தமிழக வெற்றி கழகம் மாநாடு நடத்தப்பட்டதில் இருந்து அதை அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கிவிட்டது .இது மாநாட்டின் வெற்றி. அடுத்த, இந்த மாநாட்டிற்கு எவ்வளவு பேர் வந்தார்கள் ?எங்கெங்கிலிருந்து வந்திருக்கிறார்கள்? அவர்கள் ரசிகர்களா? அல்லது கட்சியினாரா? இது வாக்குகளாக மாறுமா? போன்ற பல்வேறு குழப்பத்தில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இரண்டு வருகிறது.
அதிலும் திமுக! தமிழக வெற்றி கழகத்தை அதிகமாக கவனிக்கத் தொடங்கிவிட்டது. உளவுத்துறை மூலம் மாநாட்டிற்கு வந்தவர்கள், அவர்களுடைய பயோடேட்டாவை ஆய்வு செய்து தலைமைக்கு அனுப்ப ரகசிய உத்தரவு உளவு துறைக்கு வந்துள்ளதா? இதனால், மாநாட்டிற்கு வந்தவர்கள் பற்றிய விவரங்களை உளவுத்துறை எடுக்க ஆரம்பித்தது விட்டதாம்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி எந்த கட்சிகளுடன் இருக்கப் போகிறது? அதனுடைய அரசியல் எதிர்காலம் எப்படி? மக்களிடம் இதனுடைய தாக்கம் என்ன? இதற்கு எந்த அளவுக்கு வாக்குகள் வரும்? இத்தனை கேள்விக்கும் திமுக! தமிழக வெற்றி கழகத்தை ஆய்வு செய்ய ஆரம்பித்து விட்டதாம் . அதனால், தமிழக வெற்றி கழகம் இதை எதிர்கொள்ள தயாராக இருப்பது மிகவும் அவசியம் என்கிறார்கள் .அரசியல் ஆய்வாளர்கள்.