தமிழ்நாட்டு மக்களின் அரசியல் நாடித்துடிப்பையும், ஊடகங்களின் நாடித்துடிப்பையும், உளவுத்துறை மூலம் பிஜேபி  மத்திய அரசு பார்க்கிறதா?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டு மக்களின் அரசியல் நாடித்துடிப்பு எப்படி உள்ளது?  என்பதை பிஜேபி ஒவ்வொரு நாளும் அதை பார்த்து வருகிறது. இன்றைய இளைய சமுதாயத்தின் அரசியல் நாடித்துடிப்பு என்ன?  பொதுமக்களின் அரசியல் நாடி துடிப்பு என்ன?  இங்குள்ள அரசியல் கட்சிகளின் நாடித்துடிப்பு என்ன?  இவை அனைத்தையும் உளவுத்துறை மூலம் பிஜேபி பார்த்து வருகிறது?

 பத்திரிக்கைகளின் செய்தி நாடித்துடிப்பு என்ன?  என்பதை பார்த்து வருகிறது. அதே போல், இங்கு உள்ள ஊடகங்களின் பால்ஸ் எந்தெந்த ஊடகங்கள் எப்படிப்பட்ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது?  மேலும், இதில் அரசியல் கட்சி சார்ந்தது எத்தனை? சமூக நலம் சார்ந்தது எத்தனை?  வியாபாரம் நோக்கம் சார்ந்தது எத்தனை? இவர் அத்தனையும் உளவுத்துறை மூலம் இந்த ஊடகங்களின் ஸ்டேட்டஸ் (Status) எடுக்க ஆரம்பித்துவிட்டது. இதை வைத்து தான் இங்கே அரசியல் சூழ்நிலை கணிக்க தொடங்கியுள்ளது.

அப்படிப்பட்ட அந்த சர்வே கணிப்பு அதிமுக, திமுகவிற்கு எதிராகவே அதிக அளவில் உள்ளது .பொய்யான கருத்துக்களை சொல்லி மீடியாக்கள் இனி மக்களை ஏமாற்ற முடியுமா ?   என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். அதேபோல் அரசியல் கட்சியினர் மக்களை பொய்களை சொல்லி திசை திருப்பி அரசியல் லாபம் காண முடியுமா?   அதுவும் இனி சிக்கல்தான் .மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

 மற்றொரு பக்கம் அரசியலை உற்று நோக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த ஆட்சியில் என்ன செய்தார்கள்?   மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்பதுதான் திமுகவின் தற்போதைய நிலைமை. இதை கார்ப்பரேட் மீடியாவால் சரி செய்து விட முடியுமா ?  அல்லது அதிகாரிகளால் தான் சரி செய்து விட முடியுமா?   நிச்சயம் யாராலும் முடியாது.மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். தெளிவற்ற அரசியல் புரியாதவர்கள் .சுயநல கூட்டங்களை காசு கொடுத்து விலைக்கு வாங்கலாம்

.அது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ,அவர்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. ஆனால், இன்று பெண்கள், பெண் குழந்தைகள், உழைக்கும் மக்கள் இவர்கள் அனைவரும் சொல்லுகின்ற கருத்து. இதுவரை, திமுகவின் ஆட்சி நிர்வாகம் மக்களுக்கு திருப்தி இல்லாத ஒன்றுதான் .இதை எப்படி திமுக சரி செய்யப் போகிறது?  மேலும், பிஜேபி தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அரசியல் செய்கிறது .அது அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, திமுகவின் ஊழல் பட்டியல் முதல் மணல் ஊழல்கள் வரை மக்களிடம் பேசப்படும் கருத்துக்கள் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. இவையெல்லாம் திமுகவிற்கு மைனஸ் பாயிண்ட்.

 மேலும், சென்னையில் பெய்த கனமழை மக்களுக்கு தேவையான தீர்வு இந்த அரசால் கொடுக்க முடியவில்லை,. தவிர, ஒரு இயற்கையின் பாதிப்பை எந்த அரசாங்கமும், உடனடியாக அதை சரி செய்ய முடியாது. அதற்கு நிச்சயம் காலதாமதம் ஆகும் .ஆனால், இவர்கள் பேசிய பேச்சு இவர்களுக்கு எதிராகவே வந்து நின்று விட்டது. அதாவது சென்னை மேயர் பிரியா 4000 கோடி செலவு செய்து கால்வாய் எல்லாம் சரி செய்து விட்டோம். இனி எங்கு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் நீர் வடிந்து விடும். இப்படி எல்லாம் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மக்களிடம் பேசப்பட்டது.

அதே போல், அமைச்சர் நேரு ,அமைச்சர் சேகர்பாபு மாற்றி, மாற்றி கருத்துக்களை பேசி மக்களிடம் தவறான ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்கள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது ,அவர்களுக்கு உணவு, உடை ,தங்குமிடம் இதைப் பற்றி சரியாக அரசு சார்பில் கொடுக்க முடியவில்லை. அடுத்தது தன் ஆர்வாளர்களை ஆவது இவர்கள்  உதவிக்கு அழைத்திருக்கலாம் .அதையும் சரியாக செய்யவில்லை.

இது தவிர, மத்திய அரசு உதவிகளை செய்ய காத்திருந்தது .அதற்காக கவர்னர் ஆர் .என். ரவி தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்தார் .அதையும் அலட்சியம் செய்து விட்டார்கள். ஏனென்றால், நாட்டின் கவர்னர் மத்திய அரசிடம் இருந்து எந்த உதவி வேண்டுமானாலும், உடனடியாக கேட்டு வாங்க முடியும் .மக்கள் பாதிக்கப்படும்போது ,அங்கு என்ன பிரஸ்டீஜ் வேண்டி கிடைக்கிறது ?

மேலும், நிதியை மட்டும் தான் கேட்டார்களே ஒழிய ,மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்க எந்த உதவியும் கேட்கவில்லை .இதனால் பாதிப்பு மக்களுக்கு தான் ஏற்பட்டது. அவர்கள் தான் பாதித்தார்கள். இதே நிலைமைதான், தென் மாவட்டங்களில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு முறையான, தேவையான நடவடிக்கைகள் இல்லை. இந்த வேதனையும் ,வெறுப்பும் , மக்களுக்கு இந்த ஆட்சி மீதும், கட்சி மீதும் வைத்திருந்த நம்பிக்கை வீணாகிவிட்டது. தவிர இந்த கட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் பேசிய பேச்சு, அரசியல் பழைய நினைப்பில் தான் எல்லோரும் இருந்து வருகிறார்கள் .மக்கள் மாற்றத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 தகுதியானவர்கள், செயல்பாடு கொடுப்பவர்கள், நேர்மையானவர்கள் இதை அரசியல் தெரிந்த சமூகம் எதிர்பார்க்கிறது. இது தவிர, ,இந்த அரசியல் கட்சிகள் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் ,இது நடக்குமா ?

 மக்கள் ஏமாந்து ,நொந்து ,இயற்கை அவர்களை படுத்திய கஷ்டங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது .அதனால், பிஜேபி தமிழ்நாட்டின் அரசியல் பல்ஸ் என்ன? என்பதை தெரிந்து கொண்டுள்ளது.

மேலும், எந்த அமைச்சரும் ஊழலில் சிக்காமல் இல்லை .இதற்கு விதிவிலக்கான ஒரு சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதில் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் ஒருவர். இது தவிர ,அமைச்சர் பொன்முடி வீர வசனம் எல்லாம் பேசி வந்தவர். பிஜேபியை கடுமையாக பேசியவர். அதை அரசியலாகவும் ,பேசிக் கொண்டிருந்தார். நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு பதவி பறிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆட்சி, நிர்வாகம் ஊழல் ஆட்சி என்று மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்கள். அதிமுகவின் எடப்பாடி ஆட்சி , நிலைமையை விட ,தற்போது அதிகப்படியாக திமுகவின் ஊழல் ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது.

 மக்கள் திமுகவிற்கு வாக்களித்ததின் ரகசியமே இதுதான். அதிமுக வாக்கு எல்லாம் திமுக விற்கு விழுந்தது. இந்த பர்சன்டேஜ் எடுத்து பார்த்தால் தெரியும். அதனால், மக்களிடம் ஏமாற்று அரசியல் இனி எடுபடுமா ?  என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது தவிர , திமுக ரவுடி யிசத்தால், மக்களை பயமுறுத்தி ஆட்சிக்கு ஆதரவாக ஒரு காலம் கொண்டு வர முடியாது. இவையெல்லாம் திமுகவிற்கு மைனைஸ் பாயிண்ட் அரசியல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *