கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரைக்கு பஞ்சாப் பிரேவ் சௌல்ஸ் அமைப்பு மற்றும் இந்திய அரசின் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விருது விழாவில் “குரு ஞான விருது” மற்றும் சமூக சீர்திருத்தவாதி லாலா ஜகத் நாராயண் கல்வி பணிக்கான சிறப்பு விருதும், இரண்டு நபருக்கு வழங்கப்பட்டது.மேலும்,
இதில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களுக்கு பரிசு தொகையுடன் லாலா ஜகத் நாராயண் சிறப்பு விருது வழங்கப்பட்டது. லாலா ஜகத் நாராயண் தனது எழுத்துகள் மற்றும் கல்வி முயற்சிகள் மூலம், மாணவர்களிடையே தேசபக்தியையும், தேசிய அடையாள உணர்வையும் ,ஊக்குவித்து சுதந்திரப் போராட்ட உணர்வை வளர்த்தவர் மட்டுமின்றி பெண்களின் கல்வியை தீவிரமாக ஆதரித்து நடைமுறையில் உள்ள சமூக விதிமுறைகளை சவால் செய்து கல்வியில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தியவர் என்பது குறிப்பிட தக்கது. தவிர, இந்நிகழ்ச்சியில்,
சிறப்பு விருந்தினராக தொழில்முனைவோர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் கார்த்திகேய ஷர்மா, பஞ்சாபி கேசரியின் இயக்குனர் அபிஜய் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும்,
பஞ்சாப், வங்காளம், ஹரியானா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல், அசாம், கர்நாடகா, தெலுங்கானா என வெவ்வேறு பகுதிகளில் இருந்து பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.