நாட்டில் பத்திரிக்கை துறையின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், அரனாக விளங்கும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழகத்தில் மத்திய- மாநில செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் ஏஜென்ட்களாகவும், அவைகளின் வளர்ச்சிக்கு மட்டுமே செய்தித் துறையாகவும் விளங்கி வருகிறது .அதனால் தான், இங்கே சமூக நலன் பத்திரிகைகள் வளர்ச்சி அடைய முடியவில்லை .மேலும்,
அதற்கு தகுதியான சில பத்திரிகைகள் இருந்தும் ,செய்தி துறை அதிகாரிகளால் அதன் வளர்ச்சிக்கு எந்தவித பத்திரிகைகளின் உரிமையும் ,உதவியும் கொடுப்பதில்லை. தமிழக செய்தி துறை மக்களின் வரிப்பணம் கார்ப்பரேட்டுக்கு மட்டுமே சொந்தம் என்று இங்கே பட்டா போட்டு விட்டார்கள். அதனால் மீண்டும் இப் பிரச்சனையை பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு, மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், பத்திரிக்கை உரிமைகளை பாதுகாக்கும் .பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு, கடிதத்தின் வாயிலாகவும், இச் செய்தியின் வாயிலாகவும், இப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.மேலும்,
இதுவரை பத்திரிகைகளிலும், இணையதளத்திலும், செய்திகளை செய்தித் துறைக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக செய்தி துறைக்கு அனுப்பி எந்த விதமான பயனும் இல்லை .தவிர ,அலட்சியம் செய்ததுதான் செய்தித்துறை அதிகாரிகள் மூலம் கிடைத்த பதில். எனவே, இது பற்றி கடைசியாக பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்து விட்டு, பிறகு இவை அனைத்து மனுவின் மீதும் நடவடிக்கை எடுக்க after the vacation of high court in Chennai இது பற்றி சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்படும் என்பதை தமிழக செய்தித்துறைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் ,இவர்கள் கார்ப்பரேட்டுக்கு மட்டும் தான் G O போடுவார்களா ? அப்படி என்றால் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் எப்படி மக்களிடம் உண்மைகளை கொண்டு சேர்க்க முடியும்? இதற்கு செய்தி துறை அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.