தலைமைச் செயலகத்தில் உள்ள செக்யூரிட்டிகள்! யார் வந்தாலும், யார் போனாலும், அதிக பில்டப் செய்கிறார்கள். அதிலும் ,பத்திரிகை அடையாள அட்டை காண்பித்தால் கூட ,அவர்களையும் வரிசையில் நிற்க வைத்து தடவி தான் அனுப்பி வைக்கிறார்கள். மேலும், சாதாரண பொது மக்களுக்கு ஏகப்பட்ட கேடி, பிடிகள்.இது தவிர,
அங்கு வேலை செய்யக்கூடிய அதிகாரிகளுக்கும் ,வெளியில் இருந்து வரும் அரசு அதிகாரிகளுக்கும், இதே நிலைமைதான். இது பொது மக்களையும், பத்திரிகையாளர்களையும் சமூக குற்றவாளி போல் பார்க்கப்படுவது இவர்களுடைய அதிகார வரம்பு மீறிய செயல் .
அதிகாரத்தில் இருந்து கொண்டு பல தவறுகளை செய்து கொண்டிருப்பவர்களின் நிலைமை வெளிவந்து கொண்டிருக்கிறது. சாதாரண பொதுமக்களும் ,பத்திரிகையாளர்களும், அரசு அதிகாரிகளும் தலைமைச் செயலகத்தின் உள்ளே செல்லும்போது ,எத்தனை கேள்விகள்? எத்தனை சோதனைகள்?
இது பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு ,செய்தித்துறை இயக்குனர் மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கையாளர்களின் கோரிக்கை.