ஒரு காலத்தில் ஹோட்டல் உணவகங்கள் பேருக்காக நடத்தினார்கள். இப்போது பணத்திற்காக மட்டுமே நடத்துகிறார்கள். அதனால், மக்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த நோய் எப்படி வந்தது? இதற்கான பின் விளைவு என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த உண்மை புரியும்.
மேலும், தற்போதைய ஹோட்டல் உணவுகள், ரோட்டோரகடைகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள், (சைவ -அசைவ உணவகங்கள்) மெஸ் உணவகங்கள் ,ஒரு ஊருக்கு அல்லது ஒரு நகரத்திற்கு ஒன்று, இரண்டு தான் தரமான உணவை கொடுத்து வருகிறது. மற்றவை எல்லாம் பணத்திற்காக, இந்த உணவகங்கள் போட்டி போட்டு நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதில் மக்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டாலோ, அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களுடைய கவலை எல்லாம் பணம் சம்பாதிப்பதில் தான் முக்கிய நோக்கம். இது பற்றி உணவுத்துறை அதிகாரிகளிடம் விவாதம் கூட செய்துள்ளேன். எண்ணெய் கலப்படம் தான், மக்களின் இன்றைய காலத்தில் நோய்க்கு முக்கிய காரணம். கலப்பட எண்ணெய்களை வைத்து தின்பண்டங்கள் தயாரிக்கிறார்கள். மேலும் ஒரு தடவை உபயோகப்படுத்தப்பட்டது மீண்டும் உபயோகப்படுத்துகிறார்கள் தவிர, அந்த எண்ணெய் உபயோகப்படுத்துவதற்கு தரம் இல்லாமல் இருந்தாலும், அதிலே மீண்டும் உணவு தயாரிக்கிறார்கள். அதனால், நோய் ஏற்படுகிறது.
இது ஒரு புறம் என்றால், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் தரமான எண்ணெய்களை உற்பத்தி செய்வதில்லை. ஒரு சில நிறுவனங்கள் தவிர, பெரும்பாலும் கலப்பட எண்ணையை விற்பனை செய்கிறார்கள். இது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,இது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சந்திர போஸ் இடம் பேசியபோது, திருவள்ளூர் மாவட்டத்திலே அதிக அளவில் இந்த கழிவு எண்ணெய்களை வாங்கி, அதை பயோட டீசலுக்கு மாற்ற இங்கு தான் கொடுத்து வருகிறோம். அதற்காக எனக்கு அவார்டு கூட கொடுத்திருக்கிறார்கள் என்கிறார். ஆனால் அது முக்கியமல்ல,
இந்த சிறு உணவகங்கள் மக்களின் நலனில் அக்கறை காட்டாமல், கலப்பட எண்ணெய்களை பயன்படுத்தி செய்கின்ற அத்தனை உணவுப் பொருட்களிலும் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தும், பின் விளைவும் ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள். தற்போது கூட சென்னையில் கடந்த நான்கு மாத காலமாக இறந்தவர்களின் வயது சுமார் 30 லிருந்து 50 வயதுக்குள் இருக்கும் என்கிறார்கள். இதில் பெரும்பாலோர் மாரடைப்பால் இறந்திருக்கிறார்கள்.
இந்த பாமாயிலில் செய்யப்படும் பரோட்டா, சப்பாத்தி, தோசை எதுவானாலும் இன்று மாரடைப்புக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும், கேரளாவில் இது பற்றிய உணவுகள் எத்தகைய பின் விளைவுகள் ஏற்படுத்துகிறது? என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
தவிர ,ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. புரோட்டா மட்டுமல்லாமல், இன்னும் பல வகை உணவுகள் இந்த கொடிய மைதாவால் ஏற்படுகிறது .இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால், மைதாவால் செய்யப்பட்ட உணவு பிரபலம் அடைந்தது, மைதாவில் நார்ச்சத்து எதுவும் இல்லை., மேலும், அது மக்களுக்கு செரிமான சக்தியை குறைத்து விடுகிறது. இதை அறிய அடியோடு இரவில் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
மேலும் கோதுமை மற்றும் மைதா தயாரிப்பில் பெண் சாயில் பெராக்ஸைட் எனும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உடலுக்கு நச்சுத்தன்மை சேர்க்கக் கூடியது.இதன் மூலம் பின் விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய நோய்கள் பொது மக்களுக்கு ஏற்படுத்துகிறது. இதனால், சிறுநீரகம், இதயம் ,நீரிழிவு நோய், புற்றுநோய் ஏற்படுத்துகிறது. அதனால், பொதுமக்கள் இனியாவது உணவகங்களில் சாப்பிடும் போது, அவர்களுடைய சுகாதாரம் எப்படி இருக்கிறது? எண்ணெய் கலப்படமற்று இருக்கிறதா? மேலும், மனித வாழ்க்கை நோயினாலும் ,அரசியலினாலும், போராட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் மக்களுக்கு நோய் ஏற்பட
பல காரணங்களில் சுற்றுச்சூழல் மாசு, கலப்பட உணவுப்பொருட்கள், ஹோட்டல்களில் ரோட்டோர கடைகளில் ,விற்கப்படும் உணவு தரமானதாக இருப்பதில்லை. இதனால், தற்போது மனிதனின் ஆயுள் குறைந்து வருகிறது. இது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் டாஸ்மாக், இதுவும் மனிதனின் ஆயுளை அதிக அளவில் குறைக்க ஆரம்பித்து விட்டது.
மக்களின் நோய்க்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் கலப்பட உணவு பொருட்கள் ஹோட்டல்களில் தரமற்ற உணவு பழங்கால இயற்கை உணவுகளில் இருந்து மாற்றம் இதுதான் தற்போது மனிதனின் ஆயுளை குறைத்து இருக்கிறது இது ஒரு பக்கம் என்றால், டாஸ்மாக் அதுவும் மனிதனின் ஆயுளை அதிக அளவில் குறைத்து விட்டது. அதனால், மனித வாழ்க்கையில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் ஏற்படுகிறது இதை கவனித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.