
பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பாஜக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு சரியில்லை என்று மத்திய அரசு லைசென்ஸ் கேன்சல் செய்துள்ளது .அது பற்றி திமுக எம்பிக்கள் விவாதம் செய்கிறார்கள்.
அப்போது பாஜக அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, இவர்களால் அதற்கு சரியான பதில் தர முடியவில்லை. ஏன் சுயநல அரசியல் செய்தால், திமுகவால் அதற்கு பதில் தர முடியாது. பொதுநல அரசியல் செய்திருந்தால் அதற்கு பதில் தர முடியும்.
.jpg)
மேலும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக பிரமுகர்களின் இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என்று வரிசைப்படுத்தினால், இவர்களுடைய ஆதிக்கம் தான் அதில் இருக்கும். இந்த மருத்துவ கல்லூரி இன்ஜினியரிங் கல்லூரி வந்த பிறகு விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
.jpg)
இன்று கிராமங்கள், கிராமங்களாக இல்லை. கிராமத்தில் உள்ள மக்கள் 80 சதவீதம் பேர் வெளியில் சென்று, வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நாட்டில் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. விவசாய தொழில் செய்பவர்கள் தினமும் வேலையாட்கள்யில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், குயவர்கள் குளங்களில் மண்ணெடுத்து மண் பாண்டம் செய்வதில்லை. வண்ணான் தன் தொழிலை விட்டு, விட்டு நகரங்களில் கடையை வைத்து விட்டான். சில பேர் வேலைக்கு சென்று விட்டார்கள். இடையன் மாடு மேய்ப்பவதில்லை .
.jpg)
கைத்தறி நெசவாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் இன்றைய தொழில்கள் வந்துவிட்டது. விவசாயமும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் பக்கம் சென்று விட்டது. ஆக கூடி 50 ஆண்டுகால முன் கிராமத்தின் வரலாறு முற்றிலும் அழிந்து வியாபார நோக்கமாக மாறிவிட்டது.
.jpg)
இப்படி ஒவ்வொரு கிராமத்தின் பூர்வீக தொழில்கள் இன்று காணாமல் போய்விட்டது. இதற்கு காரணம் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் இவர்கள் எல்லாம் கல்வி நிறுவன வியாபாரிகளாகி இந்த மக்களின் பூர்வீக தொழில்கள் இன்று காணாமல் செய்துவிட்டார்கள்.
.jpg)
இதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் கல்வியை வியாபார நிறுவனமாகவும், மருத்துவ வியாபாரம் நிறுவனமாகவும், மாற்றி மக்களிடம் அவர்கள் வருமானத்தை பெருக்கிக் கொண்டார்கள்.
%20(1)%20(1).jpg)
ஆனால் படித்த மாணவர்களின் ,வேலை கேள்விக்குறியாகி, அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கவில்லை. இதுதான் அதிமுக, திமுகவின் 50 ஆண்டுகால சுயநல அரசியல்.