
பிஜேபி கட்சியில் அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது.இருப்பினும்,
அமித்ஷா நேற்று சென்னை வந்து பிஜேபி, அதிமுக கூட்டணியை முடிவு செய்தார். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அதுதான் தற்போதைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
மேலும், தற்போதைய அரசியலில் மக்களுக்காக அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா? அல்லது இவர்களுடைய சுயலாபங்களுக்காக செயல்படுகிறார்களா? இதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும், இதுவரை மக்களிடம் பேசவில்லை. பத்திரிக்கை தொலைக்காட்சிகள் எழுதவில்லை.
ஆனால், மக்கள் அதிகாரம் தொடர்ந்து இப் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சென்று தான் இருக்கிறது. கூட்டணி வைப்பது தேர்தலில் மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக மட்டும் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவது தான் அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது.

வெற்றி பெற்று விட்டால் மக்கள் இவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டி இருக்கிறது. இதை ஒவ்வொரு இந்திய வாக்காளர்களும் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அரசியல் என்பது அரசியல் கட்சிகளுக்காகவா? இல்லை மக்களுக்காகவா? என்பது தெரியாமல் இன்றைய அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது
திமுக அமைச்சர் பொன்முடி இவரெல்லாம் எதற்கு அமைச்சர்? தகுதி இல்லாதவர்களை எல்லாம் இந்த மக்கள் வாக்களித்து அர்த்தம் தெரியாமல் மீண்டும், மீண்டும் ஊழல்வாதிகளையும்,ரவுடிகளையும்,அடியாட்களையும், பதவியில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவருடைய ஒரு சொந்த கருத்தை பொதுவெளியில் அதுவும் பாலியல் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை கேவலமாக பேசியிருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சி என்றால்,அந்த நேரத்திலேயே ஜெயலலிதா சஸ்பெண்ட் செய்திருப்பார். அந்த கார் கூட வீட்டுக்கு போகாது. கட்சிக்கு அர்த்தம் தெரியாமல்,ஆட்சிக்கு அர்த்தம் புரியாமல் இருக்கின்ற மக்கள் இவர்களுக்கு வாக்களித்து விடுகிறார்கள். அது மட்டுமல்ல,

இன்றைய ஜாதி கட்சிகளில் திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் பேசுவது, அரசியல் தெரிந்த மக்களுக்கு கோபத்தை தான் ஏற்படுத்துகிறது. இவர் பேசுகிறார் இவர் என்னமோ தமிழை வளர்த்தவர் போல பேசிக்கொண்டு அரசியலில் மக்களை முட்டாள் என்று நினைக்கிறாரா? முட்டாள்களிடம் தான் இந்த பேச்சு எல்லாம் எடுபடும்.
இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் அடிமுட்டாள்களாக நினைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட பேச்சு இந்த அரசியல் கட்சிகள் யாரை ஏமாற்ற இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். மேலும்,
மக்கள் இவர்களுக்கு வருகின்ற 2026 தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். மக்களுக்காக எதுவுமே செய்யாமல், இவர்களின் வளர்ச்சியை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல்.இதுதான் அரசியலா? மேலும் மக்கள் ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் தேர்வு செய்வது அடி முட்டாள்களின் வேலை. அம்பேத்கர் இந்த அடி முட்டாள்களுக்கு ஓட்டு உரிமை கொடுத்தது சட்டப்படி தவறு.

இது தவிர,பகுத்தறிவு என்று சொல்லி இந்த பகுத்தறிவு கூட்டம் பொதுவெளியில் என்ன பேசுவது என்பது கூட தெரியாமல் பெண்களை இழிவாக பேசுவது தான் ஒரு அமைச்சருக்கான தகுதியா? தமிழ்நாட்டில் இனி இந்த அரசியல் கட்சி என்ற ஒரு லேபிளை பயன்படுத்திக் கொண்டு,மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் நன்கு புரிந்து தகுதியற்றவர்கள் எந்த அரசியல் கட்சியில் வேட்பாளர்களாக தோற்கடித்து மக்களின் அரசியல் வெற்றியாக அது இருக்க வேண்டும்.

ஏனென்றால் உழைப்பு,நேர்மை, தியாகம் இது எதுவுமே தெரியாதவன் எல்லாம் இன்று அரசியல் கட்சிகளின் ஸ்டாலின் போட்டோவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,எடப்பாடி போட்டோவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு,மோடியின் போட்டோவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது அரசியல் அல்ல.
நீ என்ன செய்திருக்கிறாய்? நீ என்ன செய்தாய்? உன்னுடைய அரசியல் என்ன? உன்னுடைய சமூக அக்கறை என்ன மிரட்டுறதா?கொள்ளையடிக்கிறதா? ஊர் சொத்துக்களை பட்டா போட்டுக் கொள்வதா? இதுவா அரசியல்?

இப்படிப்பட்ட தகுதியற்ற நபர்களை எந்த அரசு கட்சியில் இருந்தாலும் தூக்கி எறிந்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே வாக்களித்தால் நாட்டில் தகுதியானவர்கள் அரசியலுக்கு வர முடியும்.தகுதியற்ற கூட்டம் கூலிக்கு மாரடைக்கும் பத்திரிக்கை,தொலைக்காட்சிகளை வைத்துக்கொண்டு பேசுவது எல்லாம் உண்மை என்று எழுதிக் கொண்டு,தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டு ஏமாற்றுவது அரசியல் அல்ல.
இன்று பிஜேபியும்,அதிமுகவும் கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை பற்றி எடுத்து பேசிவிட்டு மீண்டும் அதே ஊழல் ஆட்சியை நடத்துவதற்கு மக்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும்? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஊழற்ற ஆட்சிக்கு என்ன உத்தரவாதம் தரப் போகிறீர்கள்?

மக்களுக்கு என்ன வெளிப்படையான நிர்வாகத்தை கொடுக்கப் போகிறீர்கள்?இங்கே கூட்டணியில் பல கட்சிகளை வைத்துக்கொண்டு,மக்கள் கூட்டணி கட்சிகளை நம்பி வாக்களிக்க முடியுமா? அந்த கூட்டணி கட்சிகள் மக்களுக்கு செய்தது என்ன? ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஊழலை பற்றி பேசிவிட்டு போவது அதை பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் விளம்பரம் படித்துவிட்டு போவது இது எல்லாம் மக்களை ஏமாற்றும் அரசியல். அரசியல் தெரியாதவர்கள் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தகுதியற்ற வேட்பாளர்களுக்கும்,ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கும்,வாக்களித்து ஏமாந்து கொண்டு இருப்பது தான் தமிழ்நாட்டின் அரசியல்.

இப்படி வாக்களிக்கும் மக்களால்,மேலும் வாக்களித்துக் கொண்டிருப்பதால் நாட்டின் முன்னேற்றம், மக்களின் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை,சமூக பிரச்சனை மேலும்,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் பிரச்சனை ஒன்று கூட தீர்க்க தகுதி இல்லாத ஒரு ஆட்சி தான் திமுக ஸ்டாலின் ஆட்சி.

உங்கள் சுயநலத்திற்காக ஆட்சி நடத்தி பல லட்சம் கோடிகளை ஊழல் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்ய மக்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும்?இவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றி கொள்ள மக்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும்?
கேரளாவில் இப்போது கூட அந்த மக்கள் அரசியல் தெரிந்தவர்களாக தான் இருக்கிறார்கள். அவர்கள் படிக்கவில்லை என்றாலும்,அரசியலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். கேரளா மக்களை அரசியல் கட்சியினரை ஏமாற்ற முடியாது. அங்கே,அரசியல்வாதிகள் எல்லாம் இப்படி கோடிகளில் ஊழல் செய்து வெளிநாடுகளில் யாராவது முதலீடு செய்ததாக செய்திகள் வந்திருக்கிறதா?
அரசியலுக்கு வந்தால் கூட அப்போது எல்லாம் 5%, 10% கமிஷன் எடுத்து கொள்வார்கள். அதை நியாயமானது.இப்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கொள்ளையர்களை மக்கள் தான் கூட்டணி அமைத்து வெற்றி காண வேண்டும். அதாவது புரியும்படி சொல்கிறேன்.
ஆடு மாடுகளை போன்று வாழ்கின்ற கூட்டம் பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த தகுதியற்றவர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படித்த சமுதாயம், அறிவார்ந்த சமுதாயம், சமூக நலன் மீது அக்கறை உள்ள சமுதாயம்,சிந்திக்கும் சமுதாயம்,உழைக்கும் சமுதாயம்,உழைப்பு கேற்ற ஊதியத்தையும்,படிப்புக்கேற்ற தகுதியான வேலைவாய்ப்பு கொடுக்காமல், இவர்களுடைய சொந்த நலனை பார்த்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நீங்கள் தான் முற்றப் புள்ளி வைக்க வேண்டும்.
இன்று இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசியல் தெரியாத முட்டாள்கள் இருக்கும் வரை கொண்டாட்டம் தான்.தெளிவாக சொல்லுங்கள். திமுக ஆட்சியின் ஊழல்களை பேசுவதற்கு பிஜேபியும், அதிமுகவும் கூட்டணி சேர்ந்து பேசுவது அரசியல் முக்கியத்துவம் ஆகாது.அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வாயிலே பேசி, கொடுத்துவிட்டு போவது தமிழக மக்களுக்கு அது ஒரு அரசியல் ஏமாற்றம்.

அதை காட்டிக் கொண்டு,எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிக்கை தொலைக்காட்சிகள்,அது அவர்களுடைய பெரிய பத்திரிக்கை வேலையல்ல. நீங்கள் எப்படி ஊழலற்ற ஆட்சியை கொடுக்கப் போகிறீர்கள் நீங்கள் என்ன மக்களுக்கான ஆட்சியை கொடுக்கப் போகிறீர்கள்? அதை சொல்லுங்கள். மேலும்,:
இந்த பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இந்த உண்மைகளை எல்லாம் சொல்லாமல் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், மக்கள் அதிகாரம் மக்களுக்கான விழிப்புணர்வை அரசியலில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும். அதுதான் மக்களுக்கான அரசியல் மாற்றம்.

இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளுக்கான அரசியல் மாற்றத்தை தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எது உண்மை?எது பொய்? என்பதை இரண்டையும் படித்து சிந்தியுங்கள்.