலும்,இதே கல்வியின் தரத்தை அரசு பள்ளியில் கொண்டு வர வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியாவது போராட்டம் நடத்தி இருக்கிறார்களா? எந்த தனியார் தொண்டு நிறுவனங்களாவது நடத்தியிருக்கிறார்களா? சமூக ஆர்வலர்களும், சமூகநலன் பத்திரிகைகளும் மட்டும்தான் இச்செய்தியை வெளியிடுகிறது .எந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சியாவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, இணையாக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா? பேச மாட்டார்கள்.

 ஏனென்றால், அவர்கள் இவர்களுக்கு பல லட்சங்களில் விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ஏமாறுவது ஏழை, நடுத்தர மக்கள் தான். நீ எப்போது போதையில் இருந்தும், ஓட்டுக்கு பணம் வாங்குவதில் இருந்தும், திருந்துகிறாயோ, அப்போதுதான் இதையெல்லாம் இந்த நாட்டில் திருத்த முடியும்.அது மட்டுமல்ல,

மத்திய அரசு பள்ளிகளில் அதை கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்கள். நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். அதிலும் அவர்களுடைய சுயநலம் தான் இருக்கிறது. கடைசி வரைக்கும் இவர்களுடைய எடுபிடிகளாக தான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருக்கிறது. நீட் பொருத்த அளவில் இன்று எத்தனையோ ஏழை, நடுத்தர மக்கள், மருத்துவக் கல்லூரிகளில் படிக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 அதையும் ஒரு அரசியல் ஆக்கி, ஓட்டுக்கு இவர்களை எப்படி எல்லாம் சொல்லி ஏமாற்றலாம்? ஒரு பக்கம் பேசி கவிழ்ப்பது, இன்னொரு பக்கம் போதையை கொடுத்து கவிழ்ப்பது, இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக கவிழ்த்துக் கொண்டிருப்பது, இதுதான் திமுகவின் அரசியல். இது தவிர, இவர்களுடைய ஐடிவிங், மூலமாக மற்றும் கூட்டணி கட்சிகளின் மூலமாக, அறிக்கையை விட்டுக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருப்பது திமுகவின் அதிபதி சாலித்தனம். எத்தனை காலம் மக்கள் ஏமாறுகிறார்களோ, அவர்களுடைய தலையெழுத்து மாறப்போவதில்லை.  பார்ப்போம் எல்லாவற்றையும் மாற்றக்கூடிய சக்தி இறைவனிடம் உள்ளது.

மேலும், எந்தெந்த தனியார் கல்லூரியில், போலி கல்லூரி பேராசிரியர்களை நியமித்த விவகாரத்தில், கடும் நடவடிக்கை எடுக்க ஆர்.என். ரவி உத்தரவிட்டதில் எத்தனை கல்லூரிகள்? இதில் மாட்டுவார்களோ விசாரணையில் தெரியவரும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *