தமிழகம் முழுதும் ஊராட்சி மன்ற செயலாளர்களை தங்களுடைய சொந்த ஊரிலிருந்து ஒவ்வொருவரையும் 15 கிலோமீட்டருக்கு மாற்றம் செய்ய தலைமைச் செயலக ஊராட்சிகள் செயலாளர் அமுதாவிற்கு பொதுமக்கள் கோரிக்கை.

ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் முக்கிய செய்தி

மக்கள் அதிகாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து வெளியிட்டிருக்கிறேன் .ஏனென்றால், பஞ்சாயத்து ஊழல்கள் அத்தனைக்கும் இவர்கள்  முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தெரியாமல் எந்த ஊராட்சியிலும், எந்த ஊழல்களும் நடக்க வாய்ப்பில்லை.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு கூட பஞ்சாயத்து பற்றிய ஊழல்கள் எப்படி அரங்கேறுகிறது? என்பது பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருந்தேன்.அதாவது பஞ்சாயத்து செயலாளர் ,ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இவர்கள் அனைவரும் கூட்டு ஒன்று சேர்ந்து நடத்தும் ஊழல்கள் தான் அதிகம். இதில் ஒருவராக அதிக அளவில் ஊழல் செய்ய முடியாது.

இதை தடுக்க வேண்டும் என்றால், பஞ்சாயத்து நிர்வாக கணக்குகள் எல்லாவற்றையும் ஆன்லைனில் கொண்டு வர வேண்டும், என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் நீண்ட காலமாக இதை தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், இன்று வரை அதற்கு அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த ஊராட்சி மன்ற செயலாளர்களை மாற்றினால் முறைகேடுகளை குறைக்க முடியும்.

 இவர்களை தமிழக முழுதும் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் . இந்த மாற்றம் கூட ஒவ்வொரு ஆண்டும் இவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது இந்த பஞ்சாயத்து ஊழல்கள், முறைகேடுகள் நிச்சயம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், முறைகேடு செய்த பஞ்சாயத்து செயலாளர்களை அரசியல் பின்னணியில் மீண்டும் உள்ளே வந்து விடுகிறார்கள். அவர்களை உள்ளே வரவிடாமல் சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்புவது அல்லது அவர்கள் முறைகேடாக சம்பாதித்ததை அரசு கையகப்படுத்துவது போன்ற கடும் சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

அதேபோல் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடமையாக்க வேண்டும். அதுவரையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. மேலும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி மன்ற செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கிஸ் உத்தரவிட்டுள்ளார்.

1 thought on “தமிழகம் முழுதும் ஊராட்சி மன்ற செயலாளர்களை தங்களுடைய சொந்த ஊரிலிருந்து ஒவ்வொருவரையும் 15 கிலோமீட்டருக்கு மாற்றம் செய்ய தலைமைச் செயலக ஊராட்சிகள் செயலாளர் அமுதாவிற்கு பொதுமக்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *