மே 25, 2025 • Makkal Adhikaram

அரசியல் கட்சிகள்! அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு ,ஊழல் செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட இடம் அல்ல.ஆட்சியாளர்கள்! கட்சிக்காரர்களை பெரிய ஆளாக நினைத்தால்! வாக்களித்தவர்கள் முட்டாள்கள். வாக்களித்தவன் பெரிய ஆளாக இருந்தால்! ஆட்சியாளர்களும். கட்சிக்காரர்களும் பணியாளர்களாக இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் தேர்வு.ஆனால்,

தமிழ்நாட்டில்! இன்று இளைஞர்கள் மத்தியில் உழைக்காமல் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், படிப்பு தேவையில்லை, உழைப்பு தேவையில்லை, அனுபவம் தேவையில்லை, உடம்பு மட்டும் கனமாக தேவை, அது ஒன்று இருந்தால், இன்றைய ஏதோ ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து, நாம் கொடி பிடிக்க வேண்டும்,கொடி கட்ட வேண்டும்,போஸ்டர் ஓட்ட வேண்டும்,
தேர்தல் என்று வந்தால் யாரைப் பார்த்தாலும், அந்த காலத்தில் சோ ஒரு படத்தில் நடிப்பார் ,கையெழுத்து கும்பிட வேண்டும். அதில் அவர் ஒரு வசனம் சொல்லுவார், அந்த நடிகை கும்பிடாமல் நடந்து வந்து கொண்டிருப்பார். கைய தூக்கினது, தூக்கின படி இருக்கணும். நீங்க வேலைக்கு ஆக மாட்டீங்க.
இப்போது அது போல தான் சீமான் அரசியல் மேடைகளில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். தோல்வி நிலையென நினைத்தால், அதுக்கும் கைதட்டி, விசில் அடிக்கிறார்கள். ஒரு வேலை அவர்களுக்கு ட்ரைனிங் கொடுத்து இருப்பார்களோ என்று நினைக்கிறேன்.

இது மாதிரி ஆட்கள் கிட்ட மாட்டிகொண்டு, படிச்சவன், உழைப்பவன், முன்னேற முடியாமல், தமிழ்நாட்டில் தத்தளித்து கொண்டிருக்கிறான். இவனுக்கெல்லாம் ஓட்டு உரிமை கொடுத்து, எதற்கும் உதவாத ஒரு கூட்டம் என்ன செய்யப் போகிறது?இதுவரை என்ன இந்த கூட்டம் தமிழ்நாட்டிற்கு செய்தார்கள்? வாயிலை பேசுவது தவிர, வேறு என்ன இந்த சீமான் மாதிரி ஆட்கள் எல்லாம், செய்த அரசியல் சாதனைகள் என்ன? ஒன்னு, எவனாவது சொல்ல முடியுமா?
அரசியல் தெரியாத கூட்டங்கள், இவர்கள் வந்து உழைப்பவனையும், அரசியல் தெரிந்தவனையும், படித்தவனை, சிந்திப்பவனை ,ஆள நினைப்பது,அதுவும் அரசியல் கட்சி என்று நினைத்து வாக்களித்தால், அவனைவிட முட்டாள் எவனும் இருக்க முடியாது. மேலும்,

தமிழ்நாட்டின் அரசியல்! வருங்காலத்தில் மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய நெருக்கடி உழைப்பவனுக்கும், படித்தவனுக்கும் வந்துள்ளது. என்பதை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஏனென்றால் அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவர்களை எல்லாம், கட்சிக்காரன் என்று காட்டிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சிகள், பணத்திற்காக அவர்களும், மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று ஷோ காட்டிக் கொண்டிருக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் நாட்டில் அதிகம். அதனால்,எதிர்காலம் உங்கள் நலனில் எந்த அரசியல் கட்சி நிற்கிறது? என்பதை சிந்தியுங்கள். வாயிலே பேசிவிட்டு போவது, அரசியல் அல்ல.
செயல்பாட்டுக்கு எத்தனை கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது? அதை வைத்து தீர்மானியங்கள். இல்லையென்றால் வருங்காலத்தில் உங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகும். வாக்களிப்பது பணத்திற்காக என்று நினைத்தால், நாட்டில் இது போன்ற உதவாத கூட்டங்களும், தகுதியற்றவர்களும் ,ஊழல்வாதிகளும் தேர்வு செய்யப்படுகிறார்கள். உங்களுடைய தேர்வு ஜனநாயகத்தின் தேர்வாக இருக்க வேண்டும்.

அது உங்களுக்காக உழைப்பவர்களை தேர்வு செய்வதில், கவனத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். எல்லோரும் பேசிவிட்டு, அறிக்கை விட்டு, போராட்டம் நடத்திவிட்டு, அரசியல் என்று பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், ஒரு போலியான அரசியலையும் போலியான பத்திரிகை பிம்பத்தையும், காட்டிக் கொண்டிருக்கிறது. அதுவல்ல ,உழைப்பும், உண்மையும் ,நேர்மையும் அரசியல் கட்சிகள் தேர்வு, அரசியல் கட்சியினர் தேர்வு, உங்களின் எதிர்கால கனவுகளை, எதிர்கால திட்டங்களை, நிறைவேற்றும் பிரதிநிதிகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை தீர்மானியுங்கள்.

கொள்ளையடிப்பவனையும் ஊர் தாலி அறுப்பவனையும், ரவுடிகளையும் நீ கட்சிக்காரன் என்று தீர்மானித்துக் கொண்டால், நீ முட்டாளாக இருந்தால் தான் அது முடியும். நீ அறிவாளியாக இருந்தால் ,ஒரு காலும், அவர்களைக் கட்சிக்காரன் என்று ஏற்றுக் கொள்ள மாட்டாய்.அதனால், நீ முட்டாளாக இருக்க விரும்புகிறாயா? அல்லது அறிவாளியாக இருக்க விரும்புகிறாயா? என்பதை நீயே முடிவு செய்து கொள்.