தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளNIA (National investigation agency) மாவட்டம் முழுவதும்கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை.

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் தீவிரவாத அச்சுறுத்தல், மற்றொரு பக்கம் அரசியல் ரவுடிகளின் ஆதிக்கம் ,இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் சுதந்திரம், உயிர் பயம், இதை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் இருந்து வருகிறார்கள்.

இந்த அரசியல் ரவுடிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்களை பயன்படுத்தி சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும், உண்மைகளை தட்டி கேட்பவர்களுக்கு எதிராகவும், மறைமுகமாக பயன்படுத்துகிறார்கள். இது தவிர ,நேர்மையான அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக இருந்து வருகிறது. இதற்கெல்லாம் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

 அவர்களுக்குள் சினிமாவில் வருகின்ற கருப்பாடுகள் போல், இருவரும் கைகோர்த்து இருப்பது தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு களங்கம். இப்போதெல்லாம் காவல்துறை யார் பக்கம் இருக்கிறது ?என்று சொல்வதற்கு பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு எல்லாம் ஒரே தீர்வு NIA தான். NIA தமிழ்நாட்டின் மாவட்டம் தோறும் உடனடியாக கொண்டு வர வேண்டும்.

அதிலும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ,இங்கு தான் தமிழ்நாட்டிலே ஊழலில் முதலிடம் பெறுகின்ற மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம். இங்கு ஜாதியை, மதத்தை வைத்து ஒரு பக்கம் அரசியல் என்றால், அதற்குள் ரவுடியிசம், ஊழல் கலந்த உள்ளாட்சி நிர்வாகம், இதற்குள் பின்னிப்பிணைந்த பெரும்பான்மை ஜாதி உணர்வுகள், ஒருபுறம், மற்றொருபுறம் அதிகார பலம், ஆட்பலம், பண பலம் இதை வைத்து மிரட்டுவதால், சமூகம், வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படுவது அல்லது அவர்களுடைய முன்னேற்றம், அவர்களுக்கான உழைப்பின் அடிப்படையில் போய் சேராமல், ஊழலும், ரவுடியிசமும் அரசியல் கட்சிகளுக்குள் மறைமுகமாக தமிழ்நாட்டில் பின்னி பிணைந்துள்ளது.

இதை தடுக்க ஒரே வழி தமிழ்நாட்டிற்கு NIA உடனடியாக மாவட்டம் தோறும் காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும். பிற,கு அது தாலுக்கா அளவில் விரிவு படுத்த வேண்டும். அப்போதுதான், இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நேர்மையான நிர்வாகம், அரசியல் ரவுடிகளிடம் இருந்து ஒரு சுதந்திரம் பெற வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது .

அரசியல் கட்சி எதற்கு என்று அர்த்தம் தெரியாமல், கொடிப் பிடித்து கோஷம் போடுவதும், இவர்களுடைய கொள்கை விமர்சனங்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வதும், அல்லது இவர்களுடைய ஊழல்களை பட்டியலிட்டு பேசிக் கொண்டு உத்தமர்கள் வேஷம் போடுவதும், இதனால் யாருக்கு என்ன லாபம்? அப்படி போடுபவர்கள், செய்து காட்டுங்கள். தவிர, பொதுமக்களுக்கு அதனால் என்ன லாபம்? இவர்களுக்கு தான் அரசியல் வியாபாரத்தின் லாபம் .

மேலும், இவர்கள் சொல்வதை மக்கள் பத்திரிகை தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை பார்த்து தான் ஆறுதல் அடைய வேண்டும். ஆனால், அது படித்துப் பார்ப்பதற்கு தான். பயனடைவதற்கு அல்ல. இப்படி பல திட்டங்கள், சொன்ன வாக்குறுதிகள், எதுவுமே இல்லை. இந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

 அரசியல் என்பது சுயநலமாகிவிட்டது. அதனால் தான், வாக்காளர்களுக்கு பணமும், இலவசமும் கொடுக்கப்படுகிறது. மேலும், ரவுடிகளுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தவிர,நீங்கள் ஏன் ?தேடித்,தேடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? வாக்காளர்கள் உங்களை பணம் கேட்டார்களா? அல்லது இலவசத்தை கேட்டார்களா? எதுவுமே இல்லை .ஏன் கொடுத்தீர்கள்? எதற்காக கொடுக்கிறீர்கள்? இந்த கேள்வி சமூக ஆர்வலர்கள் முக்கிய கேள்வி ?

இனியாவது, தமிழ்நாட்டு அரசியலில் ரவுடியிசத்தை ஒழித்து, ஊழலை ஒழித்து, நேர்மையான அரசியல் நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என்றால், தமிழ் நாட்டிற்குNIA உடனடியாக மாவட்டம் தோறும் காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *