தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு உட் கட்சி பிரச்சனைகள் புகைச்சலாக இருந்து வருகிறது. மேலும்,
அண்ணாமலையா? இப்படி என்று சொல்லும் அளவிற்கு அந்த குற்றச்சாட்டுகள் அக் கட்சியின் மேல் மட்டத்தில் பேசி வருகின்றனர். ஆனால், டெல்லி மேலிடம் சரியான தகுதியான ஆள் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இந்த மாற்றத்தை தள்ளிக் கொண்டு இருப்பதாக வெளி வரும் தகவல் . இருப்பினும்,
அண்ணாமலையால் பிஜேபி வளர்ந்துள்ளது. பிஜேபியால் அண்ணாமலை வளர்ந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.இந்த விவகாரம் டெல்லி வரை சென்றுள்ளது. டெல்லியில், இந்தப் பிரச்சனை பற்றி முழுதும் ஆய்வு செய்து முடிவெடுப்பார்கள் என்று கட்சி வட்டார தகவல் .
இதற்கிடையில் சமீபத்தில் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார். இதை பற்றி அவர்கள் விவாதித்து இருக்கலாம். மேலும்,தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி சென்று இருக்கிறார்.அவரிடமும் இதைப் பற்றி விவாதித்து இருப்பார்கள் என்று பிஜேபி வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
தவிர,அண்ணாமலை விஷயத்தில் டெல்லி மேலிடம் என்ன முடிவெடுக்க போகிறது? என்பது தான் தமிழக பாஜகவில் ஒரு த்ரிலிங்கான இரகசிய மர்மம்.