தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செய்தித்துறை செயலாளருக்கும், இயக்குனருக்கும் மனு அளிக்கப்பட்டது.

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மனுவின் முக்கிய சாராம்சம் என்னவென்றால் பத்திரிக்கை துறையில் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது சம்பந்தமாக தலைவர் ராஜேந்திரன் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது . மேலும்,

 செய்தித் துறையில் தொடரும் முக்கிய பிரச்சினையாக தகுதியற்ற ஊடகங்களை வைத்து, கார்ப்பரேட் ஊடகங்கள் ,சமூக நலன் சார்ந்த ஊடகங்கள் அனைத்தும் தரம் தாழ்த்தி, அரசியல் செய்து அதன் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கிறது. இது பத்திரிக்கை துறையின் வளர்ச்சிக்கும், சமூக நலன் வளர்ச்சிக்கும் எதிரானது.இதை இன்றுவரை இந்தத் துறை சீர் செய்யாமலே இருந்து வருகிறது.

தற்போது வந்துள்ள செய்தி துறையின் செயலாளர் முனைவர் சுப்பிரமணியன்,  செய்தி துறையின் இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன் மற்றும் கூடுதல் இயக்குனர் செல்வராஜ் இவர்கள் மூவரும் இது பற்றி ஒரு நல்ல முடிவு எடுத்து இந்த பத்திரிக்கை துறையின் அவலங்களை சரி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

ஏனென்றால், இயக்குனர் மோகன் சாருக்கு முன்னாடி யாரும் இது பற்றி காது கொடுத்து கேட்டதில்லை. இவர்கள் மூவருமே இந்த விஷயத்தை காது கொடுத்து கேட்டிருக்கிறார்கள்.

மேலும், இந்த பிரச்சனைகளை களை எடுக்கும் போது அதில் அரசியல் உள்ளே வராமல் இருந்தால் தான், பத்திரிக்கை துறை பத்திரிக்கை துறையாக இருக்கும் .பத்திரிக்கை துறையில் அரசியல் உள்ளே வந்தால், தகுதி என்பது பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது. அந்தத் தகுதியான பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான் முக்கிய நோக்கம்.

மேலும், பத்திரிக்கை பத்திரிக்கையாக செயல்பட வேண்டுமா? அல்லது ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டாமல், அவர்கள் சொல்லும் செய்திகளை மட்டும் போட்டுக்கொண்டு, அவர்களின் அடிமையாக இருக்க வேண்டுமா? பத்திரிகையின் சுதந்திரம் என்பது ஏட்டளவில் தானா? மேலும், அவர்கள் சொல்பவர்களுக்கு மட்டும் தான் அரசு அடையாள அட்டை, நல வாரியத்தில் உறுப்பினர்கள், தவிர, சலுகை, விளம்பரங்கள் \அனைத்தும் இன்று அரசியல் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது .அது இவர்கள் முடிவா? அல்லது பத்திரிகை கொள்கை முடிவா? எந்த முடிவு என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறோம்.

 மேலும், நாட்டில் பத்திரிக்கைத்துறை மிகவும் மோசமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய வேண்டிய கடமை செய்தி துறைக்கு உள்ளது .இது பொதுநல நோக்கத்துடன் இருக்க வேண்டுமே தவிர, அதில் அரசியல் சுயநல நோக்கம் வந்தால், பத்திரிக்கை துறை ஒரு சிலருக்கு மட்டும் தான் மக்களின் வரிப்பணத்தால் பயனடைகிறார்கள் .

மேலும், சர்குலேஷன் என்ற விதிமுறை மத்திய அரசும், மாநில அரசும் மாற்றி அமைக்க வேண்டிய காலகட்டத்தில் இன்றைய பத்திரிகைத்துறை இருந்து வருகிறது. பத்திரிக்கை துறை பொதுநல நோக்கத்திற்காக இருக்க வேண்டுமா? அது இல்லாமல் ,அரசியல் கட்சிகளின் சுயநல நோக்கத்திற்கும், ஆட்சியாளர்களின் சுயநல நோக்கத்திற்கும் இருந்தால், அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு அர்த்தம் இல்லை.

 அதனால், மக்களின் நோக்கம், மக்களின் எண்ணம் ,மக்களின் கருத்து, இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் பத்திரிகைகளே முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது .அது சமூக நலன் சார்ந்து .சமூக அவலங்களை ஆட்சியாளர்கள் சரி செய்தாலே போதும். தேவையற்ற செய்திகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்களுக்காக தான் ஆட்சியே தவிர, ஆட்சியாளர்களுக்காக, ஆட்சி இருக்குமானால் அது ஆட்சி அல்ல.

எனவே ,பத்திரிக்கை துறை மக்கள் நலன் சார்ந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு அது தினசரியா? அல்லது மாதமா? என்று கணக்கில் எடுக்காமல், இணையதளத்திலும்,செய்திகளின் தரத்திலும், உண்மையின் தரத்திலும், பத்திரிகையின் தரத்தை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். தவிர, பத்திரிகை இணையதளத்தின் பார்வையாளர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பொய்யான செய்திகளையும், மக்களுக்கு தேவையற்ற செய்திகளையும், தரமற்ற செய்திகளையும், அவசியமில்லாத செய்திகளையும், பெரிய பக்கங்களாக வடிவமைத்து, வியாபார நோக்கத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகளால், மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மேலும் ,அதனுடைய சர்குலேஷன் கணக்கில் எடுத்து, இவர்கள் எல்லாம் சலுகை விளம்பரங்களை, இந்த சட்ட விதிமுறையில் அனுபவித்துக் கொண்டு, பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

மத்திய அரசு கார்ப்பரேட் மீடியாக்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம், சமூக நலன் ஊடகங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? தவிர,எந்த அரசாக இருந்தாலும், சமூக நலனை தவிர்த்து ,கார்ப்பரேட்க்கு முக்கியத்துவம் தருகிறது என்றால், அது சமூக நலனுக்கு எதிரானது .ஆடம்பரங்களால் மக்களின் தேவைகளை சரி செய்ய முடியாது .இந்த ஒரு கருத்தை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?

இதற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் ,தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக இதன் கட்டுரைகளை, செய்திகளை மத்திய, மாநில செய்தி துறைக்கு கொடுத்து வருகிறேன். ஆனால், இன்றுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை .இறுதியாக நேற்று தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இது பற்றி மனு அளிக்கப்பட்டுள்ளது .மேலும்,இதற்கு உடனடி நடவடிக்கை தேவை என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது .

அதை செய்தி துறையின் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் இயக்குனர் சுவாமிநாதன் இந்த பத்திரிக்கை துறையை பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல பத்திரிகையாளர்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.மேலும் ,

ஆயிரம் சங்கங்கள் இருக்கலாம் ,ஆயிரக்கணக்கில் பத்திரிகைகள் இருக்கலாம். ஆனால் ,அதற்கான தகுதிகள் எத்தனை? என்பதுதான் தற்போது செய்தித் துறையில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி? அந்த தகுதியான பத்திரிகைகளுக்கு மட்டும்தான் செய்தித்துறை சலுகை, விளம்பரங்களை கொடுக்கிறதா? என்பதுதான் சமூக நல பத்திரிகையாளர்களின் மிக முக்கிய கேள்வி ?

மேலும், பத்திரிகை என்ற போட்டி உலகத்தில் ஜெயிக்க அரசியல் பின் புலமாக குறுக்கு வழியில் மக்களின் வரிப்பணத்தில் நடத்தும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் ஜெயித்து விட்டதாக மக்களிடம் காட்டிக் கொள்வதும், பத்திரிகை உலகில் காட்டிக் கொள்வதும், செய்தித் துறையில் அதன் தகுதி ஏமாற்றும் வேலை என்பது சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *