தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில், ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர்களுக்கு இந்த நிதி கோடிக்கணக்கில் மாவட்டம் தோறும் பிரித்து வழங்கப்படுகிறது. இதில் வருகின்ற இந்த நிதி சரியான முறையில் ஒவ்வொரு (டிபிஎச் க்கும்) அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது மிக முக்கிய கேள்வி. மேலும்,
இதில் ஒவ்வொரு துணை இயக்குனர்கள் அதாவது டிடிஹெல்த் depty directors இந்த நிதியை முறைகேடு செய்து வருவதாக பல மாவட்டங்களில் இருந்து வரும் தகவல் . மேலும் தற்போது கூட, திருவள்ளூர் மாவட்ட துணை இயக்குனர் ஜவஹர்லால் இந்த நிதியில் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 50 சதவீத கமிஷனில் அவருக்கு மட்டுமா? அல்லது வேறு சில அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் செல்கிறதா?
இது தவிர ,அங்குள்ள அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள், பணி மாற்றம் (ட்ரான்ஸ்ஃபர்) செய்தால் பணம் இல்லாமல் ,அவர்களை மாற்றுவதில்லையாம். இது பற்றி இவர் மீது இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என சுகாதார வட்டாரத் துறையில் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம் .
மேலும், கோடிக்கணக்கில் மத்திய அரசின் நிதியியல் 50 சதவீதம் என்றால், அது எத்தனை கோடி? இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் இவர் சம்பாதித்து இருப்பார்? என்பது DPH இயக்குனருக்கு தெரியுமா? என்பதுதான் திருவள்ளூர் மாவட்ட மக்களின் முக்கிய கேள்வி?
இதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதுதான் திருவள்ளூர் மாவட்ட மக்களின் முக்கிய கேள்வி ?