தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமானப்படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார் .
மேலும் மற்ற மாவட்டங்களில் இருந்து 18 லாரிகள் மூலம் உணவுப் பொட்டலங்கள் கொண்டுவரும் பணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் . வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் ,களப்பணியில் இறங்கி உள்ளனர் .இதில் ஏற்கனவே 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தவிர, தமிழக அரசு சார்பாக மக்களுக்கு என்ன தேவையோ ,அதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் ,செய்து வருவதாக தெரிவித்ததோடு, வெள்ள நீரில் சிக்கி உள்ள மக்களை மீட்க படகுகள், உணவு பொருட்கள், குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறோம் .இதற்காக தென் மாவட்டங்களில் சுமார் 500 படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.