தவெக தலைவர் விஜய் NDA கூட்டணியில் சேராமல், அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை – அரசியல் ஆய்வாளர்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, என் டி ஏ கூட்டணியில் சேர்வது ,அவருடைய எதிர்கால அரசியலுக்கு மிகவும் நல்லது.

இவருக்கு அரசியல் என்பது இன்னும் புரிதல் இல்லாமல் தான், இருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி, ஆதாவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், இவர்கள் சொல்லக்கூடிய சிறுபான்மை வாக்கு வாங்க முடியாது என்பதெல்லாம் ஒரு தவறான கணிப்பு.

மேலும்,அதேபோல் லயோலா கல்லூரி தேர்தல் சர்வே கணிப்பு, Times Now சர்வே கணிப்பு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கணிப்பு ,இவை எதுவுமே சரியாக வராது. அது மட்டுமல்ல, திமுக பணத்தால் ஜெயிக்கலாம் என்ற நோக்கத்தில் இந்த2026 சட்டமன்ற தேர்தலை நம்பி இருக்கிறது. இது தவிர, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பணத்தைக் கொடுத்து, அவர்களை விலைக்கு வாங்க திட்டம் போட்டு செயல்படுகிறது.

மேலும்,இந்த ஐந்தாண்டுகளில் உருப்படியாக இவர்கள் செய்த திட்டங்கள் என்ன? அதனால், மக்கள் அடைந்த பயன்கள் என்ன? இவர்கள் சொல்லும் பொய்களை இவர்களுடைய பத்திரிகை, தொலைக்காட்சிகளும், இவர்களுக்கு ஆதரவான பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் முட்டு கொடுத்து பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.

அதாவது அவர்கள் கட்சிக்காரன் எப்படியும் பேசுவது போல, இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளும் அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும்,அதுக்கு பத்திரிக்கை, தொலைக்காட்சி என்ற பெயர் தேவையில்லை. தவிர,பத்திரிக்கை, தொலைக்காட்சி என்றால், நடுநிலையோடு உண்மையை சொல்வது தான் பத்திரிகை, தொலைக்காட்சி. மேலும்,இது எப்படி நான்காவது தூணாகும்? இதுதான் சமூக நலன் பத்திரிகைகள் கேள்வி?

இதற்கும் மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் வீணடிக்கப்படுகிறது. மக்கள் அதிகாரம் இதை பலமுறை மக்களுக்கும், பத்திரிக்கை துறைக்கும், செய்தி துறைக்கும், தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், விஜய் தமிழ்நாட்டின் நலன் கருதி, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால், NDA கூட்டணியில் சேர்வது தான் ஒரே வழி. அது மட்டுமல்ல, உங்களிடத்தில் சரியான தேர்தல் வியூக வகுப்பாளர்களும் இல்லை. ஆலோசகர்களும் இல்லை. உங்களுடைய அரசியல் கட்சியினர் அதற்கு ஏற்ற தகுதியும் ,திறமையும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களும், இல்லை. ஒரு வேட்பாளர் கூட பெயர் தெரியாதவர்கள் தான் இருக்கிறார்கள்.

மேலும்,உங்களுடைய ஒரு தனிப்பட்ட செல்வாக்கு தான் தமிழக வெற்றி கழகம். அதனால், இதில் உள்ள மைனஸ் யாருமே சொல்ல மாட்டார்கள். மேலும், விஜயகாந்த் எப்படி தனித்து நின்று ,அவர் ஒருவர் மட்டுமே ஜெயித்தாரோ ,அதேபோல் தான் இருக்கும். நீங்கள் ஓட்டுக்களை பிரிக்கலாம். சுமார் ஒரு 15 சதவீத வாக்குகள் பிரிக்க முடியும்.

அதனால், அது திமுகவுக்கு லாபமா? அல்லது அதிமுக ,பாஜக கூட்டணிக்கு லாபமா? என்று கூட இப்போது அதை கணிக்க முடியாது. மேலும்,மக்களின் போராட்டங்கள், எதிர்பார்ப்புகள், பாதுகாப்புக்கள், விலைவாசி உயர்வுகள், இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் ஊழல் நிர்வாகம், இப்படி பல்வேறு பிரச்சனைகள், திமுக ஆட்சியில் ,தமிழக மக்களை ஐந்து ஆண்டுகளாக காயப்படுத்தி ,அதன் வடுக்கள் ஆறாமல் வேதனையில் இருந்து வருகிறார்கள்.

அதனால், முதலமைச்சர் கனவு ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் வந்த உடனே யாருமே முதலமைச்சராக ஆகவில்லை. மேலும்,எம்ஜிஆர் பற்றி பேசுபவர்கள் கூட ,எம்ஜிஆர் 40 ஆண்டு காலம் அரசியலில் தொடர்ந்து அவர் எம்எல்ஏ ,எம்எல்சி ,கட்சிப் பொறுப்பு, எத்தனையோ அனுபவித்து அதனுடைய நெளிவு, சுளிவுகள் அத்தனையும் தெரிந்து தான் அவர் கட்சி ஆரம்பித்தார். தவிர,அவர் கட்சி ஆரம்பித்து ஓரிரு வருடத்தில் ஆட்சிக்கு வரவில்லை. 1967 இல் அஇஅதிமுக கட்சி ஆரம்பித்தார். 1977 இல் ஆட்சிக்கு வந்தார்.

அதனால், அரசியல் வரலாறு தெரியாமல், பேசி உங்களை ஏமாற்றுகின்ற அரசியல் கட்சியினர் ஒரு பக்கம், ஜோசியர்கள் ஒரு பக்கம், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி ஒரு பக்கம், இத்தனையும் தாண்டி ,உங்கள் நன்மைக்காக ,தமிழக மக்களின் நன்மைக்காக, கூட்டணியில் சேர்வது, தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்கால அரசியல்! ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *