
அதிமுகவில் எம் ஜி ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியின் தலைவர் யார்?என்ற கேள்விக்குறி நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை.
ஒரு குடும்பம் போன்றது தான் ஒரு அரசியல் கட்சியும், அதாவது குடும்பத்தில் உள்ள தலைவன் இறந்து விட்டால்,அந்த குடும்பத்தில் எல்லோரும் சம உரிமை எடுத்துக் கொள்வார்கள். அப்பா இருக்கும் வரை அந்த குடும்பத்தில் எந்த மகனையும், எந்த மகளையும் கேட்க மாட்டார்.

அதுவே தந்தை இறந்த பிறகு 5 பேர் அண்ணன், தம்பிகள், அக்கா,தங்கைகள் இருக்கிறார்கள் என்றால், அந்த குடும்பத்தில் எல்லோருக்கும் சம உரிமை வந்து விடுகிறது. எந்த வேலை செய்ய வேண்டும் என்றாலும், இந்த ஐந்து பேரும் கலந்து பேச வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது. இதுதான் தற்போதைய அதிமுகவின் நிலைமை.
ஆனால்,இங்கே எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அவருக்கு தற்காலிகமாக பொதுச் செயலாளர் பதவி கட்சியினர் கொடுத்து விட்டார்கள். அந்த சீட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அதிமுக கட்சியை எம்ஜிஆர் ஜெயலலிதாவின் வாரிசு போல பேசிக் கொண்டிருக்கிறார்.

கட்சியில் இவருடைய ஆரம்ப நிலை என்ன? அதன் பிறகு இவருக்கு யாரால் பதவி கிடைத்தது? எப்படி கிடைத்தது?வரைக்கும் அதிமுக கட்சியினருக்கும் தெரியும்.தமிழக மக்களுக்கும் தெரியும். இப்படி இருக்கும் போது ஒரு சர்வாதிகாரப் போக்கில் அதிமுகவை வழி நடத்திக் கொண்டிருந்தார். மேலும்,
அதிமுகவில் சசிகலாவின் பங்கு, டிடிவி தினகரன் பங்கு, ஓபிஎஸ் பங்கு, சிவி சண்முகம் பங்கு, கொங்கு மண்டலத்தில் உள்ள தங்கமணி,வேலுமணி இத்தனை பேரின் பங்கும் அங்கே அதில் உள்ளது. ஆனால்,இவர் ஒருவரே அதிமுகவின் வாரிசு என்று ஜெயலலிதா இறந்த பிறகு பஸ்ஸிலும், ரயிலிலும் சீட்டு கிடைத்து விட்டால் பயணம் செய்யும்போது ஏதோ விலைக்கு வாங்கிவிட்டது போல, பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படிதான் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர்,
அதிமுகவில் கிடைத்த இந்த பொது செயலாளர் சீட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டு வருகிறார் என்கின்றனர் அதிமுக கட்சியினர். தவிர,அதிமுக கட்சியை இவர் சொந்த சுயநலத்துக்கு மாற்றிவிட்டார். பலமுறை இந்த கட்சிக்குள் பேசப்பட்ட கருத்துக்கள் வெளிவராமல் உட்கட்சி பிரச்சனையாகவே ஓடிக்கொண்டிருந்தது. தற்போது சசிகலா சாட்டையை மறைமுகமாக சுழற்ற ஆரம்பித்து விட்டார். பதவி கொடுத்தது சசிகலாவிடம்,எடப்பாடி பழனிசாமியை, டிடிவி தினகரன் ரெக்கமண்டேசன் செய்யவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் கிடையாது.

மேலும்,சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழுந்து காலையே வாரிவிட்ட மிகப் பெரிய கிரிமினல் தான் பழனிசாமி என்கிறது அரசியல் வட்டாரம். தவிர,சசிகலா! ஜெயலலிதா இருக்கும் வரை எவ்வளவு பவர்ஃபுல்லாக இருந்தார்? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். இப்போது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், அந்தப் பக்கம் வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் எல்லோரும் ஒட்டு மொத்தமாக பழனிசாமிக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் பழனிசாமியின் கதை கட்சியில் வேலைக்காகாது.
இவர்கள் சொல்வதை தான் அவர் கேட்டாக வேண்டும். இப்போது அவரவர் சொந்த செல்வாக்கை பயன்படுத்தி ஒட்டுமொத்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்ட ஆரம்பித்து விட்டார்களாம்.

மேலும்,இந்த கட்சி சசிகலா இருக்கும் தலைமையை நோக்கி தான் நகருமே தவிர எடப்பாடி பழனிசாமி நோக்கி நகரமா? என்பது கேள்விக்குறி தான். இப்போது அதிமுக இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது. ஒரு பக்கம் செங்கோட்டையன் மத்தியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். மற்றொரு பக்கம் சசிகலா உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாக சந்தித்து வருகிறார். வேலுமணி, தங்கமணி ஒரு பக்கம் சந்திக்கிறார்கள். சிவி சண்முகம் ஒரு பக்கம் சந்திக்கிறார்.

இப்படி ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள் பிஜேபி தலைவர்களை சந்தித்து வருவதால் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார நிலை எடுபடாது. ஒருவேளை இவர்கள் ஒட்டுமொத்தமாக இவரை தூக்கி விட்டு வேறு யாராவது தலைமை ஏற்கவோ அல்லது கூட்டு தலைமை உருவாக்கவோ அக் கட்சியில் திட்டமிடுவதாக தெரியவரும் தகவல்.
இது ஒரு புறம் ஒரு வேலை நடக்காமல் போனால்,கட்சி உடையும் அபாயமும் இருக்கிறது. மேலும், அதிமுகவில் மிகப்பெரிய அதிகாரப்போட்டி உருவாகி அது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் அதிமுகவில் இல்லை. அதனால்,கட்சி ஒரு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் பிஜேபி அதிமுக நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? என்பதுதான் அதிமுக கட்சியின் எதிர்காலம் !!!!!.