திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதில் நாட்களை கடத்தினால் வலியுடன் நோயாளிகள் தாங்க முடியுமா ?

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 01, 2024 • Makkal Adhikaram

திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகள் செல்லும் போது உடனடியாக ஓரிரு நிமிஷத்தில் பதிவு செய்ய வேண்டிய முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாமல், ஆதார், குடும்ப அட்டை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறுநாள் வர சொல்லும்போது, அந்த நோயாளிகள் நோயின் வலியின் வேதனையுடன் தாங்கிக் கொண்டு மறுநாள் வருகிறார்கள் . 

இது பற்றி தொழில்நுட்பம் இருந்தும், இப்படிப்பட்ட பிரச்சனை சரி செய்ய முடியாமல் மருத்துவர்கள் அலட்சியம் செய்து வருகிறார்கள். ஒருவருடைய ஆதார், குடும்ப அட்டையை வைத்து ஒரு சில நிமிஷத்தில் செய்ய வேண்டிய பணியை நாளை கடத்துகிறார்கள்.

அது மட்டுமல்ல, இதற்கு 500 ரூபாய் பணம் வசூலிக்கிறார்கள். ஒரு அரசாங்கம் பதிவு செய்வதற்கு கூட ,கட்டணம் வசூலிப்பது மிக மிக கேவலமான ஒன்று. இந்த வேலை செய்யும் இடத்தில் தற்காலிக பணியாளர்களை அரசு நியமித்திருப்பது நோயாளிகளை அலட்சியம் செய்யும் வேலை. மேலும், திமுக அரசின் நிர்வாகம் எல்லாவற்றிலுமே தோல்வியை ஏற்படுத்தும் நிர்வாகமாக தான் இருக்கிறது.

மேலும், இது எந்த அளவுக்கு (இந்த சிடி ஸ்கேன்) ரிப்போர்ட் மக்களுக்கு விரைவாக கிடைத்தால்,இதன் மூலம்  நோயின் தன்மை மற்றும் அதன் நிலை அறிந்து நோயாளிகள் மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்,ஆனால் இங்கே ஸ்கேன் எடுப்பதற்கு ,அதை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கு நாட்களைக் கடத்தினால், நோயாளிகள் அந்த வலி வேதனையுடன் தாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று மறுபடியும் மறுநாள் வர வேண்டுமா?

 இப்படி அலட்சியம் செய்யும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ,டாக்டர்கள் இந்த சிறிய பிரச்சினையை இவர்களால் சரி செய்ய முடியாதா? என சமூக ஆர்வலர் கணேசன் வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *