கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதன் விளைவு தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தற்போது உள்ளே நுழைந்து விட்டது. இந்த மணல் கொள்ளைக்கு முக்கிய காரணம் அரசியல்.
யார்? ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக மணல் மாபியாக்கள் மாதம் இத்தனை ஆயிரம் கோடி அல்லது வருடத்தில் இத்தனை ஆயிரம் கோடி என்ற கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தில் இந்த மணல் வியாபாரம் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த பணத்தை எதில் முதலீடு செய்வது என்று புரியாமல் மணல் மாபியாக்கள், இந்த கருப்பு பணத்தை வெளிநாடுகளில் கொண்டு போய், அங்கிருந்து ஏதோ ஒரு கம்பெனி பெயரில் இங்கே கொண்டு வந்து வெள்ளையாக்கும்போது, அது வருமானவரித்துறைக்கும், அமலாக்கத் துறைக்கும், சிபிஐ க்கும் தெரிந்து விட்டது .அதில் சிக்கிய மணல் மாபியாக்கள் சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்.
மேலும், இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? யார் இதற்கு முக்கிய காரணம்? என்பதை மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில் மக்கள் அதிகாரத்தில் வெளியிட்ட செய்தியில் சில குறிப்புக்கள் அமலக்கத்துறைக்கு கொடுத்திருக்கலாம்.மக்கள் அதிகாரத்தில் வந்த செய்தி மத்திய உளவுத்துறைக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் . அதன் பிறகு தான் தற்போது தமிழ்நாட்டில் பத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த செய்தி எந்த பத்திரிக்கையிலும் வெளிவரவில்லை. அது நன்றாக தெரியும். மேலும், இதற்கு முக்கிய காரணம் மாவட்ட ஆட்சியர்கள் இவர்கள்தான் இறுதியாக அதற்கு அனுமதி கொடுப்பவர்கள். இவர்கள் எந்த ஆற்றில் எத்தனை மீட்டர் என்ற அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது? அல்லது எத்தனை லோடு இந்த ஆற்றில், இந்த ஏரியில், இந்த குவாரியில் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டது? அதன் விவரம் எதுவும் இவர்கள் ஆய்வு செய்வதில்லை. மேலும்,
இந்த மணல் டெண்டர் எடுப்பவர் யார் ?அவருடைய சொத்து விவரம் என்ன? அதிகமாக எடுத்தால் அவரிடமிருந்து அதை ரெக்கவரி செய்ய முடியுமா? என்பதைப் பற்றி யாரும் எந்த அதிகாரியும், இதுவரை ஆய்வு செய்வதில்லை. இப்படிதான் இந்த மணல் கொள்ளையும், சவுடு மண் கொள்ளையும் ,மலைகள் கொள்ளையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த டெண்டர் எடுப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் மீது எந்த சொத்தும் இருக்காது. அப்படியே அதிகாரிகள் கடமைக்கு வழக்கு தொடர்ந்தாலும் அல்லது அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அந்த குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடர்ந்தாலும், புகார் அனுப்பினாலும், மாவட்ட ஆட்சியர்கள் கண்டு கொள்வதில்லை. காரணம் ஆளும் கட்சியின் கிரீன் சிக்னல்.
தவிர, மணல் குவாரி அல்லது சவுடு குவாரி அல்லது மலைகள் குவாரி எடுப்பவர்களின் சொத்துக்கள் இருந்தால்தான் அவரிடம் இருந்து அந்த சொத்தையாவது பறிமுதல் செய்ய முடியும். எதுவும் இல்லாதவரிடம் எப்படி இதை ரெக்கவரி செய்ய முடியும்? இவர்களை பினாமியாக வைத்து தான், இந்த கொள்ளைகள் அரசியல் கட்சியினர் மூலம் தொடர்கிறது. இதனால், கிராம மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே மோதல்கள் உருவாகும். எதிர்ப்பவர்கள் மீது ஆளும் கட்சியின் அதிகாரத்தை வைத்து காவல்துறையில் பொய் வழக்குகள், அரசியல் அடியாட்களை வைத்து மிரட்டுவது, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும்,இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்று பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் அதற்கு மாவட்ட ஆட்சியர்கள் சரியான விளக்கம் கொடுக்காமல் அசிங்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதே போல், இதற்கு இடத்தை தேர்வு செய்யும் அதிகாரிகள் அதாவது நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை எல்லைகள் வரையறுப்பதில்லை. 3000 ,5000, 10,000 லோடு என்று தான் குறிப்பிடுவார்கள் .அந்த லோடு எந்த பகுதிக்குள், எத்தனை மீட்டர் ஆழம் எடுக்க வேண்டும்? எத்தனை நாள் எடுக்க வேண்டும் ?இது எதுவும் இருக்காது. இதுதான் மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பது அரசியல். ஆனால், அவர்களை வைத்துதான் இந்த மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதற்கு பெரும்பாலான அதிகாரிகள் ஒத்து ஓதுவார்கள். அவர்களுக்கும் கமிஷன் போகும் .ஒத்து வராதவர்களை உடனடியாக அங்கிருந்து தூக்கி அடிப்பார்கள். அல்லது அவர்களை ஓரம் கட்டுவார்கள் .அல்லது அவர்களை பழி வாங்குவார்கள். இவ்வளவு சம்பவமும் ஆட்சி அதிகாரத்தின் எல்லை மீறிய சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது .
தற்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி , அவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது .இனி எந்த மாவட்ட ஆட்சியரும், அதில் இருந்து தப்பிக்க முடியாது. அதனால், தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க துவங்கி விட்டது. அது மட்டும் அல்ல, கிராம மக்களின் எதிர்ப்பு மற்றும் புகார்கள் யார் செத்தாலும் பரவாயில்லை ,யார் மீது பொய் வழக்கு போட்டாலும் பரவாயில்லை, என்றுதான் இந்த மணல் கொள்ளை சம்பவங்கள் தொடர்கிறது.
இனி கிராம மக்கள் மணல் கொள்ளைக்கும், சவுடு மண் கொள்ளைக்கும், மலைகள் கொள்ளைக்கும், சிபிஐ க்கும், அமலாக்கத்துறைக்கும், வருமான வரித்துறைக்கும் நிச்சயம் புகார் அளிப்பார்கள் என்பது உறுதியாகிவிட்டது.