தமிழ்நாட்டில் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் காவல்துறையில் நில மோசடி புகாரில் இருந்து, நீதிமன்றம் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு உரிய தீர்வு கிடைத்துள்ளது.
அதாவது போலி ஆவணங்கள் மூலம் கிரயம் செய்யப்பட்ட சொத்துக்களின் பத்திர பதிவுகளை உடனடியாக ரத்து செய்து ,அந்த சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, அந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது .அதனால், பாதிக்கப்பட்டவர்கள் இழந்த சொத்தை உடனடியாக தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் .
மேலும், நீதிமன்றங்களில் கூட பட்ட மாறுதல், நில தகராறு போன்ற வழக்குகளில் கூட இருப்பவர்கள், இந்த சட்டத்தை முன்வைத்து இப்ப பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் ,வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது .
மேலும், சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை இருப்பதாக கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தது தவறு. மேலும் ,இதற்கு கிராமங்களில் விஏஓக்கள் செய்கின்ற தவறு .ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, தவறு செய்யும் விஏஓ கண்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும், சொத்தின் உரிமையாளர் யார் என்பதை வருவாய்த்துறை தீர்மானிக்க முடியாது என்று உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தவிர ,பட்டா உரிமை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது. பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல், பட்டவை வைத்து மட்டும் ஒருவர், இவர் தான் அதற்கு உரிமையாளர் என்று கூற முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், கிராம நத்தம் நிலத்தில், அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அதை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .இது தவிர, பட்டா பெயர் மாற்றம் செய்ய நீண்ட கால தாமதம் செய்தால் ,அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும். போலிப்பட்ட வழங்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய ,வட்டாட்சியருக்கு அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியர் பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால் கோட்டாட்சியர் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார். அதனால், பாதிக்கப்பட்ட மக்கள் விழிப்படைந்து, தங்கள் சொத்துக்களை ஏமாற்றியவர்களிடமிருந்து, இந்த சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு .