தமிழக மக்கள் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க தெரியாததால் மக்களின் வாழ்க்கை போராட்டமாகி வந்துள்ளது பற்றி சிந்திப்பார்களா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடம்பு கனமாகவும், ஏதோ ஒரு கட்சியில் பொறுப்பை வாங்கிக்கொண்டு பேசத் தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் நன்றாக பேசுகிறார்கள் என்று படித்தவர்களும், ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்களும் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.இதுவா அரசியல் தகுதி? இது அரசியல் தகுதி அல்ல .

அரசியல் தகுதி என்றால்! ஒருவருடைய நேர்மை, ஒழுக்கம்,சமூகத்தில் நன்மதிப்பு ,மரியாதை இதுதான் ஒரு மனிதனின் அரசியல் அடிப்படைத் தகுதி. இந்த தகுதி இல்லாதவர்கள் குடிகாரர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதோ ஒரு கட்சியில், ஏதோ ஒரு பொறுப்பை வாங்கிக்கொண்டு, மக்களிடம் கையெடுத்து கும்பிட்டு காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி பணத்தையும் கொடுத்து, மக்களுக்கு மது பாட்டல்களும் கொடுத்து, பிரியாணி கொடுத்து உங்களுக்கு நல்ல செய்ய ஒருவரும் வர மாட்டார்கள். ஏமாற்று பேர் வழிகள், ரவுடிகள் ,மோசடி கும்பல்கள், சட்டத்தை ஏமாற்றுபவர்கள், இவர்கள்தான் உங்களுக்கு நல்லவர்களாக தெரிந்தால், உங்கள் வாழ்க்கை மேலும், மேலும் போராட்டக்களம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.மேலும் ,

இவர்கள் எப்படி சொத்து சம்பாதித்தாலும், அரசியலில் பதவி அதிகாரத்தில் பண மோசடி செய்தாலும், பொது சொத்துக்களை கொள்ளை அடித்தாலும், இவர்கள் மீது வழக்குகள் போட்டாலும். இவர்களெல்லாம் கார்ப்பரேட் மீடியாக்களில் உத்தமர்களாக பேசிக் கொண்டிருந்தால், மக்கள் படித்த முட்டாள்களா? அல்லது படிக்காமல் இருப்பவர்கள் இதை புரிந்து கொள்ள முடியவில்லையா ? அல்லது அலட்சியமா? இவையெல்லாம் சமூகத்திற்கே பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. மேலும், இதற்கு என்ன அடிப்படைத் தகுதி?

 ஒருவருடைய தகுதி அதற்கு பிறகு தான் கட்சி , அமைப்பு, சங்கம் எல்லாமே அதாவது ஒருவரை பதவிக்கு தேர்வு செய்ய முன், அதற்கான பேசிக் ( Basic qualification) குவாலிபிகேஷன் இருக்க வேண்டும் . அந்த பேசிக் குவாலிபிகேஷன் என்னவென்றால், முதலில் படித்தவர் ,பண்பாளர் ,சமூகத்தை மதிக்க தெரிந்தவர்,பொது சொத்துக்களை ஏமாற்றி ,மோசடி செய்து, அவ பெயரோ அல்லது தனிப்பட்ட நபரை மிரட்டியதோ அல்லது அவர்களுடைய சொத்துக்களை ஏமாற்றியதோ அல்லது கட்சி பொறுப்பை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியதாகவோ, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக குற்றங்களில் ஈடுபட்டவராகவோ இருக்கக் கூடாது .இது basic qualification.

இந்த பேசிக் குவாலிபிகேஷன் இல்லாமல் அவர்களிடம் கட்சி பொறுப்பை கொடுப்பது, அந்த கட்சி பொதுநலம் கொண்டதாகவோ அல்லது பொதுநலத்தில் அக்கறை உள்ளதாகவோ இருக்காது. மேலும் மனசாட்சி இல்லாமல் ஒரு கட்சித் தலைவனாக இருந்தாலும், மனசாட்சி இல்லாமல் பேசிக்கொண்டு, பணம் மட்டுமே குறிக்கோளாக, மக்கள் நலனில் அக்கறையில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்கள் பின்னால் மக்கள் சென்றால் மக்களின் வாழ்க்கை ஒரு நரகம் தான்.

 இது அரசியல் கட்சியாக இருந்தாலும்,அல்லது ஜாதி கட்சியாக இருந்தாலும், மனசாட்சி இல்லாமல் பேசிக்கொண்டு, மனசாட்சி இல்லாமல் ஏமாற்றிக் கொண்டு, கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு, நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு, இருப்பவர்களை வாக்காளர்களாகிய நீங்கள் அவர்கள் காட்டும் பந்தாவை பார்த்து இன்றுவரை ஏமாந்து கொண்டிருப்பதால், உங்களுடைய வாழ்க்கை! இச் சமுகத்தில் அவர்கள் மறைமுக எதிரிகளாக அவர்களுடன் போராடுவது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.இதனால் ,சமூகத்தில் மக்களின் போராட்டம் வளர்த்துக் கொண்டே போகிறது. இதன் விளைவு,வாழ்க்கையில் உழைப்பவர்கள் முன்னேற முடியவில்லை.  திறமையிருந்தும் அவர்களின் உழைப்புக்கு ஊதியம் கிடைக்காமல் ஏமாறுகிறார்கள். சட்டம் இங்கே வலைக்கப்படுகிறது.மேலும், 

சமூக குற்றங்கள் அதிகரிக்க அரசியல் கட்சிகளின் பின்புலம் முக்கிய காரணம், இதை வாக்காளர்கள் அனைவரும் உணர வேண்டும். அந்த வகையில் எந்தெந்த அரசியல் கட்சிகளின் பின் புலத்தில் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து உள்ளது? இந்திய அளவில் எந்தெந்த மாநிலத்தில், எந்தெந்த கட்சிகளின் பின்புலத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது? இதற்கெல்லாம் வாக்காளர்கள் கவனித்து வாக்களிக்க வேண்டும்.தவிர, இந்த அரசியல் கட்சிகளின் கைகளில் அதிகாரம் வந்து விட்டால், அதிகாரிகள் அவர்கள் சொல்வதற்கு ஏற்றார் போல் ஆட வேண்டியிருக்கிறது.

 எத்தனை அதிகாரிகள் அவர்களுக்கு இது தவறு என்று தெரிந்தும், அவர்களுக்காக சட்டத்தை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், சமூகம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் போராட்டத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும், தகுதியற்றவர்களிடம் மக்களின் வாக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டு, ஏமாந்து கொண்டிருப்பது உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளி போட்டுக் கொள்வது தான்.இந்த உண்மைகளை சமூக அக்கறை உள்ள பத்திரிகைகள் புரிய வைத்தாலும், அதை அலட்சியத்துடன் படிக்காமல், சிந்திக்காமல் இருப்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். மேலும்,

SOCIAL INTREST JOURNLISAM 

 நாட்டைப் பற்றி சிந்திக்காதவர்கள், சமூகத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள், செயலில் அதைப் பற்றி துளி கூட அக்கறை காட்டாதவர்கள், சம்மந்தம் இல்லாமல் பேசி வேதாந்தம், சித்தாந்தம், பகுத்தறிவு என்று பேசி ஏமாற்றிக் கொண்டிருந்தால், ஏமாறுவது நீங்கள் தானே .மேலும், இது பற்றி படித்தவர்களும் சிந்திப்பதில்லை. படிக்காதவர்களும் சிந்திப்பதில்லை . பகுத்தறிவு என்று பகல் வேஷம் போடும் கூட்டங்கள், பேசியே இந்த அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள், இந்த நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உழைப்பவர்கள், மனசாட்சியுடன் பேசி, மனசாட்சியுடன் வாழ்பவர்கள் நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.மேலும், 

போலியும், பொய்யும் தன்னைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்று வெள்ளை வேஷ்டியிலும், வெள்ளை சட்டையிலும், உடம்பை காட்டுவதிலும் ,பந்தா காட்டுவதிலும்,நல்லவர்களாக வேஷம் போட்டு, இன்று அரசியலில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .இந்த ஏமாற்றத்திற்கு படித்தவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். படிக்காதவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த சமூகத்தை மதிக்க தெரிந்தவர்கள் அது எந்த ஜாதியாக இருந்தாலும் பரவாயில்லை. 

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சமூக நலன் கொண்டவர்களாக எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கலாம். அங்கே தலைவனே சரியில்லை என்று அந்த கட்சியில் இருக்கும் போது, இடையில் இருப்பவர்களை ஆதரிப்பது வீண்.ஒரு கட்சித் தலைவன் மனசாட்சியுடன் பேசி, மனசாட்சியுடன் வாழ வேண்டும் .ஆனால், எப்படியும் பேசிக் கொண்டு, எப்படியும் நடித்துக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருப்பது அரசியல் அல்ல.இவர்கள் எல்லாம் எப்படி அரசியலில் வெற்றி பெறுகிறார்கள்? என்றால், மக்களின் முட்டாள்தனம் ,மக்களின் சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருப்பதால், இவர்களையெல்லாம் எளிதாக  ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு துணை போகும் எத்தனையோ கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலம் இந்த மக்களை ஏமாற்ற ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 அதனால், அது எவ்வளவு பெரிய தொலைக்காட்சியாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பத்திரிகையாக இருந்தாலும், சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மையானவையா? இவர்கள் தகுதியானவர்களா ?பதவிக்கு போட்டியிடும் போது, இவ்வளவு கேள்விகள் எல்லாம் அவரை வைத்து மனதுக்குள்ளே கேள்வி கேட்டு பாருங்கள். இவர்கள் இதற்கு தகுதியானவர்களா? அதன் பிறகு இவர்கள் கட்சிக்குள் செய்த நன்மை என்ன? சமூகத்துக்கு செய்த நன்மை என்ன? சமூகத்துக்கு செய்த தீமைகள் என்ன? சமூகத்திற்கு செய்த ஒவ்வொரு விஷயத்தையும் ,தனிப்பட்ட முறையில் அவர்களுடைய குடும்ப வரலாறு என்ன? இவர்களுடைய தாய், தந்தை எப்படிப்பட்டவர்கள்? ஏனென்றால் தாய், தந்தையினுடைய ஜெனிடிக் இவர்களிடம் இருக்கும்.

 இதற்கு மருத்துவ விஞ்ஞானம் சொல்வது என்ன? என்றால், குரோமோசோம்கள் சந்ததிகளை கடத்துகிறது. அதாவது தாய், தந்தையினுடைய குணங்கள் குழந்தைகளுக்கு இருக்கும். இவர்களுடைய தந்தை ஊருக்கு நல்லது செய்திருந்தால், நிச்சயம் அவருடைய மகன் ,அந்த ஊருக்கு நல்லது தான் செய்வார்.மேலும்,

 இவர்களுடைய தகப்பன் ஊருக்கோ, நகரத்துக்கோ சுயநலமாக வாழ்ந்து பணத்தில் மட்டுமே குறிக்கோளாக இருந்திருந்தால், மகனும் அப்படி தான் இருப்பார்.விதிவிலக்கு லட்சத்தில் ஒன்று ,இரண்டு இருக்கும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை .எனவே, இந்த அடிப்படை தகுதி, அறிவாற்றல் எல்லாமே பிறப்பின் ரகசியம். இதை அறிந்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால், அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கையை போராட்ட களம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஆட்சி அதிகாரம் கையில் வைத்திருப்பவர்கள் செய்கின்ற தவறுகளால், மக்களின் இன்னல்கள் வெளியில் சொல்ல முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் .இது தவிர,ஒரு பக்கம் போதைப்பொருள், டாஸ்மாக், பாதிக்கப்படும் குடும்பங்கள் எவ்வளவு? அடுத்தது, மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ,எல்லாமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும், நல்லவர்கள், சமூக ஆர்வலர்கள், ஒரு வார்டு உறுப்பினராகவோ பஞ்சாயத்து தலைவர்களாகவோ, கவுன்சிலர்களாகவோ வர முடியவில்லை இது மக்கள் செய்யும் தவறு.பணத்தை வைத்து, கார் பங்களா வைத்து, ஒருவருடைய தகுதி நிர்ணயத்தால் ,மக்கள் உண்மை தெரியாமல் போலிகளை கண்டு சுயநலமிக்கவர்களாக ஏமாந்து வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு, இவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும், வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அது மீண்டும் மக்களிடம் தான் வந்து சேருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை எல்லாம் எந்த ஒரு கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் உங்களுக்கு சொல்லி புரிய வைக்காது. அவர்களுக்கு தேவை பணம், இவர்களுக்கு தேவை பணம், உங்களுக்கு தேவை பணம் என்றால்,

உங்கள் வருங்கால சந்ததிகளின் முன்னேற்றம் கேள்விக்குறியாகும். நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்களோ, அவர்களுக்காக கல்வி, வேலை வாய்ப்பு, சுதந்திரம், அமைதி, கலாச்சாரம் எல்லாமே அவர்களுக்கு ஒரு போராட்ட வாழ்க்கை. அந்தப் போராட்ட வாழ்க்கையை நீங்கள் தேடிக் கொடுக்கப் போகிறீர்களா? அல்லது இதுவரை நீங்கள் செய்த தவறும், உங்களுக்கு புரியாமல், சிந்திக்காமல், வாழ்ந்து கொண்டிருப்பது,இனியாவது உண்மையை உணர்ந்து விழித்துக் கொள்வீர்களா? வாக்காளர்களே! மேலும், இந்த அடிப்படை தகுதி கூட இல்லாதவர்களுக்கு எல்லாம் இன்று பல கிராம மக்கள் வாக்களித்துவிட்டு, ஏமாந்து புலம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமமும் ஒன்று.மேலும்,

இந்த அடிப்படைத் தகுதியை அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அந்த கட்சியினருக்கும், உங்கள் பகுதியில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மார்க் போடலாம்? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பிஜேபி,காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி,கம்யூனிஸ்டுகள் என்று பல அரசியல் கட்சிகளுக்கு மனசாட்சியுடன் இந்த அடிப்படை தகுதிகளை அவர்களுக்கு பொறுத்தி அவர்களுடைய தகுதி என்ன? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சமூக நலனில் என்றும் மக்கள் அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *