தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

மே 03, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை . 

மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு சென்று வருவதற்குள், எவ்வளவு துன்பப்படுகிறார்கள்? அந்த அளவிற்கு வாழ்க்கையின் நிலைமை இந்த சுற்றுச்சூழல் பாதிப்பு, புவி வெப்பமயமாதலால் அதிகரித்துவிட்டது. வெப்பநிலை ஒரு நாளைக்கு 110 டிகிரிக்கு மேல் இருக்கிறது என்று மக்கள் பேசி வருகின்றனர். இதிலிருந்து இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும். இது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை.

இதற்கென்று ஒரு தனி திட்டத்தை உருவாக்கி அதில் பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதில் மத்திய அரசின் நிதி 50 சதவீதம், மாநில அரசின் நிதி 50 சதவீதம் இருக்க வேண்டும் .இந்த திட்டத்தை கிராம ஊராட்சிகள் அல்லது உள்ளாட்சிகள் இடம் ஒப்படைத்தால், இதை சரிவர செய்யாமல் கெடுத்து விடுவார்கள் .ஆனால், இந்த திட்டத்தை 100 நாள் வேலை செய்யக்கூடியவர்களை இந்த பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம் .ஒவ்வொரு கிராமத்திலும் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் எங்கு? எங்கு இருக்கிறது? என்பதை நில அளவையர்கள், பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டு (pollution control board ) நீர்வளத்துறை,கிராம நிர்வாக அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள் அதாவது வருவாய்த்துறை ,சுற்றுச்சூழல் துறை ,வட்டார வளர்ச்சி துறை இவர்களின் உதவியோடு ,ஒரு தனி திட்டத்தை இதற்காக கொண்டு வர வேண்டும்.

அப்போதுதான் இந்த செடிகளை வைத்தாலும், அதை பராமரிப்பதற்கு முக்கியமாக சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் கொண்ட விழிப்புணர்வு அமைப்பை உருவாக்க வேண்டும் .அப்போதுதான், இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த முடியும். இது மிக ,மிக அவசியமான திட்டம். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால்! இன்னும் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்படும்? உணவு பஞ்சம் ஏற்படும்? இந்த பருவநிலை மாற்றத்தால் என்னென்ன நடக்கும் ?என்பதை யூகித்துக் கூட சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு இதனுடைய பாதிப்புகள் இருக்கும்.

 அதனால், உடனடியாக திமுக அரசு, வருகின்ற புதிய மத்திய அரசு இரண்டும் சேர்ந்து இத்திட்டத்தை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். அது மட்டுமல்ல, இந்த பெட்ரோல் டீசல்‌ வண்டி வாகனங்களை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனங்களுக்கு அரசு அதிக அளவில் மானியங்கள் கொடுத்து, அதில் மக்களின் பயன்பாட்டுக்கு தேவையான வாகனங்கள் கொண்டு வர வேண்டும். அது மக்கள் வாங்கும் விலைக்கு குறைந்த விலையாக இருக்க வேண்டும்.இது தவிர ,

நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளை பாதுகாத்தல் காற்று மண்டலத்தை பாதிக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை பாதிப்பற்ற முறையில் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால், இளைய தலைமுறைகள் நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.இல்லையென்றால், மனித வாழ்க்கை மேலும் நரகம் தான்.

 அதனால் இதை தடுக்க ஒரே வழி, மத்திய மாநில அரசுகள் பசுமைக் காடுகள் வளர்ப்பு ஒரு தனி திட்டத்தை வரையறை செய்து கொண்டு வந்தால் தான் இதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் .அதன் பயன்கள் நாட்டு மக்களுக்கு போய் சேர வேண்டும். அது மிக ,மிக முக்கியமானது .கடமைக்கு மரத்தை வைத்துவிட்டு, தண்ணீர் ஊற்றாமல் ,பராமரிக்காமல் விட்டுவிட்டால் திட்டம் தோல்வி அடைந்து விடும்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 10,000 மர கன்றிலிருந்து 20 ஆயிரத்துக்கு மேல் மரக்கன்றுகள் இருக்க வேண்டும். அதேபோல் நகரங்கள் ,பேரூராட்சிகள், எல்லாவற்றிலும் எங்கெங்கு அரசு நிலம் உள்ளது? யார் யாரெல்லாம் அதை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்க? இதையெல்லாம் கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மிக்க பணி என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *