தமிழகத்தில் நடைபெற்ற கொண்டிருக்கும் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கை, தமிழக மக்களுக்கு அது ஒரு புது விதமான அறிமுகக் கொள்கை. இந்தக் கொள்கை அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும் .ஏனென்றால் அவர்கள்எல்லா மாடல்களை பார்த்து வருகிறார்கள். அதிமுக மாடல், திமுக மாடல் ,இந்த மாடல்கள் எல்லாம் மக்களுக்காக ஆனதா? அல்லது ஆட்சியாளர்களின் நலனுக்காக ஆனதா? இதை விபரம் தெரியாத ஆளுநர்கள் இவர்கள் எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டு, போய்விடுவார்கள்.
ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் ஒரு உளவுத்துறை இயக்குனர்,இவருக்கு சட்டம் ,அரசியல் எல்லாம் அத்துபடி. அதுவும் இப்போது கவர்னர் ஆன பிறகு இதையெல்லாம் பிங்கர் டிப்சில் வைத்திருப்பார். இவர்கள் வேண்டுமானால் பத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் வைத்து ஆலோசனை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் எல்லா சட்ட நுணுக்கங்களை படித்துவிட்டு தான், சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார்.
மேலும், ஆளுநர் உரை மக்களுக்கானதாக இருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிக்க வேண்டுமா? இதில் முதலமைச்சருக்கு கௌரவ பிரச்சனை,கவர்னருக்கும் கௌரவ பிரச்சனை, இந்தப் பிரச்சனைகளுக்கு இடையில் மக்களுடைய பிரச்சனை பற்றி தான் அங்கு பேச வேண்டிய முக்கிய கருத்து, அதை கவர்னர் பேசிவிட்டு வந்துவிட்டார் .
ஆனால், முதல்வர் மக்கள் பிரச்சினையை விட்டுவிட்டு, இவர் திராவிட மாடல் கொள்கையை பேசிக் கொண்டிருக்கிறார். இந்த திராவிட மாடல் கொள்கையை மக்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? இல்லை அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களா? எதுவும் இல்லை. அப்படி ஒரு இல்லாத ஒரு மாடலை, இவர்கள் இருப்பதாக பேசிக்கொண்டு, மக்களிடம் ஊடகத்தின் மூலம் திணித்தால், அந்த ஊடகங்களையும், மக்கள் நம்ப மாட்டார்கள். மேலும், இது போன்ற ஆட்சியாளர்களின் பேச்சுகளையும் நம்ப மாட்டார்கள்.
மக்களின் இன்றைய அரசியல் 50 ஆண்டுகளுக்கு முன் எப்படி வெளிப்படுத்தன்மையோடு இருந்ததோ, அதே எதிர்பார்ப்பில் தான் மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய எதிர்பார்ப்பு மக்களுக்கு தெரிந்து விட்டது.
அவர்களுடைய எதிர்பார்ப்பு இவர்களுக்கு தெரியவில்லை .அது ஊடகங்களுக்கும் புரியவில்லை. அதனால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு சட்டமன்றம் நடத்தி நல்ல பெயரை தமிழகம் முதல்வர் வாங்குவாரா? இல்லை கவர்னர் உடன் அரசியல் செய்து கொண்டிருக்கப் போகிறாரா? என்பது தான் தமிழக மக்களின் கேள்வி?