தமிழ் நாட்டில் பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தமிழ் நாட்டு மக்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவிப்பாரா ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மே 13, 2024 • Makkal Adhikaram

youtube சேனல்கள் பத்திரிக்கையில் வரவில்லை என்றாலும், கருத்து சுதந்திரம் சொல்வதற்கு உரிமை உண்டு. அதை இல்லை என்று மறுக்க முடியாது .இங்கே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை சொன்னால் சுதந்திரம் உண்டு. ஆளும் கட்சிக்கு எதிராக கருத்துக்களை சொன்னால், அதற்கு உரிமை இல்லை. காவல்துறை வைத்து வழக்கு போடுவது, இந்த சட்டத்தின் மீது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கே கருத்துரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் காவல் துறை மீறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சி காலத்தில் நடந்தது ஸ்டாலின் ஆட்சியில் நடக்கிறதா ?

ஒரு பக்கம் ஆளுங் கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள் அதைப்பற்றி விமர்சனம் செய்வது, சவுக்கு சங்கர் இந்த தவறு செய்தார் என்று பொய்களை சேர்த்து கூறி வருகிறார்கள். இங்கே சவுக்கு சங்கர் செய்த குற்றம் என்ன? அவர் கஞ்சா விற்றாரா? அல்லது காவல்துறையை பற்றி பேசிய ஒரு கருத்துக்காக அவரை குண்டாஸில் போட்டு விடுவார்களா? இந்த நாட்டில் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள், காவல்துறையை கை நீட்டி அடித்தால் கூட உதை வாங்கிக் கொண்டு வழக்கு கொடுத்த அந்த காவல்துறை பெண்மணியை வாபஸ் வாங்க வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் திருவண்ணாமலை கோயிலில் நடந்த ஒரு சம்பவம். இது பத்திரிகையில் வந்தது. மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.

ஆனால்,சவுக்கு சங்கர் யாரையும் அடிக்கவில்லை. ஏதோ வாயில் பேசி இருக்கிறார். அது தவறா? சரியா? என்பது சட்டப்படி அவருக்கு என்ன தண்டனையோ, அதை கொடுக்கலாம் .அது தவறில்லை. ஆனால், காவல்துறையை சேர்ந்த பெண்மணியை அடித்து விட்டு, அவர் மீது எந்த வழக்கும் போடாத வரை அதிகாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் பேசியதற்கு இங்கே குண்டாஸ் போடுகிறார்கள் என்றால், இது எப்படி காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ?நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு ? 

மேலும், சவுக்கு சங்கர் திமுகவினரையும், ஸ்டாலினையும் அவர் குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்துள்ளார். அது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த உண்மை. அதில் நான் புதியதாக எதுவும் சேர்க்கப் போவதில்லை. ஆனால் ,இங்கே சட்டப் படி ஜனநாயகத்தின் ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்பதை  உச்ச நீதிமன்ற நீதி அரசர் சந்திர சூட் தான் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் . ஏனென்றால்,  எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களே குழப்பத்தில் இருக்கிறோம். அதை தெளிவுபடுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் அவர்களுக்கு உள்ளது. 

மேலும், காவல்துறை நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும், எந்த பொய் வழக்கு போட்டு விடலாம். யாரை வேண்டுமானாலும், கைது செய்துவிடலாம். ஆனால், மூன்றாண்டு காலமாக போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை ஏன் பிடிக்கவில்லை . அவன் மீது எந்த புகாரும் பதியவில்லை. அவன் தாராளமாக வெளிநாடுகளுக்கு எல்லாம் போதைப் பொருள் கடத்தி வந்துள்ளான் .அப்போது இங்கே காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது ? டெல்லி காவல்துறை ஜாபர் சாதிக்கு பிடித்தது .மேலும்,

நாட்டில் கஞ்சா பழக்கம் அதிகரித்து இருக்கிறது .அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை .சவுக்கு சங்கர் 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்தான் என்று வழக்கு போடுகிறார்கள். மிக, மிக கேவலமாக இருக்கிறது காவல்துறையின் நடவடிக்கைகள். இதற்கெல்லாம் நிச்சயம் நீதிமன்றத்தில் மக்களின் சமூக பிரச்சனைகளுக்காக தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது . பத்திரிக்கை என்பது கூலிக்கு மாரடைக்கும் வேலை அல்ல. இது சமூகப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற வேலை. இதில், காவல் துறையின் ஒத்துழைப்பு அவசியம் இருக்க வேண்டும். காவல்துறை ஆட்சியாளர்களின் அடிமையாக இருந்தால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவது கேவலம். 

ஏனென்றால், மக்களுடைய வரிப்பணத்தில் தான் காவல்துறை சம்பளம் வாங்குகிறார்கள் .அவர்களுக்கு விசுவாசமாக, நம்பிக்கைக்கு உரியவர்களாக காவல்துறை இருக்க வேண்டும். இப்படி எல்லாம் பொய் வழக்கு போடுவது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், உங்களுக்கும் அரசியல் கட்சி ரவுடிகளுக்கும் என்ன வித்தியாசம்? என்பதை மக்கள் கேள்வி கேட்பார்கள்? சமூக நலன் ஆர்வலர்கள் கேள்வி கேட்பார்கள்? எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் காவல்துறை இருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஏதோ கூலிக்கு மாரடைக்கின்ற பத்திரிகைகள், பெரிய தொலைக்காட்சிகள், பெரிய பத்திரிகைகள் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. மக்கள் பார்க்க வேண்டியது உண்மை மட்டும்தான். நியாயத்தை மட்டும் பாருங்கள். அநியாயத்திற்கு துணை போக வேண்டாம் .அநியாயத்திற்கு துணை போய் இன்று ஸ்டாலின் ஆட்சியில் ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுக்க வேண்டும் என்றால் ஐந்து ரூபாய் ஆக்கிவிட்டு இருக்கிறார்கள் .எவ்வளவு கொடுமை? 50 காசு இருந்தது இன்று ஐந்து ரூபாய் என்கிறார்கள்.

 கேட்டால் கடைக்காரர் கரண்ட் பில் பன்னிரண்டாயிரம் கட்டுகிறேன் சார் என்கிறார். நான் யாரை நொந்துக் கொள்வது ? கடைக்காரணையா? அல்லது ஸ்டாலினையா? காவல்துறையா? எத்தனை நாளைக்கு இந்த ஆட்சி ,அதிகாரம்? என்ற மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த காவல்துறை காப்பாற்றுகிறதோ, இல்லையோ, மக்களை தெய்வ சக்தியை தான் காப்பாற்ற வேண்டும். இந்த நாட்டின் இறை சக்தி தான் இவர்களுக்கு  கூலி கொடுக்க வேண்டும்.மேலும்,

போலி பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் என்று அட்டையை தொங்க வைத்துக் கொண்டு, மக்களுக்கு காட்டிக்கொண்டு இருப்பதால், இந்த சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. இது போன்ற அநியாயங்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அதனால்,உச்சநீதிமன்றமாவது இந்த உண்மையை திரும்பிப் பார்க்குமா ? உண்மையை சொல்ல வேண்டியது எங்கள் கடமை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *