தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் .

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram

நாமக்கல்லில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர். ராசாமணி தலைமையில் நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அதே சமயம் தமிழகத்தில் உரிமம் முடிந்த நிலையில் உள்ள 22 சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும்,

 மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக மணல் குவாரிகள் செயல்படாததால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக தரமற்ற எம். சாண்ட் பயன்படுத்த வேண்டிய நிலையில் அதன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், எனவே கட்டுமான பணிகள் பாதிப்படையாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்,

 சுங்கச் சாவடி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *