அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் மணல் கொள்ளையில் வந்த பணத்தை வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் சொத்து வாங்கியவர்கள், பதுக்கியவர்கள் பற்றிய பட்டியலை எடுத்து நடவடிக்கை எடுத்தது. அது பிஜேபியின் அரசியல் அதிகாரம். இதில் அரசியலும் இருக்கிறது.
ஆனால், இங்கே அமலாக்க துறையில் யாரோ ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி அவர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பிடிபட்டார். அதனால் ஒட்டுமொத்த அமலாகத்துறை அதிகாரிகளையும், தவறானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.அவர்கள் அனைவரும் பிஜேபியின் ஏஜென்ட்கள் என்று சொல்லிவிட முடியாது தவிர, ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளில் சிலர் இருக்கிறார்கள். அதனால், ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும், ஏன் லஞ்ச ஒழிப்பு துறையில் கூட இருக்கிறார்கள் என்று ஒட்டுமொத்தமாக அரசு அதிகாரிகளை தவறானவர்கள் என்று சொல்லிவிடலாமா?இது தவிர, யாரோ ஒரு நீதிபதி செய்த தவறுக்காக ஒட்டுமொத்த நீதிபதிகளும், நீதிமன்றமும் தவறு என்று சொல்லிவிடலாமா?
மனசாட்சி அதிகாரிகள், நேர்மையானவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? சட்டத்துக்கு பயந்து நடப்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? இது தவிர, பத்திரிக்கையில் பொய்யான செய்தியும், மனசாட்சிக்கு விரோதமான செய்திகளையும், ஒரு சில கட்சிக்கு ஆதரவாகவும், ஒரு சில கட்சிக்கு எதிராகவும், செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை துறையில் இருந்து வருகிறது. அதனால், ஒட்டுமொத்த பத்திரிகை துறையும், தவறானது தவறானவர்கள் என்று சொல்லிவிடலாமா? பேசத் தெரிந்தவர்கள் எப்படியும் பேசலாம். அதை எல்லாம் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கூட்டத்தில் கை தட்டும் கூட்டம், உடம்பையே மூலதனமாக கொண்டுள்ள கூட்டம் இவர்கள் தான் இதை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் கூட அதை ஏற்றுக் கொள்வார்களா? என்பது அவரவர் மனசாட்சிக்கு உள்ள ஒரு கருத்து. அதனால், இந்த மாநில மத்திய அரசின் அதிகார மோதல்கள் எங்க போய் முடியும்? தெரியவில்லை .ஒரு பக்கம் மாநில அரசுக்கு சாதகமான பத்திரிகை, தொலைக்காட்சிகள் அரசுத்துறை அதிகாரிகளை பிஜேபியின் அரசியல் கட்சி ஏஜெண்டுகளாக சித்தரிக்கிறது. மற்றொரு பக்கம் நடுநிலையான ஊடகங்கள், சமூக நல ஊடகங்கள் இது தவறானது என்பதை சுட்டிக்காட்டுகிறது .அதிகாரிகளை அரசியல் கட்சியினராக பார்க்க கூடாது.
அதிகாரிகளில் சிலர் அரசியல் கட்சியினராக செயல்படுவதால் வருகின்ற விளைவுதான் இப்போது ஊடகங்களில் பேசுகின்ற ஒரு கருத்து. இன்று திமுக நாளை எந்த கட்சியோ யாருக்கு தெரியும்? அதனால், அதிகாரிகள் அவரவர்களுக்கு உள்ள அதிகாரத்தில் பணியாற்ற வேண்டும். அரசியல் கட்சியினராக பணியாற்றியதன் விளைவு தான், இன்று மணல் கொள்ளையில் மாட்டி இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர்கள் தற்போது இவர்கள் எல்லாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவறு செய்துள்ளது என்பதை திமுக அரசே இங்கே நிரூபித்து காட்டியுள்ளது. எதற்காக இந்த இடம் மாற்றம்? என்ற ஒரு கேள்வி எழும்.
அடுத்தது அவர்கள் எங்கு போனாலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அடுத்தது, அமலாக்கத்துறை உச்சநீதிமன்ற உதவியுடன் களத்தில் இறங்கினாலும் ,ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழகத்தில் நடக்கின்ற ரெய்டு, அமைச்சர்களின் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், ஒவ்வொரு நடவடிக்கையும், உச்சநீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறை கொண்டு சென்றால் ,இந்த பிரச்சனை முக்கிய தீர்வாக இருக்கும்.
மேலும், அமலாக்க துறையின் மீது திமுக வைக்கின்ற குற்றச்சாட்டுக்கு உச்சநீதிமன்றம் தான் சரியான தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.தவிர, இப் பிரச்சனையை பொதுமக்கள் மத்தியில் திமுக அதிகம் பேசுவதில் இருந்தே, உண்மை நிலை மக்களுக்கு புரிந்து விட்டது. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது .திமுக, பிஜேபியின் அரசியலை மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் இல்லை என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி?