தமிழ்நாட்டில் சோழப் பேரரசுகளின் வாரிசுகளுக்கு, உதவி செய்து கௌரவித்த மலேசிய பிரஜை வீர வன்னிய காளை சத்ரிய அரச சமஸ்தானதிபதி சி பார்த்திபன்.

சமூகம் தமிழ்நாடு முக்கிய செய்தி

தமிழ்நாட்டில் எத்தனையோ அரச பரம்பரை இன்று காணாமல் போய்விட்டது. ஆனால், அவர்களுடைய வம்சாவழிகள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பது, உண்மையிலேயே மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி, அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத உதவியாகத்தான் அது இருக்க வேண்டும்.

 ஏனென்றால், இவர்களுடைய மூதாதையர்கள் வைத்திருந்த சொத்துக்கள் கோயிலுக்கு தானமாக, ஏழைகளுக்கு தானமாக ,எத்தனையோ பேர் இன்று ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்புகளாக, இருப்பதை மறுக்க முடியாத உண்மை. மேலும், சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறு பற்றி பள்ளியில் படிக்கும் போது, பாட புத்தகங்களில் பார்த்திருக்கிறோம்.

 ஆனால் அவர்களுடைய வம்சாவளி இன்று சாதாரண மக்களை விட ஏழ்மையான நிலைக்கு வந்தபோது, அவர்களால் அந்த அரசு கௌரவத்துடன் வாழ முடியாது. இந்த மக்களுடனும் சேர்ந்து வாழ முடியாது. ஏனென்றால் அந்த ராஜ பரம்பரையின் உயிர்த்துடிப்பு அப்படிப்பட்டது . அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சீர்வரிசை செய்ய முடியாமல், எத்தனையோ பெண்கள் இன்று கல்யாணமாகாமல் இருப்பதாக கேள்விப்பட்டேன். இது எல்லாம் காலத்தின் கொடுமை.

ஆனால், இப்படிப்பட்ட அரச குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட, இந்த சமூகத்தில் ஒருவர் இல்லை. ஆனால், இன்று வன்னிய சத்ரிய சாம்ராஜ்யம் என்று எத்தனையோ பேர், சோழர் பரம்பரை ,ஆண்ட பரம்பரை ,எல்லாம் மேடைகளிலும் ,பேனர்களிலும், சுவரொட்டிகளிலும், தான் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட வன்னிய குல சத்திரிய சமூகத்தில் ,பல கோடி பேரில் ஒருவராக பார்த்திபன் ஒருவரை பார்க்கிறேன். தவிர, தற்போது

 இந்த சமுதாயம் அடுத்தவனை ஏமாற்றி, இல்லையென்றால் சமுதாயத்தையே ஏமாற்றி பிழைப்பு நடத்துவதை தான் இன்றைய அரசியலாக உள்ளது. இது ராமதாஸ் ஆரம்பித்து வைத்த வேலை என்கிறார்கள் அச் சமுகத்தினர். அதற்கு முன்னால், இந்த சமுதாயம் உழைத்து, உண்மைக்கு பாடுபட்டு, வளர்ந்ததுள்ளது.

 மேலும், இன்று பணம் எப்படியும் சம்பாதிக்கலாம். ஆனால், கௌரவத்தை எப்படியும் சம்பாதிக்க முடியாத ஒன்று .அது உழைத்து தான் பெற முடியும். அதை போலி வேஷத்தால், விலைக்கு வாங்க முடியும் என்று இந்த சமுதாயம் ஏமாந்து கொண்டிருக்கிறது. அது இந்தக் கட்சி பேனர்களிலும், அமைப்பு பேனர்களிலும், சுவரொட்டிகளிலும் எழுதி, தங்களுக்கு பெருமை வந்து விட்டதாக ஏமாந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? என்றால், சமுதாயத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 இது படிப்பறிவு இல்லாத முட்டாள்களையும், மக்களையும், எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் தற்போது ,இந்த சமுதாயம் படிப்பறிவை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் படிப்பறிவு இல்லாத மக்களிடம் தான், இந்த வேஷங்கள், கோஷங்கள் எடுபடும். ஆனால், உண்மை நிதானமாக தான் இருக்கும் .பொய் இவர்களிடம் வேகமாக வேலை செய்து விட்டு விட்டது.

 அதனால் இனியாவது சமுதாயம் ஏமாறாமல் விழித்துக் கொண்டு உழைப்பை நம்பி வாழ்ந்தால், அதற்கான பலன் நிச்சயம் உண்டு. ஆனால், ஊரை ஏமாற்றலாமா? அல்லது சமுதாயத்தை ஏமாற்றலாமா? என்ற கனவோடு திரிபவர்களுக்கு இனி ஏமாற்றம் தான் கிடைக்கப் போகிறது. மேலும், இந்த சத்ரிய சாம்ராஜ்யத்தின் அரச வாரிசாக வாழ்ந்த குடும்பம் தான் பார்த்திபன் குடும்பம் .

இன்று அவர் மலேசியாவில் குடியேறி இருந்தாலும், அவருடைய மனைவி தமிழ்நாட்டைச் சார்ந்தவர் தான். எத்தனையோ கோடிகளை இந்த சமுதாயத்தை வைத்து சம்பாதித்தவர்கள் கூட, இப்படிப்பட்ட ஒரு சோழ சாம்ராஜ்ய பரம்பரைக்கு உதவ வேண்டும் என்ற ஒரு கருணை உள்ளம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் இல்லாத ஒரு அக்கறை, வீர வன்னிய காளை சத்ரிய அரச சமஸ்தானதிபதி பார்த்திபனுக்கு வந்துள்ளது .

அதை அவர் மனப்பூர்வமாக செய்த உதவி மட்டுமல்ல, அவர்களை கௌரவப்படுத்தி உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற ஒரு தைரியத்தையும் கொடுத்திருக்கிறார் என்றால், இவர் கோடி சத்திரியர்களில் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார் வீர வன்னிய காளை பார்த்திபன். இந்த இரக்க குணம், உதவி செய்யும் பண்பாடு, இது எல்லாம் சத்திரியர்களின் பிறவி குணம். ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக இருக்கும்போது, இவர்களெல்லாம் உண்மையான சத்திரியர்களாக என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள், அதற்கு தகுதியானவர்கள்.

மேலும், அப்படி வாழ்கின்ற சிலரில் தற்போது பார்த்திபன், மற்றொருவர் என்னுடைய நண்பர் முன்னாள் நகராட்சி கமிஷனர் கஜேந்திரன், இவர்கள் இந்த சமுதாயத்தின் மறக்க முடியாத ஒரு ஞாபகச் சின்னமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மறைந்தாலும், இவர் இப்படி தான் என்று வாழ்ந்து விட்டு செல்லும், இந்த சத்திரிய சாம்ராஜ்ய குலத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்.ஆனால், அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த சோழ சாம்ராஜ்யத்தையும், பாண்டிய மன்னர்கள் சாம்ராஜ்யத்தையும் ,மேடைகளில் பேசுபவதற்கு தகுதி உண்டா? என்பதை சிந்தித்துப் பார்த்தால், வன்னிய சமுதாயத்திற்கு, உண்மை புரியுமா?

மேலும், இந்த நிகழ்ச்சியை சத்ரிய சாம்ராஜ்ய காளை பார்த்திபன் ,மதுரை நியூ எல்லீஸ் நகரில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில், சோழப் பேரரசு சக்கரவர்த்தியின் வாரிசு சூரப்ப சோழனாரை வரவழைத்து, அப்பகுதியில் உள்ள சத்ரிய சாம்ராஜ்ய மக்களிடம் அறிமுகம் செய்து வைத்து ,சாஸ்திர சம்பிரதாயங்களுடன் அவருக்கு விருந்தோம்பல் நிகழ்ச்சியை செய்து வைத்துள்ளார்.

இது அவரால் செய்த சிறு உதவி ,விருந்தோம்பல் என்றாலும், அவர்களை நினைத்து கூட பார்க்காத, இந்த சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட ஒருவரின் மனித பிமானம் அரச வம்சத்திற்கு தான், அது பொருந்தும். மற்றவர்களுக்கு அது பொருந்துமா? என்பது தெரியவில்லை. அவருடைய இந்த நிகழ்ச்சியை உண்மையான வன்னிய குல சத்திரியர்கள் பெருமையுடன் பாராட்டி, வரவேற்றுள்ளனர்.

அவர்களுடன் சேர்ந்து மக்கள் அதிகாரம் சார்பில், வீர வன்னிய காளை சத்ரிய அரச சமஸ்தானதிபதி இந்திய ராஜபுத்திர சத்ரிய சாம்ராஜ் அரச அறவாரிய தலைவர், நிறுவன பேராசிரியர் டாக்டர் லயன் பார்த்திபன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டும், வாழ்த்துக்களும் சமூகத்தின் சார்பில்…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *