தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பதவிக்கு தான் அலைகிறார்களே ஒழிய, மக்களுக்கு சேவை செய்ய யாரும் அலைவதில்லை. இதற்கு யார் காரணம் ?இந்த மக்களின் அரசியல் அறியாமை தான் முக்கிய காரணம்.
இந்த அரசியலைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு வருடத்தில் ஒரு நாள் கூட, இந்த கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை, தொலைக்காட்சிகள் வெளிப்படுத்துவதில்லை. மேலும், அரசியல் கட்சிகளின் பொய்கள், இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளால் விளம்பரப்படுத்தப்படுகிறது. அதில் சொன்னால் பொய்யும் உண்மை என்று நம்ம முட்டாள்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டின் இப்படிப்பட்ட அரசியலும், ஊழல்வாதிகளையும், அரசியல் ரவுடிகளையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் ஒழிக்க முடியாது.
மக்கள் உண்மையை நோக்கி, உழைப்பை நோக்கி தங்கள் வாழ்க்கையில் பயணம் செய்பவர்கள் கூட, அவர்களுக்கு தங்கள் வாழ்க்கை மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு வருமானம் வருகிறது. நாம் நன்றாக சாப்பிடுகிறோம். யார் ஏக்கெடுக்கட்டு போனாலும் பரவாயில்லை. நாடாவது, அரசியலாவது எவன் வந்தால் என்ன? எவன் போனால் என்ன? இப்படிப்பட்ட மக்களும் இருக்கிறார்கள்.
இந்த மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் கடினம். தற்போது, மக்கள் அதிகாரம் படித்த அதிகாரிகள் மட்டத்தில், இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. எமது பத்திரிகையின் இணையதளமும், படித்த அல்லது தொடர்ந்து படித்து வருபவர்கள், இந்த அரசியலின் உண்மை நிலை என்ன? என்பது நிச்சயம் புரிந்து இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல பத்திரிகை ,தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர்களுக்கு கூட விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும்,எத்தனையோ படித்த இளைஞர்கள், அதிகாரிகள் இந்த அரசியலின் உண்மை தெரியாமல் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தேசத்தின் மீதும், நாட்டு நலன்கள் மீதும், கவலைப்படாமல் தங்களுடைய வாழ்க்கையை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு இல்லை. ஆனால், இதனுடைய பின் விளைவு உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவிலும் அது கலந்து இருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லை.
உங்கள் வாழ்க்கைக்கான ஒரு அங்கமாக தான் அரசியல் இருக்கிறது. அது போலியான அரசியல்வாதிகளிடமும், அவர்களின் பதவியில் எவ்வளவு அராஜகங்கள், அட்டூழியங்கள், தவறுகள் நடக்கிறது என்பதை இன்னும் சிந்திக்காமல் இருப்பதன் அர்த்தம் புரிந்ததா?
மேலும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நீ முட்டாளாக இருக்கும் வரை, அவர்கள் எஜமானாக தான் இருப்பார்கள். நீங்கள் எஜமானாளர்களாக ஆகிவிட்டால், அவர்கள் சேவை செய்ய வருபவர்கள் மட்டும் தான் அரசியலில் தாக்கிப் பிடிக்க முடியும். அதனால், மக்களுக்கு இந்த அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் ஒரு கடினமான வேலை. அதை தொடர்கிறது மக்கள் அதிகாரம் பத்திரிகையும் ,இணையதளமும் மேலும் பதவிக்கும், பணம் சம்பாதிப்பதற்கும் அலைகிறார்களே ஒழிய, மக்களின் நலனுக்காக, அவர்களுக்கு செய்வதற்காக ,அனைத்து கட்சிகளிலும் தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் பேராவது இருப்பார்களா? நான் சொல்வது உண்மை. இதை அரசியல் தெரிந்தவர்கள் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் .
மேலும், தமிழ்நாட்டில் ஒரு போலியான அரசியல் கௌரவத்தை ஏற்படுத்திக் கொண்டு ,வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கட்சிகளில் மாநில, பொறுப்பு, மாவட்ட பொறுப்பு ,கிளை, ஒன்றியம் இப்படி எல்லாம் பந்தா காட்டி கிராமங்களிலும், நகரங்களிலும், ஏமாற்றிக் கொண்டிருப்பது தான் இவர்களுடைய முக்கிய அரசியல் பணி.
மேலும், அரசியலில் மக்கள் பணி செய்ய வருபவர்கள் எப்போதும் அலைய மாட்டார்கள். அதிகம் பேச மாட்டார்கள் . ஏனென்றால், அது கடினமான பணி. தன்னுடைய உழைப்பை இங்கே தியாகம் செய்ய வேண்டும் .அதற்கு தகுதியானவர்கள் எத்தனை பேர் ?என்று ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், இருப்பவர்களை ஆய்வு செய்து பாருங்கள். உண்மை உங்களுக்கே புரியும்.
மேடைகளில் அரசியல் வசனங்களை பேசி நன்றாக நடித்து ஒரு கட்சியை பற்றி இன்னொரு கட்சி இன்னொரு கட்சியை பற்றி இன்னொரு கட்சி இப்படி குறை சொல்லி தவறுகளை ஊழல்களை பேசிய ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் தான் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அரசியல். இதையெல்லாம் விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிப்பது தான் பத்திரிகைகளின் வியாபாரம்.
அப்படி என்றால், இவர்களுடைய நிலை என்ன? இவர்களுக்கு ஓத்துஊதும் பத்திரிகை, தொலைக்காட்சி கம்பெனிகள் இருக்கும் வரை, நாம் பெரிய ஆளாக இந்த மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கலாம். ஆக கூடி அது எந்த அரசியல் கட்சியாக இருக்கட்டும், இவர்கள் தமிழ்நாட்டில் மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு பதிலாக, தங்கள் வீட்டுக்கு எவ்வளவு எடுத்துக் கொண்டு போகலாம்? இதுதான் முக்கிய டார்கெட் .
எந்த கட்சியில் போனால் பணம் சம்பாதிக்கலாம்? எந்த கட்சியில் போனால் பதவி வாங்கலாம்? எந்த கட்சியில் போனால் கோடிகளை சம்பாதிக்கலாம்? இந்த கனவுதான், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முக்கிய கனவு. அதனால் அரசியல் கட்சியும் ,ஆட்சி, அதிகாரமும் பற்றி எதுவும் தெரியாத மக்களிடம் அரசியல் செய்வது ,இவர்களுக்கு மிகவும் சுலபமாகிவிட்டது.
அதாவது ஒரு திருடனுக்கு வீட்டை திறந்து வைத்திருந்தால், அவன் எளிதில் திருடி கொண்டு போய் விடுவான். ஆனால், வீட்டை சுற்றி கேமராக்கள், பத்து பூட்டுகள், பல அறைகள் இருந்தால், அவன் திருடுவதற்கு கூட அச்சப்படுவான். நாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் அவனுக்குள் இருக்கும். அந்த பயம் எல்லாம் தமிழ்நாட்டு அரசியல் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளிடம் இல்லை.
ஏனென்றால், அவர்கள் பத்திரிகை என்றால், நம்மளை நல்லவர்களாக விளம்பரப்படுத்துவதற்கு மட்டும்தான் பத்திரிகை இருக்கிறது. நம்மளை பற்றி சொல்வதற்கு எந்த பத்திரிகையும் இல்லை. நாம் எப்படி ரவுடிசம் செய்தாலும், நம்முடைய கட்சியை வைத்து நாம் நல்லவர் என்று மேல் இடத்தில் இருந்து சொல்ல வைத்துக் கொள்ளலாம்.
மேலும், நம்முடைய காவல்துறையும், நமக்குத்தான் மரியாதை கொடுப்பார்கள். நாம் சொல்வது தான் அங்கே சட்டம். இப்படி எல்லாம் இந்த தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் இருந்து வருவது, வாக்காளர்களாகிய எஜமானர்கள், அரசியல் தெரியாத ஏமாளிகளாக இருப்பது தான் முக்கிய காரணம்.
அதனால், இந்த அரசியல் களத்தை படித்த இளைஞர்கள், நிச்சயம் படிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று மோசமான சூழ்நிலையில் தான் அரசியல் இருக்கிறது. இதில் மிகவும் குறைவான தவறு பண்ணக்கூடிய அரசியல்வாதி யார்? என்று தான் தேர்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் தமிழகம் தள்ளப்பட்டு இருக்கிறது.
அதனால், மக்கள் அதிகாரம் இணையதளத்தையும், பத்திரிகையும் தொடர்ந்து படித்து, இந்த அரசியல் விழிப்புணர்வை நீங்கள் பெற்று, உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் வளர்ச்சிக்கு, இந்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு, இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு, எப்படிப்பட்ட ஒரு அரசியல் கட்சி? எப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி? எப்படிப்பட்ட ஒரு அரசியல் தலைவர்? இருக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.
அதனால் படித்த இளைஞர்கள் எமது இணையதளத்தில் உள்ள மக்கள் அதிகாரம் (மீடியா டாட் காம்) makkaladikarammedia.com ல், வெளியிடும் இ.புக், இ.பேப்பர் மற்றும் தினசரி இணையதள செய்திகளை படித்து தெரிந்து கொள்ள உங்களுடைய செல்போன் நம்பர் மற்றும் இமெயில் முகவரி அதில் இணைத்து சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு :
ஒன்றுமில்லாத சிறிய விஷயத்தை பெரிதாக பேசிக்கொண்டு திசை திருப்பும் அரசியல்வாதிகளின் ஊடக பொய் விளம்பரத்தில் ஏமாறாதீர்கள், கடமைக்கு போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளின் போலி அரசியலுக்கு ஏமாறாதீர்கள், மேடைப்பேச்சு வீரர்களாக இருப்பவர்களிடம் ஏமாறாதீர்கள், தமிழ்நாட்டு ஊடகங்களில் மைக்கை பிடித்துக் கொண்டு, எதை பேசினாலும் அதில் உள்ள உண்மை என்ன என்று ஆய்வு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உண்மையை புரிந்து கொள்ளும் வரை, அவர்களுடைய அடிமை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
புரிந்து கொண்டால், அவர்கள் அடிமை. நீங்கள் எஜமானர்கள். எப்போது இந்த அரசியல் விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்படுகிறதோ, அப்போது நாட்டில் நல்லாட்சி மலரும்.
மக்கள் பணியில் என்றும் மக்கள் அதிகாரம். ஆசிரியர்.