தமிழ் நாட்டின் அரசியல் மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதால் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அதைப் பற்றி சிந்திப்பது அவசியமா ?

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியல் என்பது இன்று மக்களிடம் ஏமாற்றுப் பேச்சுகள் ஆகிவிட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை. அரசியல் என்பது சுயநலமா ?அல்லது பொது நலமா? தெரியாதவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

 அது மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சியிலும் எவ்வளவு ரவுடிகள் இருக்கிறார்கள்? என்பதை கணக்கெடுத்தால், இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள்? ஏன் வந்திருக்கிறார்கள்? என்பதை மக்களுக்கு இன்னும் புரியவில்லை.

மக்களுக்கு சர்வீஸ் செய்ய வருபவர்கள் ஏன் ரவுடிகளை கட்சிக்குள் கொண்டு வருகிறார்கள்? அவர்களுக்கு ஏன் கட்சியில் பெரும் பொறுப்புகளை கொடுக்கிறார்கள் ? ஏன் மிரட்டல்களை, வாக்களித்த மக்களிடமே அதை காட்ட வேண்டும்? கட்சி என்பது இவர்களை பொருளாதாரத்தில் பலப்படுத்திக் கொள்ளவா? அல்லது மக்களுக்காக சமூக சேவையாற்றவா? அது தெரியாமல் இன்றைய அரசியல் கட்சிகள் முதல் ஜாதி கட்சி, மதம் சார்ந்த கட்சிகள் வரை சேவை செய்யாமலே, வாயிலே வல்லவர்களாக, நல்லவர்களாக, நடத்தையில் உயர்ந்தவர்களாக, சமூகத்தில் கௌரவம் மிக்கவர்களாக ,இவர்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைய அரசியல் கட்சிகளில் சுயநலவாதிகள், ரவுடிகள், சமூக அக்கறை இல்லாதவர்கள், ஊரை அடித்து உலையில் போடுபவர்கள், ஊர் வம்பு செய்பவர்கள், அடுத்தவனை கெடுப்பவர்கள், ஊர் சொத்துக்களை அபகரிப்பவர்கள், ஏமாற்றுபவர்கள் ,அடாவடி பேர்வழிகள், ஊழல்வாதிகள், சமூக குற்றவாளிகள், தேச துரோகிகள், சட்டத்தை ஏமாற்றுபவர்கள், மனசாட்சி இல்லாதவர்கள், இவர்கள்தான் அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் நம்தமிழ்நாட்டு ஊடகங்கள் மக்களிடம் காட்டி பெரிதாக கொண்டிருக்கிறது.

தெரியாத மக்களுக்கு என்ன சொல்ல வேண்டும்? புரியாத மக்களுக்கு எப்படி புரிய வைக்க வேண்டும்? என்பது கூட தெரியாமல், இன்று பெரிய ஊடகங்கள் என்று அவர்களை, அந்த கூட்டத்தை பெரிதுபடுத்தி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் சும்மா இல்லை. அவர்களை, வைத்து காசு சம்பாதிக்கிறார்கள்.இப்படி எல்லாம் பார்த்து மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஏமாற்றத்தில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும். உண்மையை சிந்தியுங்கள், உண்மையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 மேலும், தேர்தல் நேரத்தில் இவர்களுக்கு பிரியாணி ,குவாட்டரும் வாங்கி கொடுத்தால் போதும் என்ற ஒரு கீழ்த்தரமான நிலைக்கு, இந்த மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் .இந்த குவாட்டரும், பிரியாணியும், சாப்பிட்டுவிட்டு, உங்களுடைய பிள்ளைகள் ,அவர்களுடைய வருங்கால வாழ்க்கை பற்றி யாரும்சிந்திப்பது இல்லை. அந்த நேரத்திற்கு இலவசமாக பணமும், பொருளும், அதுவும் பிரியாணி மட்டுமே நினைக்கிறார்களே ஒழிய, பிறகு இந்த பிள்ளைகளுடைய எதிர்காலம் என்ன ஆகும் ?என்பதை பற்றி யாரும் சிந்திப்பது இல்லை .

மேலும், அந்தப் பிள்ளைகளை கல்விக்காக கஷ்டப்பட்டு உழைத்து ,அவனை படிக்க வைத்து, அவன் ஒரு நல்ல வேலைக்கு செல்வான் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை இன்றைய அரசியல் கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறது. அது எல்லோருக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இல்லாவிட்டாலும், தனியார் நிறுவனங்கள் ஏதாவது படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும்.

 அதுவும் இல்லை என்றால், அவர்கள் எதிர்காலம் என்னவாகும்? அவர்கள் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டு, கஷ்டப்படுவார்கள். அதனால், ஒவ்வொருவரும் தமிழ்நாட்டு மக்கள், இனி எந்த கட்சி என்பதை விட, அவர் என்ன தகுதியானவர்? அவர் யார்? அவர்கள் சமூக அக்கறை உள்ளவரா? அல்லது மக்களுக்காக பணியாற்ற கூடியவரா?

 பணம் கொடுத்துவிட்டு ,அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் வந்து சந்திப்பவரா ?இதையெல்லாம் யோசிக்காமல், வாக்களித்து ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏமாறுவது மட்டுமல்ல, வருங்கால சந்ததியும் ஏமாந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி தயவு கூர்ந்து சிந்தியுங்கள். உங்கள் வருங்கால சந்ததிகளை பற்றி எல்லோரும், அவர்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள் .

இதுவரையில், இந்த சுயநல அதிமுக ,திமுக அரசியல் கட்சியின் ,அரசியல்வாதிகள் 50 ஆண்டு காலமாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ன செய்தார்கள்? 7 லட்சம் கோடி கடன், 8 லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இதையெல்லாம் அவர்களுடைய சொத்து விவரங்களை எடுத்து, பிரதமர் மோடி அதிமுக, திமுகவின் அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள், எம்பிக்கள், இவர்களிடமிருந்து, தமிழ்நாட்டை கடனை அடைக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற ஒரு முக்கிய கருத்து.

 யார் யாரெல்லாம் எப்போது ஆட்சி செய்தார்களோ, அவர்களில் கணக்கு எவ்வளவு கடன் கணக்கு ?அந்த கடனுக்கு தகுந்தவாறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ,என்று திமுக, அதிமுகவினரிடமிருந்து, வசூல் செய்து அந்த கடனை அடைக்க வேண்டும். மேலும், ஆட்சி என்பது அவர்களுக்காக தான் இருக்கிறதே ஒழிய, மக்களுக்காக ஒருபோதும் இல்லை. கட்சி என்பது இவர்களுக்கு சுயநலமாகிவிட்டது .ஒரு பக்கம் குடும்பம்.

மற்றொரு பக்கம் அவரவர் குடும்பம், ஓட்டு போட்டுவிட்டு, இன்று மக்கள் ஒவ்வொருவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிந்திப்பவர்கள் எல்லாம் இது என்ன ஆட்சியா? என்ற கேள்வி ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ,எல்லா அரசியல் கட்சியும், தமிழ்நாட்டில் பேசிக்கொண்டு ,கூறிக்கொண்டு மீடியாக்களில் கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே ஒழிய, சமூக அக்கறைக்காக பாடுபடும் எந்த அரசியல் கட்சி என்று இப்போது தேட வேண்டி இருக்கிறது?

 அதனால், தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அரசியல் கட்சிகள் தான், இப்படி என்றால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு பின்னால் இருக்கின்ற அமைப்புகள், அவர்கள் ஒரு பக்கம் கூறிக்கொண்டு, கருத்து சொல்லிக் கொண்டு, இந்த மக்களை ஏமாற்ற என்னென்ன வழி எல்லாம் இருக்கிறதோ, அந்த வழியெல்லாம் பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இன்றைய கால சூழ்நிலை அதிக அளவில் ஒத்துழைக்கிறது.

 இன்றைய யூடியூப் சேனல்கள் ,பேஸ்புக் ,வாட்ஸ் அப் கள், எல்லாவற்றையும் பார்த்து எளிதில் ஏமாந்து விடாதீர்கள். இவர்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது .மனசாட்சி இல்லாத அரசியல்வாதிகளுக்கு இந்த மக்கள் மனசாட்சி இல்லாமல், நீங்கள் வாக்களித்தால் நிச்சயம் அதற்குரிய தண்டனை உங்களுக்கு உண்டு. அந்த தண்டனை தான் எல்லோரும் 5 வருடம் அனுபவிக்க வேண்டிய ஒரு தண்டனை.

 அதனால் யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? என்று சிந்திக்காமல் வாக்களிக்காதீர்கள் .இந்த வாக்கு உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் உயர்வுக்கான வாக்காக தேர்வு செய்து வாக்களியுங்கள். அப்போதுதான் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, வருங்கால இளைய தலைமுறைகளின் வாழ்க்கையும், பிரகாசமாக இருக்கும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *