ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram
எந்த ஒரு பாதிப்பும் வருவதற்கு முன் தடுக்க வேண்டியது அதிகாரிகளின் முக்கிய வேலை. அந்த வகையில் நிறுவனத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கிராமங்களில் கரை உடைக்கப்பட்டு இருக்கிறது? பலவீனமான இடங்கள் எந்தெந்த ஏரிகள்? மற்றும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய ஏரிகள் எத்தனை? அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? மேலும் சென்னைக்கு தொடர்ந்து மழை வெள்ளம் வரும்போதெல்லாம் சென்னை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் .அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
மழை வெள்ளம் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பது தான் அரசியல் வேலையாக உள்ளது. இது அலட்சியமான வேலை. அப்போது எதிர்க்கட்சிகளும், அரசியல் பேசிக் கொண்டு செய்து கொண்டிருப்பது தவறான வேலை. இப்போது அதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். ஆனால், மக்கள் பாதிக்கப்படும் போது குரல் கொடுத்து பேசுவது அந்த மக்களுக்கு அது ஒரு இலவச ஆறுதல். அதைவிட இப்போது தமிழக அரசு ஏன்? இவர்கள் மழைக் கால வெள்ள நடவடிக்கை எந்தெந்த பகுதிகள் எடுக்கப்பட்டிருக்கிறது? என்று கேள்வி கேட்கலாம். அதை ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள்.
மக்கள் வேதனை படும்போது, தற்போது அரசியல் செய்வது ,ஆறுதல் கூறுவது, அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவது, இதையெல்லாம் அரசியல் வழக்கமாக்கி விட்டார்கள் .மக்களுக்கும் வெள்ளை நீர் வீடுகளில் புகுந்தால் அதற்கு நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வாங்கிய பழக்கப்பட்டு விட்டார்கள் .இது எல்லாம் மக்கள் செய்கின்ற தவறுக்கு மழை நீர் வரத்தான் செய்யும்.
ஏனென்றால், மழை வெள்ளநீர் எங்கு போய் சேரும்? அது சேர வேண்டிய இடம் ஏரி ,குளம், குட்டை அங்கு தான் அதனுடைய இருப்பிடம் .ஆனால், அதனுடைய இருப்பிடத்தில் மக்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி விட்டால், அங்கே தண்ணீர் வரத்தான் செய்யும்.
ஏனென்றால், அது தண்ணீர் வசிக்கும் பகுதி .மக்கள் வசிக்கும் பகுதி அல்ல. அதைத் தெரிந்தே தவறு செய்கின்ற மக்கள், அலட்சியமாக இருக்கின்ற அரசு . மக்கள் பாதிக்கப்படும்போது, அதை காட்டிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் இதையெல்லாம் பெரிய செய்தியாக காட்டிக் கொண்டிருப்பது, பந்தா காட்டும் வேலை.
எதை செய்ய வேண்டுமோ ,அதை அரசாங்கம் செய்யாமல் ,மக்கள் செய்கின்ற தவறுக்கு உடந்தையாக இருந்துவிட்டு, இதை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதும் ,ஆளும் கட்சிகள் இதற்கு ஒரு அரசியல் செய்வதும், இவையெல்லாம் தேவைதானா? சிந்திப்பீர்.