தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகளையும், அரசியலையும் படிக்காமல், அரசியல்! நல்லாட்சியும், நல்ல நிர்வாகமும் ,மக்களுக்கான திட்டமும் செய்தது எந்த அரசியல் கட்சி? என்பதை உங்களால் தீர்மானிக்க முடியுமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள்.

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் பல அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியினர், பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள் இருக்கிறது. இதில் வெளியிடும் செய்திகள் எது உண்மை? எது பொய்? யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? இந்த ஒரு நிலைமையை தமிழ்நாட்டில் பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், சாமானிய பத்திரிகைகள் உருவாக்கி வைத்துள்ளது. இது ஒரு போட்டியாக இருந்தாலும், நோக்கம் எதை கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு முக்கிய கடமை பத்திரிகைகளுக்கு இருக்கிறது.

ஆனால், தனக்கு எதில் லாபம் வரும்? எந்த செய்தியை போட்டால் அதிகம் யார் பார்ப்பார்கள்? எந்த செய்தியை போட்டால் அரசாங்கத்தின் சலுகை, விளம்பரங்கள் நமக்கு கிடைக்கும்? இந்த சுயநலத்தில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருக்கிறது. இவர்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர்களா? என்பது தேட வேண்டி இருக்கிறது. அதனால், மக்கள் தான் விழிப்புடன் இந்த அரசியலை படிக்க வேண்டும். இங்கே அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பொதுமக்களுடைய வீக்னசை தெரிந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பிஜேபி, இந்த வாக்காளர்களின் விக்னஸை பயன்படுத்தி அவர்கள் அரசியல் செய்யவில்லை. இவர்கள் மக்களை இன்னும் நெருங்கவில்லை. பிஜேபி யில் உள்ள நிர்வாகிகள் மக்களை நெருங்கி, அவர்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும், அரசியல் களத்தில் இன்றும் நேரடியாக சந்திக்கவில்லை. அதிமுக, திமுக மீது உள்ள வெறுப்பு அரசியல் தான்,பிஜேபியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியும் அண்ணாமலை வந்த பிறகுதான் அதுவும் நடந்தது .

அதுவரையில் இங்கே இருக்கின்ற நிர்வாகிகள், நான் 50 வருடமாக இருக்கிறேன். 100 வருடமாக கட்சியில் இருக்கிறேன் .இப்படித்தான் இவர்களுக்குள் ஒரு ஈகோ போட்டி இந்த கட்சிக்குள் இருந்து வந்தது. .அண்ணாமலை கேட்ட ஒரே கேள்வி நீ எத்தனை வருடமாக இருந்தாலும், இந்த கட்சிக்காக செய்தது என்ன? உன்னுடைய செயல்பாடு என்ன? உன் பகுதியில் பிஜேபியின் வளர்ச்சி என்ன? இதை ஒவ்வொரு நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார்கள் .

மேலும் ,இதையெல்லாம் உடைத்து இந்த அளவிற்கு வந்தது, அண்ணாமலை  பேச்சாற்றல், தைரியம் .அது மட்டுமல்ல, இங்கே அதிமுக, திமுகவை எதிர்த்து அரசியல் செய்வது சாதாரண வேலை அல்ல. அவர்களுக்கு டப் கொடுத்து அரசியல் பேசியது, அவர்களுடைய ஊழல்களை அம்பலப்படுத்தியது ,இது அரசியல் தெரிந்தவர்களிடம் ,விஷயம் தெரிந்தவர்களிடம், சிந்திக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

ஆனால், எல்லா மக்களும் அப்படி இருப்பார்களா? இருக்க மாட்டார்கள். அதிமுக ,திமுகவில் உள்ள கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை ஒரு பகுதியில் அல்லது ஒரு ஏரியாவில், ஒரு நகரத்தில், ஒரு கிராமத்தில் நல்லது, கெட்டது எது நடந்தாலும், அவர்கள் கலந்து கொண்டு மாலை, மரியாதை, பணத்தை மொழியாக கவரில் போட்டுக் கொடுப்பார்கள். இப்படி எல்லாம் ஒரு பக்கம் கவர் பண்ணுவதும், மற்றொரு பக்கம் அவர்களுடைய தேவைகளை அல்லது பிரச்சனைகளை பொதுமக்கள் கொண்டு செல்லும்போது, காசு வாங்கிக்கொண்டு வேலை செய்வார்கள் .

இங்கே எதுவும் செய்ய மாட்டார்கள். அதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள். எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் போன் செய்தால் கூட அதை கூட எடுக்காத மாநில, மாவட்ட நிர்வாகிகள் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் இருந்தால், தமிழ்நாட்டில் எப்படி பிஜேபி ஆட்சியைப் பிடித்து விடும்? மோடி செய்தது, இந்திய மக்கள் அனைவரும் வரவேற்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது .ஆனால், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மோடி என்ன செய்தார்? என்று மேடைக்கு, மேடை பேசுகிறார். இவரைப் பார்த்து உதயநிதி மற்றும் இவருடைய கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்.

 மோடி என்ன செய்தார்? மோடி செய்ததில் கால் பாகம் கூட இவர்கள் செய்யவில்லை.மோடி ஆட்சியில் செய்தது என்ன? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களுக்கு செய்தது என்ன? இதை இரண்டையும் பட்டியல் போட்டு பாருங்கள். உண்மை மக்களுக்கே புரியும். இவர் என்ன செய்தார்? என்பதை இந்த மக்கள் கேள்வி கேட்கவில்லை. வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது .வாயிலே வடை சுட்டு கொண்டு,பொய்களையும், பொய்யான தேர்தல் வாக்குறுதிகளையும், பேசுவதை நம்முடையகார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் அதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவர் செய்த நல்லதை விட ,தீமைகள் தான் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. அதை எல்லாம் பட்டியல் போட்டால் அசிங்கமாக இருக்கிறது. ஏனென்றால், இங்கே பத்திரிகை, தொலைக்காட்சிகள் சுயநலமாக இருக்கிறது. பொது நலமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் இல்லை. எனக்கு திமுக ஆட்சியால் லாபம் இருந்தால், நான் அவரை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருப்பேன்.ஆனால், சமூக அக்கறையுடன், சமூக நலன் கருதி வெளிவரும் பத்திரிகைகள் எத்தனை ?என்று எனக்கே தெரியவில்லை. 

மேலும், எங்களுடைய கோரிக்கைகள் பற்றி பிஜேபி நிர்வாகிகள் இடம் எடுத்துச் சென்றால், அது என்ன என்று கூட அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை .ஒரு முறை அண்ணாமலையாவது அண்ணே இதை 30,000, 40,000 பிரதிகளை நம்முடைய மக்களிடம் கொண்டு செல்வோம் என்று முதல் முதலில் வந்த வேகத்தில் அவர் சொன்னது .அதன் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. போன் செய்தாலும் பி ஏ கள் கூட எடுத்து பதில் சொல்வதில்லை. தவிர,இப் பிரச்சனை பற்றி, இணையதளத்தின் மூலம் மோடிக்கு அனுப்பிய ஒரு கடிதம் நேரடியாக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு, அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து இது பற்றி தெளிவான, விளக்கமான கருத்துக்களை தெரிவியுங்கள் என்று பதில் வந்தது. அதற்கு பதிலும் கொடுத்துள்ளேன். இன்னும், அதற்கான இறுதி முடிவு பதில் எதுவும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் இருந்து வரவில்லை . 

இதை ஏன் சொல்கிறேன்? என்றால் தமிழ்நாட்டில் பிஜேபி நிர்வாகிகள் இவ்வளவு பேர் இருந்தும் ,அதைப் பற்றி என்ன, ஏது என்று கூட கேட்க இவர்களுக்கு மனசு இல்லையா? அல்லது இவர்கள் எல்லாம் ஒரு பத்திரிகையா என்று அலட்சியமா? என்பது புரியவில்லை. ஆனால், டெல்லியில் இருந்து மோடி அது சாமானிய பத்திரிக்கையாக இருந்தாலும், அதற்கும் ஒரு மதிப்பு, மரியாதை கொடுத்து நடவடிக்கை எடுக்க, எங்களுடைய கோரிக்கை நியாயமான கோரிக்கை, அதற்கு எங்கு தீர்வு காண வேண்டும்? என்பதற்கு அங்கே அனுப்பி வைத்துள்ளார். அதற்காக மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு நன்றியுடன் சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் வரவேற்கிறேன்.

 அவருடைய இந்த தேசப்பணி, இந்தியாவில் உள்ள எந்த முதலமைச்சரும், எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் ,அவரிடத்தை நெருங்க முடியாது. மோடி மீண்டும் பிரதமராக வருவார். இந்த நாட்டு மக்களுக்கு, அவருடைய தன்னலமற்ற சேவை வேற யாரும் செய்ய முடியாது. அவர் தன் குடும்பத்திற்காக, எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அப்படி இருந்தும் அதானி, அம்பானியுடன் மோடியை இணைத்து பேசுகிறார்கள். இந்த சுயநல கார்ப்பரேட் ஊடகங்களுக்கு இவ்வளவு சலுகை, விளம்பரங்கள் கொடுத்தது மிகப்பெரிய தவறு. அதுமட்டுமல்ல, 

எங்களைப் போன்ற பத்திரிகைகள் வளர்ச்சியடைய கூடாது என்று இவர்கள் தொடர்ந்து ஆட்சியாளர்களிடம் மறைமுக அரசியல் செய்து வருகிறார்கள். அவர்கள் என்ன தவறு செய்தாலும், அவையெல்லாம் மக்களுக்கு நல்லது என்று பாராட்டிக் கொண்டு, ஏமாற்றிக் கொண்டு தமிழ்நாட்டை குட்டிச் சுவராக இருக்கிறார்கள். காரணம் உண்மை மக்களுக்கு தெரியவில்லை. நேற்று கூட ஆட்டோ ஓட்டுனர் இடம் பேசியபோது ,நான் சீமானுக்கு தான் ஓட்டு போடுவேன் என்கிறார். என்னையா என்று கேட்டேன். சீமான் நன்றாக பேசுகிறார். மோடி நான் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஹிந்தி காரனை எதிர்த்து சீமான் குரல் கொடுக்கிறார்.

இவருக்கு சீமானை பற்றி தெரிந்தது அவ்வளவுதான். சீமானுக்கு எப்படி பணம் வருகிறது? எப்படி கட்சி நடத்துகிறார்? இதுவரை சீமான் செய்தது என்ன? எதுவும் தெரியாது .இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் தெரியாமல், இந்த அரசியல் பொய்களை பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை இவர்களுக்கு புரிய வைப்பது மிகவும் கடினம். ஏனென்றால், இந்த மக்கள் சுயநலமாக இருக்கிறார்கள்.

 பொதுநலம் என்றால் என்ன ?சுயநலம் என்றால் என்ன? எதுவும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பொதுநலமும், சுயநலமும் பற்றி பாடம் எடுக்க வேண்டும். அப்போதாவது தெரிந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை . இவர்களுக்கு ஏற்றார் போல் பேசிக்கொண்டு, இவர்களுடைய பொறாமை ,சுயநலம் அதற்கு தகுந்தார் போல் சீமானுடைய பேச்சு, நடிப்பு இருக்கும். அது மட்டுமல்ல, இவர்கள் பேசும்போது கைதட்டுவதற்கும் ,விசில் அடிப்பதற்கும் அதற்கென்று ஒரு கூட்டத்தை பணம் கொடுத்து கூட்டி வந்து இருப்பார்களா?

 அவர்களுக்கு அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? ஆட்சி நிர்வாகம் என்றால் என்ன? எதுவும் தெரியாது. எது பேசினாலும் கைதட்டி, விசில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கூட்டங்களை எல்லாம் நம்பி விலைமதிப்பற்ற, உங்கள் வாக்கை அவர்களுக்கு அளித்தால், அது எங்கே போய் உங்கள் வாழ்க்கையை கொண்டு சேர்ப்பார்கள்? என்பது தெரியவில்லை .அதனால்,வருங்கால இளைய தலைமுறைகள்,இதைப் பற்றி படிக்காமலும் ,தெரிந்து கொள்ளாமலும், நீங்கள் சினிமாவின் மயக்கத்திலும், செல்போன் வாழ்க்கையிலும், உழைப்பை அலட்சியம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால், இப்படிப்பட்ட ஒண்ணுமே இல்லாத வெத்து வெட்டு அரசியல் கட்சிகளிடமும், கட்சிக்காரர்களிடமும் ஏமாந்து போவீர்கள்.மேலும்,

பாரதிய ஜனதா கட்சியில் எல் .முருகனுக்கு செய்தித்துறை இணை அமைச்சராக பதவி கொடுத்தது மிகப்பெரிய வீண். மோடி இவர் என்ன செய்தார்? என்பதை கேட்கவில்லை. இவருக்கும் பலமுறை தொலைபேசியில் கேட்டிருக்கிறேன் .பதிலே வராது .இப்படிப்பட்டவர்கள் என்ன மாற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்? என்பதை புரிந்து நிர்வாகிகளை பணி அமர்த்த வேண்டும் . தவிர, எனக்குத் தெரிந்த சில அரசு அதிகாரி நண்பர்கள் இவரைப் பற்றி சொல்வார்கள். ராஜேந்திரன் நீங்களாவது எங்களிடம் உட்கார்ந்து பேசுகிறீர்கள்.

 முருகனை உட்கார சொன்னால் கூட உட்கார மாட்டார். கை கட்டி நின்று கொண்டிருப்பார். அப்படி இருந்தவருடைய நிலைமை எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகையாளர்கள் போன் செய்தால் கூட, இவருடைய மந்திரி பதவி பதில் சொல்ல அலட்சியம் காட்டி வந்துள்ளது. இவருக்கு மக்கள் வாக்களித்து  மந்திரி ஆக்கவில்லை .ஏதோ மோடி தெரியாமல் கொடுத்துவிட்டார் .அதைக் கூட சரியாக மக்களுக்கு பயன்படுத்தவில்லை. அது மட்டுமல்ல, ஆறு மாத காலம் ஒருவருடைய வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். பதவி வந்ததும் அவர்களை கூட இவர் மதிக்கவில்லை.

 இவர் எப்படி பொதுமக்களுக்கு நல்லது செய்வார் ?அதனால் தான்பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு இவர் தலைவராக நியமித்துக் கூட, எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை .ஆனால், அண்ணாமலையின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் கட்சியில் உள்குத்து வேலை செய்து வருவதாக தகவல்கள் வருகிறது .இதையெல்லாம் மோடி சரி செய்தால்தான், தமிழ்நாட்டில் வருங்காலத்தில் ஆவது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். 

மேலும், உண்மையை மக்களிடம் சொல்ல கூடிய பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் குறைந்து விட்டார்கள். நாங்கள் பத்திரிக்கைக்கு வந்த காலத்தில், பத்திரிகை கவுரவத்திற்காக இருந்தது. இப்போது பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் பணம் சம்பாதிப்பதற்காக இருக்கிறது. அதனால், உண்மையைப் பற்றி மக்கள் தான் தெரிந்து கொள்ள அரசியலை படிக்க வேண்டும் .அரசியல் கட்சிகளை படிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது வாக்காளர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும் ஏமாற்றப்படுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *