ஜூலை 12, 2024 • Makkal Adhikaram
அரசியல் என்றால் இரண்டு கட்சிகள் தற்போது பிஜேபி சார்பில் அண்ணாமலை, காங்கிரஸ் சார்பில் செல்ல பெருந்தகை, இரண்டு பேரின் அரசியல் வார்த்தை போர்க்களம் எதற்கு ? இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு வார்த்தை போர்களை நடத்திக் கொண்டிருப்பது யாருக்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?
மக்களுக்கா? இல்லை உங்களுக்கா? மக்களுக்காக அரசியல் நடத்துபவர்கள் இதையெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை .அதேபோல், திமுகவின் ஆர் எஸ் பாரதி அண்ணாமலை மீது ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார் .இது எல்லாம் மக்களை முட்டாளாக்கும் வேலையைத்தான் அரசியலில் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கட்சியினர் லாபங்களுக்காக அரசியல் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தீர்மானித்து விட்டார்களா? இதையெல்லாம் விளம்பரப்படுத்த மக்களிடம் பெரிய இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் மீடியாக்கள் மக்களிடம் ஒரு விவாத பொருளாக தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டிருக்கும் .
(இந்த ராணிப்பேட்டை மாவட்ட தலைநகரில் போராட்டம் நடத்தக்கூடிய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தலைகளை எண்ணிப் பார்த்தால் நூறு பேர் கூட இருக்க மாட்டார்கள் போல தெரிகிறது.)
அதேபோல் பத்திரிகைகளில், இணையதளத்தில் இது ஒரு பெரிய செய்தியாக இதனால், மக்களுக்கு பெரும் பயன் என்பதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது? அதை மட்டும் இந்த தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் சொல்லட்டும். ஆனால், ஒன்று மட்டும் செல்வப் பெருந்தகை பேசுவது ஒரு தகுதியான அரசியல்வாதி இல்லை. இவர் அண்ணாமலை ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார். அந்த குற்றச்சாட்டுக்கு இவர் பதில் அளிக்கலாம். அளிக்காமல் போகலாம். அது அவர் விருப்பம்.
ஆனால், இவரே பி சி ஆர் கம்ப்ளைன்ட் கொடுத்து வன் கொடுமை சட்டத்தில் கைது செய்வேன். ஒரு தகுதியான அரசியல்வாதி ஜாதியை முன்னிறுத்த மாட்டார்கள், அடுத்தது, காங்கிரஸ் கட்சி ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாக பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், இவர் அண்ணாமலையை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்வேன் என்கிறார். இது எல்லாம் ஒரு அரசியல்வாதிக்கு தகுதியா? அதுவும் ஒரு மாநில பொறுப்பாளர் இவர்களை எல்லாம் பார்த்து அரசியல் தெரிந்தவர்கள் காரி துப்புவார்கள்.
நாங்கள் எல்லாம் இவர்களுக்கு வாக்களிக்கும் முட்டாள்களா? நீ எதை பேசினாலும், அதை எல்லாம் கேட்டுக் கொண்டு, சட்டம் என்பது பொதுவானது. அது எந்த ஒரு ஜாதிக்கும் அடிமை அல்ல. அதனால், சட்டப்படி தவறு செய்திருந்தால், நடவடிக்கை எடுக்கலாம் .ஆனால், சட்டம் உனக்கு சாதகமாக இருக்கிறது என்று அண்ணாமலையை போய் புகார் கொடுத்து நான் உள்ளே தள்ளி விடுவேன் என்றால் இது எல்லாம் பேசிய செல்வப் பெருந்தகை சட்டத்தை மதிக்காதவர் என்பதை வெளிப்படுத்துகிறது .மேலும்,
ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், ஜாதி கட்சியில் இருக்க வேண்டும். அரசியல் கட்சியில் இருந்து கொண்டு ,அதுவும்அரசியல் கட்சி முக்கிய தலைவர் பொறுப்பில் இருக்கக்கூடிய செல்வப் பெருந்தகை ஜாதியை வீட்டில் விட்டு விட்டு வர வேண்டும் . பி சி ஆர் சட்டம் வைத்துக் கொண்டு அண்ணாமலையை மிரட்ட முடியாது .அவர் ஜாதி கிட்டயே போகவில்லை. அவர் பேசுவது அரசியல் .நீ பேசுவது ஜாதி சட்டம், எவ்வளவு கேவலமான அரசியல் .
உன்னுடைய கடந்த கால அரசியல் மற்றும் கிரிமினல் வழக்கு நீ எந்த வேலைக்கு போனாய்? உன்னுடைய தற்போதைய சொத்து மதிப்பு என்ன? இதைப் பற்றி பேசும்போது ,நான் பிசிஆரில் (PCR) ல்கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்றால், சட்டம் ஒரு ஜாதிக்கு சொந்தமானதா? அல்லது மற்ற ஜாதிக்கு மிரட்டல் விட அல்லது தவறாக பயன்படுத்தி அவர்களை பழிவாங்க கொடுக்கப்பட்ட பி சி ஆர் சட்டமா? அப்படி என்றால், அந்த சட்டமே இருக்கக் கூடாது .அது ஒரு தவறான சட்டம்.
அதனால் தவறான சட்டத்தை பயன்படுத்தி அண்ணாமலை உள்ள தள்ளி விடுவேன், என்பது இது மிரட்டுகின்ற வேலை. காவல்துறை சட்டத்தை பாதுகாக்க வேண்டுமே ஒழிய, சட்டத்தை வைத்து அரசியல் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது என்பதை காவல்துறை தான் இதற்கு முக்கிய பொறுப்பு.
மேலும், செல்வப் பெருந்தகை மக்களின் பிரச்சினைகளுக்காக போராடவில்லை . மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு என்ன பயன்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல், மக்களும் இந்த ஊடகத்தை பார்ப்பவர்கள் என்ன புரிந்தது என்பதை சொல்ல வேண்டும்
இப்படிப்பட்ட செய்திகளை தான் பெரிய இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் விளம்பரப்படுத்தி ஒரு பக்கம் அரசியல் கட்சிகளாலும், இன்னொரு பக்கம் அரசின் சலுகை, விளம்பரங்களாலும் பயனடைந்து வருகிறது. ஆனால், இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
மக்கள் நலனுக்காக அரசியல் என்றால் !வார்த்தைப் போர்களும், அரசியல் கட்சி போராட்டங்களும், இவர்களின் சுயநலத்திற்கு இருக்கக்கூடாது.