தமிழ்நாட்டில் திமுக & பிஜேபி டப் ஃபைட்டில், பிஜேபி வளர விடாமல் தடுக்க திமுகவின் ரகசிய அரசியல் நடவடிக்கை என்ன ?

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிஜேபி தமிழ்நாட்டில் வளர்வதை தடுக்க திமுக எடுக்கும் ரகசிய நடவடிக்கைகள் என்ன? என்றால் குறிப்பிட்ட பிஜேபியின் நிர்வாகிகள் மீது காவல்துறை வைத்து வழக்கு போடும் டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாவட்டத்தின் எஸ் பி களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவாம். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியின் ஆதரவு ஆன விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் மற்றும் அதற்கு ஆதரவான சிறிய கட்சிகள் பற்றிய அரசியல் கள நிலவரங்களை கண்காணித்து, அதன் முக்கிய நிர்வாகிகள், விசுவாசிகள் பட்டியல் ஒன்று தயாரித்து தமிழக காவல்துறையின் டிஜிபி மற்றும் ஏடிஜிபி காவல்துறையில் உள்ள முக்கிய உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்துள்ள அசைன்மென்ட் .

அதனால் ,வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் இந்த பட்டியலில் உள்ளவர்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லியோ அல்லது உருவாக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதனால், அவர்கள் கோர்ட் ,ஜெயில், பெயில் என்று அல்லல்படும் அளவிற்கு அவர்கள் நிலைமை இருக்கும் என்கிறார்கள். இதனால், தேர்தலில் கவனம் செலுத்த முடியாதபடி அவர்களுக்கு ஒரு பாதிப்பை உருவாக்க திமுக அரசு அரசியல் செய்ய தீர்மானித்துள்ளது என்கிறார்கள் ,அரசியல் வட்டாரத்தினர். மேலும்,

இந்த நிர்வாகிகளில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை காவல்துறை தட்டி தூக்கி விடும். அது மட்டுமல்ல, அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனைகளை கொடுத்து, அவர்களை அரசியலை விட்டு ஓட வைப்பது என்ற ரகசிய தகவல் ஒரு பக்கம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம், இந்து அமைப்புகள் இந்து முன்னணி போன்ற அமைப்புகளில் உள்ள நிர்வாகிகளை எந்த அளவிற்கு அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க முடியுமோ, அதையும் அரங்கேற்றி வருகிறது.

 அந்த சம்பவம் தான் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கிராமத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட, அவர்களுக்கு காவல்துறையே எதிர்ப்பு தெரிவித்து, அந்த கிராம மக்கள் மீது வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றியுள்ளது. இது பல்வேறு இடங்களில் நடந்து, சில வந்ததும், வெளிவராததுமாக உள்ளது. விநாயகர் சிலை வைத்து வழிபட எங்களுக்கு உரிமை இல்லையா?அதை ஏன் தடுக்கிறீர்கள் என்பது பொதுமக்கள் கேள்வி?இந்த விஷயத்தை திமுக தவறு செய்கிறது. இது முதல்வருக்கு தெரியுமா? தெரியாதா?என்பது தெரியவில்லை, இது தெரிந்த அரசியல் செய்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. ஆனால், இவை திமுகவிற்கு நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடும் எதிர்ப்பை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 நீங்கள் எதை மதவாத சக்திகள் என்று சொல்லுகிறீர்களோ, அதுவே அவர்களின் வழிபாட்டு உரிமையாகி விட்டது. எந்த சனாதன சக்தியை அழிப்பேன் என்கிறீர்களோ, அதுவே அவர்களின் தெய்வீக வாழ்வியலின் கலாச்சாரம் ஆகிவிட்டது. இதையெல்லாம் ஒரு காலம் மக்களிடம் ஒரு மூட நம்பிக்கையாக பேசி வந்தது, அரசியலுக்கானது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

 அரசியலில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், எல்லோரும் இன்று இறை நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் திமுக மற்றும் திமுகவின் கூட்டணியான திருமாவளவன் கூட இப்போது மாற்றி பேசுகிறார். அந்த அளவிற்கு மக்கள் நம்பிக்கை ,தெய்வத்திடம் இருக்கிறது .மேலும், அரசியல் கட்சிகளில் பேசுபவர்கள் கூட  தெய்வ நம்பிக்கையில் சனாதன தர்மத்தை கடைப்பிடித்து தான் வாழ்கிறார்கள்.கொள்கை என்று பேசிவிட்டு ,மக்களிடம் இனி ஏமாற்ற முடியாது.

அது எப்படியாவது சமூக வலைதளங்களிலும், சோசியல் மீடியாவிலும், இணையதளத்திலும் ,பத்திரிகைகளிலும் வெளிவந்து விடுகிறது. அதனால், இதை வைத்து திமுக அரசியல் செய்தால் , அதற்கு பெரும் சரிவை சந்திக்கும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *