தமிழ்நாட்டில் மக்களுக்கு !அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத வரை ! மக்களுக்கான மக்களாட்சி கிடைக்காது.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் கட்சி என்றால் ,அதாவது மக்களுக்கு அந்தந்த பகுதியில் தெரியக்கூடிய கட்சிகள் வரை இதில் பெயர் குறிப்பிடுகிறேன். திமுக, அதிமுக, பாஜக ,பாமக, காங்கிரஸ்,தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் அமுமுக கம்யூனிஸ்டுகள் , முஸ்லிம் லீக்,

இது தவிர ,எண்ணற்ற லெட்டர் பேடு கட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கிறது. சுமார் ஒரு பதினைந்து கட்சிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் மக்களுக்கு பெயர் தெரியும் அளவில் இருக்கிறது. இந்த கட்சிகளால் மக்களுக்கு என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அவர்கள் உழைத்தால் தான் உணவு. ஆனால் இந்த கட்சிக்காரர்கள் உழைக்காமல் கோடீஸ்வரர்களாக கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகக் கூடிய அது ஒரு வியாபார நிறுவனமாக ஆக்கிவிட்டார்கள். அதாவது அரசியல் என்பது அரசியல் கட்சிகளால், இன்று வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் அது சேவை செய்யும் அமைப்பாக இருந்தது. இப்போது அது பணத்திற்காக மக்களிடம் தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் ஒரு நிறுவனமாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆக்கிவிட்டார்கள்.

இதற்கு மற்றொரு உதாரணம் பத்திரிக்கை துறை! இந்த பத்திரிகை துறையில், இன்று தமிழ்நாட்டில் பெயர் தெரிந்த பத்திரிகைகள், பெயர் தெரியாத பத்திரிகைகள் என்று இரண்டு வகை உண்டு. அதுவும் பத்திரிகை என்று அது சொல்லிக் கொண்டிருக்கிறது .அவர்களும் பத்திரிகையாளர்கள் என்று அவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுடைய செய்தி தினமும் ஒரு நாளாவது இணையதளத்திலோ அல்லது பத்திரிகைலோ வருகிறதா? என்றால் அது பார்க்க முடியாது. அப்படியாக அந்த செய்திகளை அவர்கள் ஏதோ ஒரு பத்திரிகையில் இருந்து காப்பி அடித்து போட்டாலும், அது மக்களுக்கு ,எந்த பயனும் இருக்காது. இப்படி இந்த பத்திரிகை துறையில் தகுதியற்ற பத்திரிகைகளும் ,பத்திரிகையாளர்களும் ,செய்தியாளர்களும், போலிகளாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதுவே தான் இந்த அரசியலிலும், அரசியல் கட்சிகளிலும் ,போலிகளாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,ஒன்றுமே இல்லாத ஓ .பன்னீர்செல்வம் இவர் போய் ஸ்டாலினை சந்தித்ததால், அந்த செய்தி !தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில், பரபரப்பாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .அதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

இவர் ஸ்டாலினை போய் சந்தித்ததால், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விடப் போகிறதா? இல்லை வறுமை நீங்க விடப் போகிறதா? இல்லை கஷ்டங்கள் தீர்ந்து விடப் போகிறதா? எதுவுமே இல்லை . இல்லை தமிழ்நாட்டு அரசியலை புரட்டி போட்டு விடப் போகிறாரா? எதுவுமே இல்லை.ஆனால்,

இந்த செய்தியின் பரபரப்பு ,தமிழகத்தில் சோசியல் மீடியாக்களிலும், டிவிக்களிலும், பத்திரிகைகளிலும், ஏதோ ஒரு பெரிய மாயை கிரியேட் பண்ணி, அதுக்குள்ளே அவரை நிறுத்தி விடுகிறார்கள். இது எல்லாம் மக்களுக்கு ஏன் சொல்கிறேன் ?என்றால் ,இதுதான் போலி பத்திரிக்கை பிம்பம்.

இதனால், தமிழக மக்களுக்கு என்ன பயன்? பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக இருந்தபோது என்ன சாதித்து விட்டார்? என்ன நன்மை செய்து விட்டார்? அவர் சாதாரண டீ கடை வைத்திருந்தவர், இப்போது 5 கப்பலுக்கு அதிபதி, அடுத்தது சுமார் ஒரு லட்சம் கோடி சொத்துக்கு அதிபதி ,இதுதான் தமிழ்நாட்டில் அவருடைய சாதனை. இதற்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? மேலும்,

மக்கள் நமக்கான அரசியல் எது ?என்பதை தேர்வு செய்ய வேண்டும். நமக்கான அரசியல் கட்சி எது? மக்கள் நலனில் ஈடுபாடு கொண்டுள்ளது எது?மக்களிடம் யார் அந்த அளவுக்கு நெருங்கி இருக்கிறார்கள்? இதுதான் தற்போதைய அரசியல் கட்சிகளிடம் நாம் எதிர்பார்க்க வேண்டிய முக்கிய அரசியல்.

இந்த அரசியல் ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் .அது இல்லாதவரை ஊடகங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இப்படிப்பட்ட ஒரு அரசியல் போலி பிம்பத்தையும், போலியான ஊடக பிம்பத்தையும், தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தி ,மக்களை ஏமாற்றி அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஒரு பக்கம் பத்திரிகை வியாபாரம் .இன்னொரு பக்கம் அரசியல் வியபாரம் .

இந்த இரண்டு வியாபாரமும் சரியான லாபத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், மக்களுக்கு இந்த வியாபாரத்தால் பயனில்லை. ஓட்டுக்கு பணம் வாங்கும் முட்டாள்கள் கூட்டம் இருக்கும் வரை, இந்த இரண்டு வியாபாரிகளுக்கும் லாபம் தான்.

( தமிழ்நாட்டில் யோகி போல் ஒரு அரசியல் கட்சி தலைவரும் முதல்வராக இருக்க யாருக்கு தகுதி இருக்கிறது எந்த ஊடகமாவது அதை சொல்ல முடியுமா? )

அதனால், வருங்கால இளைய தலைமுறையினர் ,இந்த வியாபார அரசியலை, வியாபார பத்திரிகை நிறுவனங்களை, தூக்கி எறியுங்கள்.

அப்போதுதான் உங்களுக்கான அரசியல் எது? என்பதை உங்களால் தேர்வு செய்ய முடியும். நீங்கள் அந்த தகுதிக்கு உங்களை உருவாக்கிக் கொண்டால், இந்த அரசியல் கட்சிகள உங்கள் காலடியில் வந்து நிற்பார்கள். மேலும் ,தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பத்திரிகைகள் இருக்கிறது . அதாவது (RNI ) வாங்கிய பத்திரிகைகள் .அதில் எத்தனை பத்திரிகைகள் தினமும் மக்களுக்கான செய்திகள் எத்தனை அவர்களுடைய பத்திரிகைகளில் வெளியிடுகின்றன என்று விரல்விட்டு எண்ண முடியும்.

அந்த செய்திகள் அது உண்மை செய்தியா? அல்லது போலி செய்தியா? என்பதும் தெரியாமல் படித்துக் கொண்டிருக்கும், மக்களும் உண்டு. அதனால் , மக்களாகிய உங்களுக்கு என்ன பயன்? என்றால் எதுவும் இருக்காது. பக்கங்களை பார்த்து படித்துக் கொண்டு போவாய்.

அதனால் ,அது பெரிய பத்திரிக்கை என்று நினைத்து ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் 100 செய்தி போட்டாலும், மக்கள் அதிகாரத்தில் வருகின்ற ஒரு செய்தியை ஒப்பிட்டுப் பாருங்கள். மேலும்,

இந்த உண்மைகள் எந்த பத்திரிகையிலும், வெளிவராது. அவர்கள் சொல்லும் பொய்களை உண்மையாகி வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள். இதில் யார் அறிவாளி ?யார் முட்டாள்கள் ?என்பதை இனியாவது சிந்தியுங்கள்.

அப்போது தான், இந்த அரசியல் ஏமாற்று கூட்டத்திடமிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க முடியும். உங்களை பாதுகாக்க கூடிய அரசியல் எது? அரசியல் கட்சி எது? என்பதை முடிவு செய்து தேர்தலில் ஒவ்வொருவரும் இவர்களை வெற்றி கொள்வதாக நினைத்து வாக்களியுங்கள்.

அதற்கு முன் அதற்குத் தகுதியானவர்கள் யார் ?என்பதை தேர்வு செய்வது தான் உங்களுடைய தகுதி, திறமை அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது.அது மட்டுமல்ல அது உங்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியது என்பதை புரிந்து ஜாதி, மதம் , கடந்து அதை தேர்வு செய்யுங்கள்.

மேலும்,
அதற்கு தகுதி அவர்களுக்கு ,அந்த கட்சிக்கு இருக்கிறதா ?என்பதை ஒரு முறைக்கு 100 முறை ஆய்வு செய்யுங்கள். மக்களின் குரலாக மக்கள் அதிகாரம்.- ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *