கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்ற ஒரே கருத்து மட்டும் தான் உயர்நீதிமன்றத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சியும் இதுவரை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை .

அதாவது கருவேல மரத்தின் ஒரு டன் கட்டை இன்று மார்க்கெட் மதிப்பு ரூபாய் 4 ,500/-அதுவே அதை கரியாக்கி விற்பனை செய்தால், அந்த கரி எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது .இதை வியாபாரிகள் கருப்பு தங்கம் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் , இதனுடைய மதிப்பு ஒரு ஏக்கர் கருவேல மரத்தின் மதிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் சுமார் 12 லட்சம் என்கிறார்கள். இது தெரியாத சென்னை உயர்நீதிமன்றம் கருவேல மரத்தை அகற்றுங்கள் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

மேலும், இதை சரியாக புரியாத நீதிமன்றம் இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடைபெறுகிறது? என்பதை எந்த ஊடகங்களும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை. தவிர ,இதில் வனத்துறை , நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், கூட்டு சேர்ந்து பல லட்சங்களை பங்கு போட்டு வருகிறார்கள் .இந்த உண்மை நீதிமன்றத்திற்கு தெரியாது.
%20(1)%20(1).jpg)
மேலும், இது பற்றி சம்பந்தப்பட்ட கிராம மக்கள் புகார் அளித்தாலும், மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. மேலும், கருவேல மரம் அகற்றுவது பற்றி யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், அதன் ஊழல் புகாரை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உயர்நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இது சம்பந்தமாக பொதுமக்கள் வழக்கு தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் உயர்நீதிமன்றம் விசாரணை செய்து கிராம மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் முக்கிய கோரிக்கை.