தமிழக வாக்காளர்கள்! திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரங்களையும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளையும் ,இந்தப் பொய்களை பரப்புகின்ற ஊடகங்களையும் நம்பி ஏமாறாதீர்கள் – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 01, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டு அரசியல் தேர்தல் களம் பொய் பிரச்சாரங்களையும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழக்கறிஞர்களின் பொய் வாதங்களை போல் கொடுத்து, தொடர்ந்து இந்த அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகிறது.இதனால், மக்களும் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற தேர்தலில் வாக்களித்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

 இங்கே கடந்த முறை திமுகவுக்கு வாக்களித்து 39 எம்பிக்கள் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு அனுப்பி, மக்களுக்காக இந்த 39 எம்பிக்கள் அவரவர் தொகுதிகளில் செய்தது என்ன?பட்டியலிடுங்கள் பார்ப்போம் .அப்படி செய்திருந்தால், நீங்கள் செய்ததை இந்நேரம் அதற்கு எவ்வளவு விளம்பரம் கொடுத்திருப்பீர்கள்? ஒரு வேலையும் செய்யவில்லை.இனியும் இவர்களுக்கு வாக்களித்து ஏமாற வேண்டாம். 

இவர்களுடைய வியாபாரத்தையும், வருமானத்தையும் பார்த்துக் கொண்டார்களே தவிர, வேறு எதுவும் செய்யவில்லை. இவர்களுடைய  வருமானம்,சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கு தான் மக்கள் வாக்களித்தார்களா? நீங்கள் செய்திருந்தால், இந்த தேர்தலில் அதை பட்டியல் போட்டு சொல்லி இருப்பீர்கள். மக்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அதனால் மீண்டும் ,மீண்டும் பொய்களை சொல்லி ,அரசியல் பேசி, ஒருவர் மீது ஒருவர் பொய் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றுவது தான் தமிழக அரசியல் தேர்தல் ஆகிவிட்டது.

மேலும், திமுக கூட்டணி கட்சிகள் பொருத்தவரை யார் பிரதமர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது? அதேபோல்தான், அதிமுககூட்டணி கட்சிகள், அதே போல் தான் நாம் தமிழர், இந்தக் கட்சிகளுக்கு எல்லாம் வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு, அது வீணான வாக்கு .ஏனென்றால் இவர்கள் யாரை பிரதமராக்க போகிறார்கள்? எதற்கு இந்த கட்சிகள், தேர்தலில் நின்று அரசியல் தெரியாத மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? ஒருவர் எம் பி யாகவோ, எம்எல்ஏ ஆகவோ மக்கள் தேர்தலில் வாக்களிப்பது இவர்களுடைய கட்சி விளம்பரத்திற்காக அல்ல.

 மக்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? இதற்கு தான் வாக்களிக்க வேண்டும்.இவர்களுடைய வாய் வித்தை காட்டுவதற்கு எந்த தேர்தலும் தேவையில்லை. மேலும், தமிழ்நாட்டு வாக்காளர்கள் இவர்கள் சொல்கின்ற பொய் பிரச்சாரங்களையும், பணத்திற்காகவும், பொய்யான ஊடக செய்திகளையும் பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஏமாற்றத்தில் இருந்து வெளிவர வேண்டும் .

எந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது? என்பதை சிந்திக்க வேண்டும் .எந்த கட்சி வெற்றி பெற்றால், மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்? எந்த கட்சி வெற்றி பெற்றால் இந்த தேசநலனில் அக்கறை காட்டுவார்கள் ?எந்த கட்சி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன? நன்மைகள் செய்ய முடியும்? இதை சீர் தூக்கி பார்த்தது தான் வாக்களிக்க வேண்டும்.

 இங்கே மோடி வந்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது. பிஜேபி வந்தால் அது மதவாத கட்சி. அது பிரிவினைவாதத்தை நாட்டில் உருவாக்கும். இப்படியெல்லாம் ஒரு பொய்யான பிரச்சாரங்களை அதிமுக, திமுக கூட்டணிகள், நாம் தமிழர் போன்ற கட்சிகள் மக்களிடையே பொய் பரப்புரைகளை செய்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. அதனால் தமிழக மக்கள் இந்த பொய் பரப்புரைகளையும், பொய் ஊடக செய்திகளையும் நம்பி ஏமாறாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள். இவர்கள் ஒருவரை பற்றி ஒருவர், பொய் குற்றங்களை சுமத்தி கொண்டு, மக்களை ஏமாற்றுவது தமிழக அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு கட்சியை பற்றி இன்னொரு கட்சி . குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

இந்தக் குறை சொன்ன கட்சியை ஆட்சியில் அமர்த்தி பார்த்தால், அதைவிட மோசமாக இருக்கிறது. அப்படிதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை குறை சொன்னது . எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஊழல் ஆட்சி நாங்கள் நேர்மையான ஆட்சியை தருகிறோம் என்றுதான் பரப்பறையில் மு க ஸ்டாலின் பேசி வந்தார். ஆனால் எடப்பாடியே மேல் என்று தற்போது மக்கள் பேசி விட்டனர். மேலும்,தமிழ்நாட்டில் இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுவதை வைத்து நம்ப முடியாத அரசியலாக உள்ளது. இவர்களால் மக்கள் எதிர்பார்க்கின்ற ஆட்சி, நிர்வாகத்தை கொடுக்க முடியவில்லை. 

எனவே,இதுவரை எந்த கட்சி நாட்டுக்கு நல்லது செய்தது? இதுவரை எந்த கட்சி ஊழல்களை அதிகமாக செய்துள்ளது ? எந்த கட்சி மக்களுக்கு நன்மைகளை, நல்ல திட்டங்களை நல்லாட்சியை கொடுத்துள்ளது ? இதைப் பற்றி மட்டும் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுடைய பொய்களை எல்லாம் ஊடக செய்திகளாக பரப்புவது, இதை நம்பி மக்கள் ஏமாறுவது ,தேர்தல் என்பது மக்களிடம் ஏமாற்று வேலை அல்ல .அப்படி ஏமாந்தால் தமிழக மக்களின் முட்டாள்தனம்.மேலும், 

நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கு, பாதுகாப்புக்கு, இந்த தேச நலனுக்கு, ஒவ்வொரு இந்திய வாக்காளர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சிந்தித்து பாருங்கள். ஆனால் இவர்கள் சொல்வது பக்கத்து வீட்டு சண்டை போல, ஒருவரைப் பற்றி, ஒருவர் இந்த ஊழல் கட்சிகள் பேசிக்கொண்டு, உத்தம நாடகம் போட்டுக்கொண்டு வலம் வருவது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல். இதிலிருந்து தமிழக மக்கள் வெளியே வாருங்கள்.

எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், வருங்கால இளைய தலைமுறைகள் இதுவரை செய்தது என்ன? இனி செய்யப் போவது என்ன? உங்களுடைய நேர்மை என்ன? உங்களுடைய தகுதி என்ன? உங்களுடைய தரம் என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் எந்த அரசியல் கட்சிக்கு, எவ்வளவு மார்க் நீங்கள் போடலாம்? என்று நினைக்கிறீர்களோ, அந்தந்த கட்சிக்கு உங்கள் மனசாட்சி படி தேர்வு செய்யுங்கள். உங்களிடம் பொய் பிரச்சாரங்களையும் பணமும் கொடுத்து வாக்கு கேட்பது உங்களை ஏமாற்றும் அரசியல் என்பதை எப்பொழுது தமிழக வாக்காளர்கள் புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

இதுவரை பிஜேபி 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும், ஊழலற்ற ஆட்சியை நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளது.இங்கே பிஜேபி தான் எதிர்க்கட்சிகளின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறது. இந்த ஊழல்களை அம்பலப்படுத்தும் போது,நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள், E D, INCOME TAX, சிபிஐ வைத்து மிரட்டுகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள் .இதே எதிர் கட்சிகள் பிஜேபி ஊழல் செய்தால் வெளிக் கொண்டு வராமல் இருப்பார்களா? மேலும்,

 ஒன்றுமே இல்லாமல் எவ்வளவு பொய் பரப்புரைகள்?, எவ்வளவு பொய் பிரச்சாரங்கள்? பேசிக் கொண்டிருக்கும் இவர்கள், பி ஜே பி அல்லது மோடி அரசின் ஊழலோ இருந்தால், இந்த ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மக்களிடம் சொல்வதற்கு தயங்குவார்களா? தூங்க மாட்டார்கள். எனவே மக்கள் எது உண்மை? எது பொய் ?என்பதை சிந்தியுங்கள்.இந்த உண்மைகள் தெரியாத வரை நாட்டு மக்கள் தொடர்ந்து ஏமாறுவது மட்டுமல்ல, நாட்டு மக்கள் நலனுக்கு எதிரான ஒன்று. 

மேலும்,மக்களின் அதிகாரம் மக்களுக்காக இருக்க வேண்டுமே ஒழிய அரசியல் கட்சிகளின் நலனுக்காக இருக்கக் கூடாது என்பதை மக்கள் தீர்மானியுங்கள்.நம்முடைய நலனுக்காக தான் அரசியல் கட்சிகள் இருக்க வேண்டுமே ஒழிய ,அவர்களின் பேச்சில் மயங்குவது, ஏமாறுவது ,பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பது, இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் அரசியல் கட்சிகளுக்கா? அல்லது மக்களுக்கா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

 மேலும், தேர்தல் என்பது மக்கள்  இந்த தேசத்திற்காக வாக்களிக்கும் நம் சுதந்திரத்தின் உரிமையை , இந்தியாவின் வலிமையை காட்டும் தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *