தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு சரியான தீர்வு கிடைக்காமல், பொதுமக்கள் போராடி வருகிறார்கள் .
இது பற்றி பலர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டாலும் பலன் கிடைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் தமிழகத்தை சேர்ந்தவராக இருப்பதால், தமிழக மக்கள் இனி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை எளிதில் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு தமிழக மக்கள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.