தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்குமா ?

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சாமானிய மக்களின் நம்பிக்கையாக உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் சார்பில் மக்கள் அதிகார பத்திரிகையின் கோரிக்கை

https://youtu.be/uHo6DV8gWq8

(மக்கள் அதிகாரம் சமூக வலைதளத்தில் பெரணமல்லூர் அரிய பாடி ஊராட்சி மன்ற செயலாளர் ரவி பதிவிட்ட ஒரு செய்தி )

ஐயா அமைச்சர்கள் நிலைமையே இப்படி இருக்கும்போது, ஊராட்சி தலைவர்கள் நிலைமை எப்படி ஐயா இருக்கும்? இது தெரியாமல் பெரணமல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் ரவி உண்மையை சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களா ? எங்கய்யா சாமானிய மக்களுக்கு நீதி எங்கே கிடைக்கப்போகிறது? இனி நீதிமன்றம் தாயா இந்த பஞ்சாயத்துகளை தீர்க்க முடியும். வேறு வழியே இல்ல சாமி. ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக அதிகாரிகள் மாறிவிட்டார்கள். அதனால் கிராமத்தில் அப்பாவி மக்கள் கத்தி விட்டு சாக வேண்டியது தான். மேலும்,

இதில் எப்படியும் பேசி, எப்படியும் வாங்கி சாப்பிடும் திறமைசாலிகள் கிராமத்தில் பிழைத்துக் கொள்வார்கள். இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் போராடிக் கொண்டிருப்பார்கள்.

இந்த நிலை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளது. ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக மாவட்ட ஆட்சியர்கள் இருக்கிறார்கள். எந்த பிரச்சனையும் கண்டு கொள்வதில்லை. மாவட்ட அளவில் இதுதான் என்றால், தலைமைச் செயலகத்திலும் உள்ள உயர் அதிகாரிகள் நிலைமை அதே தான்.

 இனி எப்படி பொதுமக்கள் பாதுகாக்கப்பட போகிறார்களோ தெரியவில்லை.. அவர்களுடைய சமூக நலன் பிரச்சனைகள் தூக்கி ஓரம் கட்டுங்கள், முடிந்தால் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அதை தீர்க்க முடியுமா ?என்பதை தவிர வேறு வழியில்லை. எனவே, உயர் நீதிமன்றம் தான் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

இனி எந்த வழக்கு போட்டாலும் ,அதை தள்ளுபடி செய்யாமல் பிரச்சனைகளுக்கு உரிய தேர்வு ஏற்படுத்தினால் தான், தமிழ்நாட்டில் பொதுமக்கள் வாழ முடியும். இந்த ஆட்சி இருப்பதும் ஒன்று மக்களுக்கு  இல்லாதது ஒன்று. எனவே, இனி தமிழ்நாட்டில் நிலைமை என்ன ஆகப்போகிறதோ யாருக்குத் தெரியும் …………? அதனால்,

சாமானிய மக்களின் நம்பிக்கையாக உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் சார்பில் மக்கள் அதிகார பத்திரிகையின் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *